இன்னைக்கு ஆஸிஃபாங்குற 8 வயசு இஸ்லாமிய குழந்தை கோயில் கருவறைக்குள்ளயே ராமனுக்கு பிறந்தவனுங்களால துள்ள,துடிக்க வண்புணர்வுக்குள்ளாகி கொல செய்யப்பட்ட செய்தி கெடச்சதும் தோழர்கள் சிலபேரு கடவுளுக்கு கண்ணில்லையா!? கடவுள் என்ன வெளக்கு புடிச்சாரா னு கேக்குறதெல்லாம் பாத்து சிரிக்கவா, அழவானு தெரியல
ஏன்னா சூத்திரன் சம்பூகன கழுத்தறுத்த கடவுள்,சூர்பணகையின் முலைகளையும்,மூக்கையும் அறுத்த கடவுள்,சூத்திர ஆஸிஃபா வன்புணர்வுக்கு உள்ளாகும் போது மட்டும் ஓடோடி வந்து காப்பாத்திருவாரா
இல்லவே இல்ல நீங்க சொன்ன மாதிரியே வெளக்கு தான் புடிச்சிருப்பாரு.
இந்துத்துவாவும்,இந்து மதமும் ஒன்றா?
இந்துத்துவாவும்,இந்து மதமும் ஒன்றல்ல வேறு,வேறுனு ரெமிலா தாப்பர்ங்குற வரலாற்று ஆராய்ச்சியாளர் சொல்றாங்க
இத எப்படி புரிஞ்சிக்கிறது ரெம்ப சிம்பிள் இந்து+தத்துவம்=இந்துத்துவம்.அதாவது இந்த இந்துத்துவம் என்பது ஒரு “வாழ்க்கை நெறி”.இந்த சமூக அமைப்புல யாரு,எங்க & எப்படி இருக்கனுங்குறத ஒருத்தரோட பிறப்பின் அடிப்படையில தீர்மானிக்கிற “வாழ்க்கை நெறி!
இது இன்னா பண்ணுதுனா மனிதர்களுக்குள்ள பிரிவினைய உண்டாக்கி எல்லாரையும் தனித்தனியா ஒக்கார வைக்குது.அப்படி ஒக்கார வைக்கும் போது வட்ட மேசை மாநாடு போல சமமா ஒக்கார வைக்காம,ரொம்ப கவனமா ஏணிப்படி வரிசையில ஒருத்தர மேலயும்,இன்னொருத்தர கீழயும் ஒக்கார வைக்கிறதுதான் இதோட ஸ்பெஷல்!
எல்லாம் சரிதான் ஆனா “நான் ஏன் கீழ ஒக்காரனும்..!?”னு ஒரு கேள்வி வருதுல்ல அது ரொம்ப டேஞ்சரான கேள்வி மட்டும் இல்ல இந்த இந்துத்துவ ஏணியடுக்கையே நிலைகுலைய வைக்கிற கேள்வியும் கூட
அப்போ அந்த கேள்வி வராம இருக்க என்ன செய்யனும்னா “இந்து தத்துவம்” புனித முலாம் பூசப்படனும் இந்த அண்ட சராசரங்கள்லயே கேள்விக்கு அப்பாற்பட்டு புனிதமா இருக்குறது ஒன்னே ஒன்னுதான் அது கடவுள்
புனிதமான கடவுளையும்,கடவுளின் வார்த்தைகளையும் சந்தேகப்படுறதோ,இல்ல கேள்விக்குட்படுத்துறதோ தெய்வ குத்தம் மட்டும் இல்ல தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.ஆக மும்மூர்த்திகளாலும்,முப்பத்து முக்கோடி தேவர்களாலும் சூழப்பட்ட இந்து மதம்;இந்து தத்துவத்துக்கு ஒரு தெய்வீக கோட்டிங் குடுத்து புனிதமாக்குது
“நால்வகை வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்”னு பகவான் விஷ்ணுவின் அவதாராமன கண்ணன் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் பண்ணுறப்ப “ஏன்டா சாதிய உருவாக்குன..!?”னு அர்ஜூனனே கேக்காத போது அற்ப பதறான மனுசன் எப்படி கேப்பான்.
நான் மேல சொன்ன இந்துத்துவத்துக்கும்,இந்து மதத்துக்கும் உள்ள வித்தியாசத்த புரிஞ்சிகிட்டாதான் “இந்து மதத்துல சாதி இருக்குனுதானே கிறிஸ்தவனா மதம் மாறுன அங்கிட்டு மட்டும் சாதி இல்லியா!?”னு கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.சாதி இந்து மதத்துல இல்ல,இந்து தத்துவத்துல இருக்குது.அந்த தத்துவம் தான் இந்த சமூக கட்டமைப்பா இருக்குது.அதனாலதான் என்னால “மதம்” மாற முடியுதே தவிர “சாதி” மாற முடியிறது இல்ல!.”சாதி” தான் “சமூகம்” என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்னு கவிஞர்.பழனி பாரதி சொன்ன வார்த்தையோட அர்த்தம் 100 சதவிகிதம் உண்மையானது.
யார் இந்து எச்ச ராஜா சொல்ற மாதிரி யாரெல்லாம் மாட்டுக்கறி திங்குறாங்களோ அவங்களாம் இந்து கெடையாது,யாரெல்லாம் புரட்டாசி மாசம் விரதம் இருக்கலயோ அவங்களாம் இந்து கெடையாதுனு அடிச்சி விடுறானுங்க
யார் இந்து..!? சொல்றா மொதல்லனு சொன்னா;யாரெல்லாம் இந்து இல்லனு லிஸ்ட்டு போடுறானுங்க!எச்ச ராஜாக்கள சொல்லி குத்தமில்ல ஏன்னா இந்திய அரசியலமைப்பு சாசனமே இன்னா சொல்லுதுனா “யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ,யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ,யாரெல்லாம் சீக்கியர் இல்லையோ அவர்கள் அனைவரும் இந்துக்கள்”னு சொல்லுது
இது எப்படி இருக்குதுனா பொறுக்கி பய சுப்பிரமணியனாண்ட போயி “ஒன்னோட அப்பன் பேரு இன்னாடா..!?”னு கேட்டா “எவன் மோடிக்கு அப்பன் இல்லயோ,எவன் பொரி உருண்டையோட அப்பன் இல்லயோ,எவன் தமிழிசைக்கு அப்பன் இல்லயோ அவன்தான் என்னோட அப்பன்”னு சொல்றாப்புல இருக்குது
யார் இந்து..!? என்கிற கேள்விக்கு வெளக்கம் குடுக்க வழியில்லாத வெக்கங்கெட்ட பயலுங்க யாரெல்லாம் இந்து இல்லனு மட்டும் நீட்டி மொழங்குறானுங்கனா ஒன்னு மட்டும் தெளிவா புரியுது “இந்து” என்பதே ஒரு ஏமாற்று சொல்!
யார் இந்தியன்?
இந்தியாவுல காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் மொத்தம் 29 மாநிலங்கள் + 7 யூனியன் பிரதேசங்கள் இருக்குது.காஷ்மீர்ல வாழுறவன் தன்ன காஷ்மீரினும்,அஸ்ஸாம்ல வாழுறவன் தன்ன அசாமினும்,தமிழ்நாட்டுல வாழுறவன் தன்ன தமிழன்னும் சொல்லிக்கிறான்
இந்த 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் ஒன்னா சேந்ததுதான் இந்தியா.மொழி வாரியா பிரிக்கப்பட்ட இந்த 29 மாநிலங்களும்,29 தேசிய இனங்கள்னு வெச்சிக்கலாம்.இப்போ இன்னா டவுட்டுனா பார்ப்பனர்கள் இதுல எந்த தேசிய இனத்த சார்ந்தவங்க?
பதில்:இவங்க எந்த தேசிய இனத்துகூடவும் சேரமாட்டாங்க.அண்ணன் சீமான் வேணும்னா தமிழ் பேசுற பார்ப்பனர்கள் தமிழர்கள்னும்,மலையாளம் பேசுற பார்ப்பனர்கள் மலையாளினும் சொல்லலாம்
ஆனா எந்த பார்ப்பனனும் தன்ன தமிழனாகவும்,கன்னடனாகவும்,
குஜராத்தியாகவும் அடையாளப்படுத்திக்க மாட்டான் காரணம் “ஆரியன்” என்கிற உயர்ந்த! அடையாளத்த விட்டுக்கொடுக்க எந்த பார்ப்பனரும் தயார் நிலையில் இல்லை
அப்போ ஆரியர்கள் எந்த தேசிய இனத்த சார்ந்தவங்க ஆடு,மாடு மேய்ச்சிட்டு வந்தவனெல்லாம் தேசிய இனத்த பத்தி பேசுனான்னா அத கேட்டுட்டு ஆமாஞ்சாமி போடுறதுக்கு நாம என்ன எடப்பாடி பழனிச்சாமியா!
ஆரியர்கள்னு சொல்றதோட அர்த்தமே “வெளியிலிருந்து வந்தவர்கள்”தான்.இப்படி எங்கிட்டோ இருந்து வந்தவனுக்கு ஒரு அடையாளம் தேவப்படுது ஆரியன்னு சொன்னா அடிப்பான் அதே நேரம் “இந்தியன்”னு சொன்னா தலையில தூக்கி வைக்கிறான்
ஆக “இந்தியன்” என்கிற அடையாளத்த தனதாக்கிட்டு தன்ன எதிர்க்கிறவங்க எல்லாரையும் “ஆண்டி இந்தியன்” ஆக்கி அழகு பாக்குறதுதான் ஆரிய சூழ்ச்சி.
இந்தியா மேல அம்புட்டு பாசம் இருக்குற பன்னாட “பாரதிய ஜனதா பார்ட்டி”ங்குற பேர மாத்தி “இந்திய ஜனதா பார்ட்டி”னு வைக்கலாமே!,
அட ஆறு மாசத்துக்கு ஒருக்கா புள்ள பெக்குற நம்ம “பாரத் மாதா”வ “இந்திய மாதா”னு சொல்லிக்கலாமா..!?.தியேட்டர்ல தேசிய கீதம் போடுறப்ப எழுந்து நிக்க சொல்லி சட்டம் போட்டு நாட்டுப்பற்ற காட்டுறவங்க ஏன்யா BJP கட்சி ஆபிஸ்ல மூவர்ண கொடிக்கு பதிலா காவிக்கொடியும்,RSS ஷாக்காவுல ஜன கன மனவுக்கு பதிலா வந்தே மாதரமும் பாடுறீங்க
ஜெய் ஹிந்த் சொல்லலனா தலைய வெட்டுவோம்,பாரத் மாத்தாக்கீ ஜெ சொல்லாதவங்கலாம் பாக்கிஸ்தான் போக சொல்றதுக்கு முன்னாடி இது எங்க நாடு நீங்க மொதல்ல வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா
வரும் ஆனா வராதுனு என்னத்த கண்ணையா இழுத்தாப்புல இழுக்காதீங்க
இந்தியா-வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடாம் அடேய் ஒன்னு வேற்றுமையா இருக்கனும்,இல்ல ஒற்றுமையா இருக்கனும் அதென்ன வேற்றுமையில் ஒற்றுமை வரும் ஆனா வராதுனு என்னத்த கண்ணையா இழுத்தாப்புல இழுக்காதீங்க!
தேசிய இனங்களோட ஒற்றுமைய தேசிய இனங்களே விரும்பினாலும் கூட இந்திய(ஆரிய) தேசியம் அத ஒத்துக்காது.தமிழ்நாட்டுக்கு கர்நாடாகா கூட தண்ணி பிரச்சனனா,கர்நாடகாவுக்கும்
மகராஷ்டிராவுக்கும் எல்ல பிரச்சனை மகராஷ்டிராவுக்கும்,
குஜராத்துக்கும் கரண்டு பிரச்சனை
இப்படி எல்லா தேசிய இனங்களுக்கும் அண்டை மாநிலங்களோடு எதாவது பிரச்சனைய உண்டாக்கிட்டே இருக்குறது.அந்த பிரச்சனைகள ஊதி பெருசாக்கி கலவரங்கள மூட்டி விட்டு அரசியல்,பொருளாதார ஆதாயமடையிறது
இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் தலித்துகளையும் மத விரோதிகளாக சித்தரிக்கிறது
எவன் அப்பன் ஊட்டு சொத்து எப்படி போனா நமக்கென்னனு இந்தியாவ பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறு போட்டு விக்கிறது
உள்ளூர் விவசாயிகள அம்மனமா ஓடவிட்டு சாவடிக்கிறது,மீத்தேன்,ஹைட்ரோ கார்பன்,ஸ்டெர்லைட்னு வாழ்வாதாரங்கள அழிக்க புதுசு,புதுசா திட்டம் போடுறது.இவனுங்களோட மோசமான பொருளாதார கொள்கைகளால நாம சோத்துக்கு பிச்சையெடுக்குறப்ப எல்லாத்துக்கும் காரணம் பாகிஸ்தான்,சீனானு அடிச்சி விடுறது
பல்வேறு தேசிய இனங்களோட மொழி,வரலாறு,கல்வி,வேலைவாய்ப்பு எல்லாத்தையும் பறிச்சிட்டு இந்திய தேசியம் என்கிற ஒற்றை தேசியமாக மாற்ற முயல்வது,மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட போராடுறவங்கள தீவிரவாதி,பயங்கரவாதினு சொல்லி தனிமைப்படுத்துறது,
இந்துத்வா இந்து மத விரோதி
நீதி மன்றங்களையும்,காவல் துறையவும் தனது அடியாட்களாக பயன்படுத்துவது,இஸ்லாமியர்களையும்,
கிறிஸ்தவர்களையும்,தலித்துகளையும் இந்து மத விரோதிகளாக பத்திரிக்கை,மீடியா மூலமா சித்தரிக்கிறது,
தங்களோட மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துகிற நேர்மையான பத்திரிகையாளர்களையும்,
எழுத்தாளர்களையும் சுட்டு கொல்றது,மக்களோட வரிப்பணத்த தூக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கிறது
முதலாளிகளுக்கு ஒரே ஆயுதம் இந்துத்துவா
போராட்ட குணமுள்ள மக்களை மூளைச்சலவை செய்ய கார்ப்பரேட் சாமியார்கள உருவாக்குறதுனு இவனுங்க அராஜகத்த அடுக்கிட்டே போகலாம்
இதையெல்லாம் தங்கு,தடையில்லாம செய்யிறதுக்கும்,தான் செய்யிறதெல்லாம் வளர்சிக்காகனு மக்கள நம்ப வைக்கிறதுக்காகவும் இவங்களாண்ட இருக்குற ஒரே ஆயுதம் இந்துத்துவா
கொஞ்சம் யோசிச்சி பாருங்க எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் நம்ம சொந்த மண்ணுல நம்மள சிறைபுடிச்சி வெச்சி,நம்ம சகோதரன மாட்டுக்கறி தின்னான்னு அடிச்சி கொன்னு,நம்ம சகோதரிய நீட் தேர்வுங்குற பேர்ல தூக்குல தொங்கவிட்டு,நாம பெத்த புள்ளைய பச்ச குழந்தனு கூட பாக்காம கற்பழிச்சி,நமக்கு சோறு போடுற விவசாயிய எலிக்கறி திங்க வெச்சி,நம்ம நெலத்த புடிங்கி பன்னாட்டு கம்பெனிக்கு குடுத்து நம்மள நாய விட கேவலமா நடத்துவான்
நாம கடவுள் காப்பாத்துவாரு,இயேசு வருவாரு,அல்லா கூப்புடுறாருனு இன்னும் எத்தன நாளைக்கு காத்திருக்க போறோம்.
சூப்பர் ஸ்டார்களும்,உலக நாயகர்களும்,ஜாதி கட்சி தலைவர்களும்,மத வியாபாரிகளும்,ஆமைக்கறி தின்றவர்களும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளும் நமக்காக நிச்சயம் போராட மாட்டார்கள்
இந்துத்துவா அடிமைத்தனத்துல இருந்து விடுதலை
ஏன்னா எல்லாரும் எனக்கு ஓட்டு போடு நான் அத பண்ணுறேன்,இத பண்ணுறேன்னுதான் சொல்றானுங்களே தவிர யாரும் ஒனக்கு இந்த கேடுகெட்ட அடிமைத்தனத்துல இருந்து விடுதலை வாங்கி தரேன்னு சொல்றது இல்ல!
இன்னைக்கு அண்ணல் பிறந்தநாள் “அடிமையிடம் சென்று நீ அடிமை என்று சொல்;தனது அடிமைத்தனத்தை உடைத்தெறிய போராடுவான்”னு சொல்லிருக்காப்புல.நானும் அதையேதான் சொல்றேன் இந்த பாழாப்போன இந்துத்துவா நம்மள 2000 வருசமா “அடிமை”யா வெச்சிருக்குது அதை உடைத்தெறிந்து…
“நான் யாருக்கும் அடிமை இல்லை
எனக்கு அடிமை யாரும் இல்லை” என்ற சமதர்ம சமூகம் படைக்க பாடுபடுவோம்.
Thanks by Writing ஏவின் மனோ