கொலையாளியை கவுரவிக்கும் சங்க்பரிவார் அமைப்புகள்!
ராஜஸ்தானில் கூலித் தொழிலாளியை எரித்து கொன்ற கொலையாளியை ராமநவமியில் அலங்கார வாகனம் அமைத்து கவுரவிக்கும் சங்க்பரிவார் அமைப்புகள்!
ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலம், மால்டாவைச் சேர்ந்த முகமது அஃப்ராசுலை, இந்துத்துவா அமைப்பை சேர்ந்த சம்புலால் ரேகர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி அடித்துக் கொலை செய்து, தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக குற்றவாளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது விசாரணையில் அது பொய் என தெரியவந்தது
இந்நிலையில், இதில் மிகவும் மோசமான சம்பவமாக, கடந்த வாரம் ஜோத்பூரில் நடைபெற்ற ராம நவமியில் சம்புலால் ரேகரை கவுரவிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரால் அவரை பெருமைப் படுத்தும் விதத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அலங்கார ஊர்திதான்
இந்து கடவுள் ராமர் பிறந்த தினத்தில் உலகம் முழுவதும் ராம நவமி பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது
கூலி தொழிலாளி முகமது அஃப்ராசுலை கொன்ற சம்புலால் ரேகரை கவுரவிக்கும் வகையில் அவனை போன்று ஆடை அணிந்து, கோடாரியை கொண்டிருப்பவர் ஊர்தியில் அமர செய்யப்பட்டு ஊர்வலம் சென்று உள்ளது
இத்தகைய வெறியூட்டப்பட்ட இந்துத்துவா பயங்கரவாதிகளின் ஊர்வலத்தை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளது காவல்துறை
களந்தை செல்வன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக