பீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா! கொள்வதா ? யார் இந்த peta பீட்டா , அல்லது பீட்டா என்றால் என்ன , இன்றைய தினத்தில் மிகவும் குழப்பமான அல்லது எல்லோராலும் எதிர் கொள்ள கூடிய பெயர் பீட்டா Peta.
கொஞ்சம் பின் நோக்கி யார் இவர்கள் இவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று பார்ப்போமா ?
பீட்டா Peta. என்ற தன் ஆர்வ தொண்டு நிறுவனத்தை
(Ingrid Newkirk) இந்டக்ரிட் நெவ்கிர்க் மற்றொருவர் Alex Pacheco என்ற’ இரண்டு பெண்மணிகள் 1980 நிறுவுகின்றனர்,உருவாக்கும்போது அதனுடைய நோக்கம் என்ன, மிருக வதையை தடுக்கவும் மற்றும் மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்வதை தடுக்க உருவாக்கப் பட்டது.
இதன் தலைமையகம் அமெரிக்காவில் நியூ யார்க்கில் உள்ளது. இந்தத் தன் ஆர்வ அமைப்புதான் இன்று இந்தியா வில் உள்ள தமிழகத்தில் நடக்கும் சல்லி கட்டுக்கு (ஜல்லி கட்டு) உயர் நீதி மன்றத்தில் தடை வாங்கியது.
நமது கேள்வி என்னெவென்றால் peta இதையெல்லம் செய்வதற்கு தகுதியானதா என்பது தான் நமது கேள்வி,பீட்டா என்கின்ற அமைப்பு உருவானதற்கு கரணம் வேண்டுமானால் மிருகங்களைப் பாதுகாக்க இருக்கலாம்,ஆனால் பீட்டா வளர்ந்ததற்க்கு அல்லது மேலும் வளர்வதற்கு அதுவல்ல கரணம்,ஏன் என்றால் இன்று பீட்டாவை எதிர்க்கும் பல சமூக ஆர்வலர்கள் சொல்லும் கரணம் என்னவென்றால்? பீட்டா ஒரு பன் நோக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் கூட்டாளி, அதாவது மிகப்பெரிய நிறுவனங்கள் பணத்தை தண்ணியாகச் சிலவு செய்து, தொண்டு நிறுவனம் என்ற பெயரில் தனக்காக உருவாக்கி வைத்து இருக்கும் ஒரு ஆயுதம்.
Who Is This Peta
அதற்க்கு உதவி செய்வது ஏதோ ஒரு சின்ன சின்ன நிறுவனங்களோ அல்லது தனி பட்ட நபர்களோ அல்ல, பீட்டா வுக்கு பின்பு மிகப்பெரிய வியாபாரம் அரசியல் இருக்கிறது.
எமது கேள்வியெல்லாம் ஜல்லி கட்டை தடை செய்யச் சொல்லி முன் நிற்கும் நீ யார் மற்றும் உனது நண்பர்கள் யார்,
வெறும் இந்த இரண்டு கேள்வியை வைத்துக் கொண்டு நாம் சிந்தித்து பார்த்தாள் இதற்குப் பின்பு இருக்கும் வியாபாரம் புரிந்து விடும்,
பீட்டா ஜல்லிக்கட்டை தடை செய்தால் அதற்கு லாபம் என்ன? சிறுசா ஓன்றும் கிடையாது யாருக்கும் தெரியாத ஒரு விஷயமும் இல்லை
ஏன் பீட்டா நல்லது தானே செய்கிறது மிருக வதையை தடுப்பது நல்லது தானே என்று நீங்கள் யேசிப்பது நியாம் தான்
பீட்டாவினுடைய செயல்பாடு நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அப்படி தான் தோணும்
ஆனால் அதன் செயல் பாடுகளை உற்று நோக்கினால் அதில் இருக்கும் வியாபார தந்திரம் உங்களுக்குப் புரிய வரும்
அதாவது தனி ஒருவன் கணக்கு பீட்டா எந்த நாட்டில் உருவாக்கப் பட்டது அமெரிக்கா அமெரிக்காவின் முக்கிய அரசியல் என்ன உலகத்துக்கே பெரிய அண்ணன் போல்செயல்பட்டு எல்லா நாட்டிலும் சமாதானம் உலக அமைதி என்று பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் உலக ஆயுத உற்பத்தியில் முதலிடம் வகிப்பது
நமக்கு அமெரிக்காவை பார்த்து கேட்கத் தோன்றும் ஒரு கேள்வி என்னெவென்றால் நீ உலக அமைதியை விரும்பினால் முதலில் ஆயுதம் உற்பத்தி செய்வதை அல்ல வா முதலில் நிறுத்த வேண்டும்
அமெரிக்கா அப்படி செய்வதில்லையே உலகத்துக்கே ஒரு தாதா அல்லது ரௌடி போலச் செயல் பட்டு என்னவோ உலக அமைதிக்கான தூதுவர்போல் செயல் பட்டு எங்கே தனுக்கு சாதகம் இல்லையோ அந்த நாட்டில் அமைதியை நிலை நட்டு கின்றேன் என்ற போரவையில் இரு நட்டு க்கும் சண்டையைத் தூண்டி விட்டு அந்த இருநாட்டுக்கும் ஆயுதம் விற்கும் பெரிய பேட்டை ரௌடிதான் அமெரிக்கா
, அதனுடைய செல்ல வளர்ப்பு பிராணிதான் பீட்டா ஆகவே அமெரிக்காவின் நோக்கம் எல்லாம் பீட்டாவை வைத்துத் தனது நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு என்ன தடையாக இருக்குதோ அதைச் சட்ட பூர்வமான முறையில் சாதித்து கொள்ள தான் பீட்டா வை வளர்த்து வருகிறது அல்லது பீட்டாவை உருவாக்கியது அமெரிக்கா
, இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்குமே இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் இன்று பீட்டாவின் அதிகார பூர்வா செயல்கல் எல்லமே தனது அமெரிக்க நிருவனத்திற்கு சாதகமாக அமையும்படிதான் இருக்கும், எப்படி என்று இன்னும் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க
, அதாவது பீட்டாவின் நோக்கம் மிருக வதையை தடுப்பது தான் என்று வைத்துக் கொள்வோம் , நியாய படி மிருக வதை இல்லாமல் ஒரு பசு எப்படியொரு நாட்டின் மனிதர்களில் வாழ்விலும் உணர்விலும் இரண்டற கழுந்து ஒரு குடும்ப உறுப்பினராக அல்லது ஒருகுழந்தையை போல் அதற்கும் மேல் ஒரு தெய்வமாக எப்படி தமிழர்களால் கொண்டாட படுகிறது என்று தானே இந்தத் தமிழர்களை அடையாளம் காட்டி இருக்கணும் இந்த பீட்டா Peta
ஆனால் அப்படி செய்யாமல் பீட்டா பசு வதை மிருகவதை என்று பிதற்று வதேன்,
இங்கே தான் பீட்டா வின் உண்மையான வேலை ஆரம்பம் ஆகிறது புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் மருந்து என்ற பெயரில் ரசாயனம் எனும் பெயரில் கிடத்தட்ட விஷத்தைச் சாப்பிடும் நிலையில் தான் நாம் இருக்கிறோம் இயற்கை விவசாயம் தானே நல்லது ஏன் நாம் மருந்தைப் பயன் படுத்த வேண்டும்?
. அதாவது அதிக மகசூல் சாம்பல் சத்து சுண்ணம்பு சத்து என்று வெளிநாட்டு ரசாயன உரத்திற்கும் நிறுவனம்களிற்கும் பசுமை புரட்சி எனும் பெயரில் நமது விவசாயத்தையும் விசாயிகளையும் அடிமை ஆக்கி விட்டது போல் அதன் அடுத்த கட்டமாக நமது நாட்டு மாடுகளின் இன அழிப்பிற்கு வித்திடும் வேலையை இந்த அமெரிக்கா பீட்டா சரியாகச் செய்கிறது
, நாட்டு மாடு இல்லாமல் போனால் ,அடுத்ததாகத் தனது கலப்பின மாட்டை இந்திய சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக விற்கலாம்
அதற்க்கு ஜல்லிக்கட்டு தடை என்பது ஒரு ஆரம்பம் தான் அதன் பின்பு படி படியாகத் தனது எல்லையை விரிவு படுத்தி கொண்டே போகும் இந்த அமெரிக்க கார்ப்பரேட் கைக்கூலி
அதற்க்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களும் பீட்டா போடும் எலும்பைப் பொரிக்கி கொண்டு செயல் படுகின்றனர்
பீட்டா வின் செயல்பாடுகள் பொய் என்றும் அது கார்ப்பரேட்டுகளின் கை கூலி என்றும் எப்படி சொல்ல முடிகிறது என்று கேட்டால் இன்று பீட்டா வின் ஒரு பக்கம் தான் நம்மக்கு தெரிகிறது அதாவது மிருக வதையை தடுப்பது எனும் பெயரில் அது கொன்று குவித்த அப்பாவி பிராணிகள் ஜீவன்கள் ஆயிர கணக்கில் இல்லை லட்ச கணக்கில் இருக்கும் அதற்க்கு ஆதாரம் இதோ அதன் இன்னொரு முகம்.
பல்வேறு காரணத்திற்காவும் பல்வேறு தேவைகளுக்கவும் peta எனும் பேட்டை ரௌடி கொன்று குவித்த உயிர்கள் ஏராளம்
ஜல்லி கட்டு நடக்கும் போது எந்த காளையாவது ரத்தம் சிந்தி யாராவது பார்த்த ஆதாரம் இருக்கிறதா அல்லது ஜல்லிக்கட்டில் காளையுடன் மோதும் ஆன் கையில் ஆயுதம் ஏந்தி சென்று இருக்கிறானா காளையிடம் தான் ஆயிதம் இருக்கும் அதாவது கொம்பு எனும் எங்கள் காளையர் வெறும் கையுடன் தான் மோதுவர் அது எழுத படாத விதி காளையுடன் மோதுவோர்தான் ரத்தம் சிந்துவர்
இப்போது சொல்லுங்கள் இந்த ஆபத்து நிறைந்த இந்த மிருகத்தை நமது தமிழகத்தை விட்டு விரட்டுவது நியாயம் தானே?
உலகமெங்கும் நடக்கும் பீட்டாவின் மிருகவதை மற்றும் பீட்டா நடத்தும் மிருக கொலைகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ள உங்களுக்கு இங்கே ஒரு இணையத்தை அறிமுக படுத்து கிறேன் இங்கே உங்களது இ மெயில் முகவரியை கொடுத்து உங்களை இணைத்து கொள்ளவும் நன்றி
Syed Abutahir Chennai,