இந்தியத் துணைக் கண்டத்துக்குள் ஆரிய ஊடுருவல்: சமீபத்திய ஜீன் ஆய்வுகள் சொல்வதென்ன?
சமீபத்திய ஜீன் ஆய்வுகள் இந்தியத் துணைக்கண்டத்துள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரிய ஊடுருவல்நிகழ்ந்துள்ளதை நிறுவியுள்ளதை அறிவோம் உலகெங்கிலும் உள்ள 92 ஜீன் ஆய்வறிஞர்கள், இந்த ஆய்வுகள் என்னதான் சொல்கின்றன என்பதைச் சுருக்கமான ஒரு அறிக்கையாக இப்போது வெளியிட்டுள்ளனர் அது குறித்த Scroll.in கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்,
இந்தக் கட்டுரையில் அந்த 92 வல்லுனர்களின் கட்டுரை மட்டுமல்லாமல் மேலும் இது தொடர்பான இரு கட்டுரைகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன மொத்தத்தில் இந்த நான்கு கட்டுரைகளையும் ஆழமாகப் படித்தால் என்னதான் இப்போது ஜீன் ஆய்வு மூலம் நிறுவப்பட்டுள்ளது என்பது விளங்கும்
கட்டுரை மூலம் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்?
உண்மையில் புதிதாக ஒன்றும் இப்போது தெரிந்து விடவில்லை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வில்லியம் ஜோன்ஸ் முதல் அறிஞர் கால்டுவெல் வரை மொழியியல் ரீதியாக என்ன சொன்னார்களோ அவற்றுக்கு ஜீன் அறிவியல் மூலம் இப்போது நிரூபணம் கிடத்துள்ளது அவ்வளவே
சரி இப்போது இந்தக் கட்டுரை மூலம் நாம் என்ன புரிந்து கொள்கிறோம்? சுருக்கமாகச் சொல்வதானால்
- ஏதோ ஒரு வகையில் ஆரியப் பரவல் இங்கு நடந்துள்ளது உறுதியாகிறது. ஸ்தெப்பி வெளி நாடோடி மேய்ச்சல் இனத்தவரின் (அதாவது ஆரியர்களின்) நுழைவின் ஊடாகத்தான் இந்தத் துணைக் கண்டத்தில் இந்தோ – ஐரோப்பிய மொழி (அதாவது மூல ஆரியம்) மற்றும் ஆரியப் பண்பாட்டின் பரவல் முதலியன நிகழ்ந்துள்ளனன.
2.இதே ஸ்தெப்பி வெளியினர்தான் மேற்குத் திசையில் நகர்ந்து ஐரோப்பாவிலும் பரவியவர்கள். அதனால்தான் இன்றைய ஆரியம் இந்தியத்துணைக் கண்டத்திலுள்ள இன்னொரு முக்கிய மொழிக் குடும்பமான திராவிடத்தைக் காட்டிலும் ஐரோப்பிய மொழிகளுக்கே நெருக்கமாக உள்ளது. அதாவது மத்திய ஆசிய ஸ்தெப்பி வெளியிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி வந்தவர்கள் இங்கே ஆரிய சமஸ்கிருதம் உருவாகவும், மத்திய ஆசியாவிலிருந்து மேற்கில் நகர்ந்தவர்கள் இன்றைய ஐரோபிய மொழிகள் உருவாவதற்கும் காரணமானார்கள்
- தவிரவும் இந்த ஸ்தெப்பி வெளியினரின் பரவலுக்கும் பிராமண சாதி மற்றும் பண்பாட்டுப் (priestly caste and culture) பரவலுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாம் என்பதும் இன்று உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள இந்திய மக்கள் குழுக்களை 140 ஆகப் பிரித்தால் இவற்றில் 10 குழுக்களின் மூதாதையர் ஒப்பீட்டளவில் சிந்து வெளியைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்தெப்பி வெளியுடன் உறவுடையவர்களாகவே உள்ளனர். அதாவது ஆரிய ஜீன் கலப்புள்ளவர்களாக உள்ளனர்.
4. பொதுவாக மதச் சடங்குகளை நிறைவேற்றுபவர்களாக, அதாவது புரோகிதர்களாக, உள்ள குழாம்கள் ஸ்தெப்பி வெளியுடனேயே மூதாதை உறவு கொண்டவர்களாக உள்ளனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வைதீகத்தையும் வேதப் பண்பாட்டையும் பரப்புவதில் முக்கிய பங்கை இவர்களே (அதாவது புரோகிதம் செய்த ஆரியர்களே) வகித்திருக்க வேண்டும்
தென் ஆசிய வேட்டை இனப் பண்பாடு ஆரிய ஊடுருவல்
- தொடக்க கால ஈரானிய விவசாயிகள் சொல்லிக் கொள்ளும்படியாக தென் ஆசிய வேட்டை இனப் பண்பாட்டுடன் (அதாவது ஒருவகை மூல திராவிடப் பண்பாட்டுடன்) மூதாதை உறவு கொண்டிருக்கவில்லை என்பது ஜீன் ஆய்வில் தெரிய வருகிறது. இதிலிருந்து ஜீன் பரவல் என்பது வெளியிலிருந்து தென் ஆசியாவுக்குள் பரவியதுதானே தவிர தென் ஆசியாவிலிருந்து வெளியே பரவவில்லை என்பது அறிய வரு கிறது.
கிமு 2000 வாக்கில் ஸ்தெப்பி வெளி மேய்ச்சல் நாடோடிகள்(அதாவது ஆரியர்கள்) தெற்குத் திசையில் இருந்த (இந்திய) துணைக் கண்டத்தை நோக்கி நகர்ந்தனர். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த சிந்துவெளி மக்களுடன் ஒரு கலப்பு நிகழ்ந்தது
7.அதன் பின் சிந்து வெளி மக்களின் ஒரு பகுதி மேலும் தெற்கு நோக்கி நகரத் தொடங்கியிருக்க வேண்டும். இதனூடாகத் தென் ஆசிய வேட்டை இன மக்களுடன் கலப்பு ஏற்பட்டு பூர்வீகத் தென்னிந்தியர் உருவாகி இருக்க வேண்டும்
8.தொடர்ந்த தென் ஆசியச் சமூக உருவாக்கம் என்பது பூர்விக வட இந்தியர்களுக்கும் பூர்வீகத் தென் இந்தியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பின் ஊடாகவே அதன் பின் ஏற்பட்டிருக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக