தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்
தமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்
நேற்று ஆப்பிரிக்க நாட்டில் கென்யாவில் இருந்து ஒரு தமிழர் பேசினார்
அவர் மெய்சிலிர்க்க சொன்ன ஒரு செய்தி என்னவென்றால்
இந்தியர்கள் என்று இங்கே யாரை சந்தித்தாலும் அவர்கள் என் பெயரைக் கேட்டு விட்டு ஆர்வமாகப் பார்ப்பார்கள் நான் பெயரைச் சொன்னவுடன் அவ்வளவுதானா சர்நேம் பின்னொட்டுப் பெயர் என்ன என்று கேட்பார்கள்
சாதியைத்தேடியவன் விலகிச்சென்றுவிடுவான்
எனக்கு பின்னொட்டுப் பெயர் இல்லை என்று சொன்ன உடனே ஒரு பரபரப்புடன் வேறு சில கேள்விகளைக் கேட்டு என் பரம்பரையை துப்பறிவார்கள் கடைசியில் ஏன் உங்கள் மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் எல்லாம் இப்படியே சொல்கிறீர்கள் என்று ஒரு எரிச்சலுடன் கேட்பார்கள் என்ன எரிச்சல் என் சாதி என்ன என்று தெரிந்து கொள்ள முடியாத எரிச்சல் தான். அவர்களுக்குத்தான் மனிதரை மனிதராக இந்தியராகப் பார்த்துப் பழக்கம் இல்லையே
அந்த சின்னத்தனமான முயற்சி வெற்றி பெற முடியாததால் ஏற்படும் கோபத்தை பார்த்து நான் சிரித்து கொண்டே சொல்வேன் உங்கள் அத்தனை மாநிலத்திலும் இல்லாத ஒரு இயக்கம் எங்கள் நாட்டில் 1912 இல் பிறந்துவிட்டது. உன்பெயரைத்தவிர சாதிகளால் அடையாளப்படுத்திக் கொள்வது கேவலம் என்று எங்களை உணரவைத்த ஒரு தலைவர் இருந்தார்.அவர் பெயர் பெரியார் என்று சொல்வேன்
அதன்பின் சாதியைத்தேடியவன் விலகிச்சென்றுவிடுவான் மனிதனை தமிழனை இந்தியனை தேடியவர்கள் நண்பராகி விடுவார்கள் என்றார்
அடுத்த நாள் இந்த விளம்பரம் பார்த்தேன்
மருத்துவர்.இராமதாசு அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தினார் அந்த பயிற்சி வகுப்புகளில் திராவிட அரசியல் கட்சிகள் செய்யத்தவறிய கொள்கைத்திட்டங்களைப் பற்றிய வகுப்புகள் அதிகமாக இருக்கும் நானும் சில வகுப்புகள் எடுத்தேன்
தேர்தல் அரசியல் யாரை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்று புரியாமல் போனது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் நாட்டை ஒரு நூற்றாண்டு பின்னால் தள்ளும் இந்த வேலையை அவர் முன்னெடுத்திருப்பது அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக