- மெரினாவில் நடக்கவிருந்த மத கலவரம் ஒன்று மக்களின் ஒற்றுமையால் நடக்காமல் தடுக்க பட்டுள்ளது மெரினா புரட்சி அல்லது ஜல்லிக்கட்டு புரட்சி என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்
- ஆனால் அதில் பங்கேற்றவர்களில் உணர்வு ஒரே புள்ளியில் தான் இருந்தது அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் எந்த வித மத சயமோ அல்லது ஜாதிகளின் பெயர்சொல்லியோ கலந்து கொள்ளவில்லை,
- எல்லா மதத்தினரும் ஜாதியினரும் கலந்துகொணடனர் போராடினர் ஆனால் சில கருப்பு ஆடுகள் அதில் உள்ளே இருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது
- இந்திய தேசிய லீக் கட்சி தொண்டரை கைது செய்ய வேண்டும் என நேரிடையாக சொல்லாமல் இந்த வாகனம் ஓட்டியவரை கைது செய்யுங்கள் என சிலர் பரப்புரை செய்கின்றனர்…
இந்த இருசக்கர வாகனம் இந்திய தேசிய லீக் கட்சி தொண்டருடையது தான்
இந்த இருசக்கர வாகனம் BJP RSS தொண்டர்களுடையது இல்லை…இதை பலமுறை முகநூலில் செய்தி போட்டாச்சு
இந்த பதிவு போட்டவர்களிடம் அலை பேசியிலும் தொடர்பு கொண்டு பதிவை நீக்க சொல்லி பல முறை முயன்றும் பலன் இல்லை
காவல் துறை இந்த வாகனம் இந்திய தேசிய லீக் கட்சி தொண்டருடையது என முதல்வருக்கு தகவல் கொடுத்து முதல்வர் சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்…
பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நடந்த போது எடுத்த புகைப்படத்தை பிஜேபி எச்.ராஜா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்தது என பதிவு போட்டு சர்ச்சையை ஏற்படுதியதை …
இந்திய தேசிய லீக் கட்சி மீது வன்மம் கொண்ட சில சகோதர அமைப்பு தலைவர்கள் எங்களை நேரிடையாக எதிர்க்க முடியாமல் தங்களின் தொண்டர்கள் மூலம் இந்த பிரச்சனையை பெரிது படுத்தி உள்ளனர் ..
BJP RSS அமைப்புகளை எதிர்க்க பல வழிகள் இருந்தும் இந்த பொய்யான செய்தியை பரப்பி இந்திய தேசிய லீக் கட்சியை அழிக்கலாம் என நினைக்கின்றனர் …
அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் நம்மை வந்து அடையாது … - தற்பொழுது இந்தியதேசிய லீக் கட்சி… தலைவர் தடா J ரஹீம் வெளியிட்ட தகவல்
மத கலவரம் மத கலவரம் மத கலவரம்
.- மத்திய அமைச்சரின் பேச்சை கேலி செய்து ஒருவர் பதிவு இது
- போராட்டக்களத்தில் அவர்கள் ஏன் தொழுகை நடத்தினர்? – பொன்.ராதாகிருஷ்ணன்.
- அவனுக்குத் தமிழன் என்ற உணர்வு இருக்கு. அதனால் வர்றான் அய்யாசாமி
- உங்க கும்பலுக்கு இந்தியன் என்கிற உணர்வு தவிர ஏதும் இல்லையே அய்யாசாமி
- டேஷ் பக்தி மட்டும் போதாது. மொழிப்பற்று கொஞ்சமாவது வேணும் அய்யாசாமி
- இந்தி சம்ஸ்கிருதம் எனச் சட்டி தூக்கிட்டு இருக்கிற உங்க கும்பலுக்குத் தமிழோட அருமை எப்படி தெரியும் அய்யாசாமி!
- அங்க முருகன் கோவிலுக்கு மாலை போட்டவனும் வந்திருந்தான் அய்யாசாமி.
- அவனுக்கு கோவிலுக்குப் போனா சந்தோசம்.
சிலுவை போட்டவன் வந்திருந்தான் அய்யாசாமி.
அவனுக்குச் சர்ச் போய்க் கும்பிட்டா சந்தோசம். - முஸ்லீம் வந்திருந்தான். அவனுக்கு மேற்கு திசையே கோவில் தான் அய்யாசாமி.
- அவன் மசூதிக்குத் தனியா போகாம அங்கேயே தொழுதானே அய்யாசாமி.
அவனவன் பார்வையில் இருக்குது அய்யாசாமி.
அங்கே மாலை போட்டவனும், சிலுவை போட்டவனும் சேர்ந்து தான், குல்லா போட்டவனும் தொழுகை நடத்த ஏற்பாடு பண்ணினாங்க. - அது அவங்க ஒற்றுமை அய்யாசாமி.
அது உங்களை மாதிரி கழிசடைகளுக்கு பிடிக்காது அய்யாசாமி.
திருடுன பிரியாணி அண்டாவை உங்க க்ரூப் இன்னும் திருப்பித் தரல அய்யாசாமி
#ஆனந்த்குமார்_சித்தன்