எங்க ஸ்டேட் கர்நாடகாவுல சிலபல வருஷம் முந்தி பீஜேப்பீ பவர்ல இருந்தாங்க. அந்த டைம்ல, எடியூரப்பா, சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டர்னு மூணு சீஎம்கள் இருந்தாங்க. அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள் பிடிக்காம, அடுத்த எலக்ஷனில் காங்கிரஸ் ஜெயிச்சி, சித்தராமய்யா முதல்வர் ஆனார். கடந்த மூணரை வருஷமா அவர்தான் சீ.எம். பீஜேப்பீ ரூலில் சிலபல ஆட்கள் பண்ணிய டுபாக்கூர்களும் காரணம். ஜனார்த்தன் ரெட்டி ஒரு உதாரணம்.
என்ன திருகுதாளம் போட்டாலும் டமில்நாட் போல வராது. பீஜேப்பீல வந்த மூணு பேருமேகூடப் பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவங்க. ஆனால் டமில்நாட்ல அதெல்லாம் தேவையில்ல போலன்னு இப்போ தெரிஞ்சிட்டதால, இவங்கல்லாம் செம்ம காண்டுல இருக்காங்க. டமில்நாட்ல சி.எம் ஆக என்னன்ன தகுதிகள் வேணும்னு யோசிச்சா, கட்டாயம் பீஹார்தான் நினைவு வரும். பீஹார் பத்தி, ட்ரெய்ன்ல ஆடு கோழியெல்லாம் ஏத்துவாங்க, மொக்க ஊர்ன்னு இப்போகூட பலரும் பேசுவாங்க. அரசியலிலும் அதேதான்.
இருந்தாலும், என்னதான் தலைகீழா தண்ணி குடிச்சாலும், அரசியலில் டமில்நாட் போல வராது. சினிமா, இலக்கியம் இந்த ரெண்டுலயும் நம்மூரு எந்த நிலைல இருக்குன்னு ஒலகத்துக்கே தெரியும். அரசியலிலும் அப்படித்தான் இருந்திச்சு. ஆனால் இலைமறை காய்மறையா. இப்போதான் வெளிப்படையா வெடிச்சி சிதறிருக்கு.
மொத்தமா எல்லாத்துலயும் ஊத்தி மூடியிருக்கும் டமில்நாட்டைப் பார்த்து, இதெல்லாம் போனமாசமே நடக்கும்னு எதிர்பார்த்தேன். அதுல ஒரு குட்டியூண்டு ஏமாற்றம்.
களப்பிரர் காலம் பத்திப் படிச்சிருப்பீங்க. இதோ அதையெல்லாம் பார்த்து அனுபவிக்கும் காலம். சுக்ஹானுபவம்.
இவண்ணம், கன்னடிக டமிலன் சென்தேள் சென்காயிரம்