வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு எப்படி உள்ளது
வைகோ ஸ்டாலின் தற்போதைய நட்பு எப்படி உள்ளது என்பதை ரஜினி ரசிகர் ஒருவரின் அருமையான கருத்து
வைகோவை நம்பவைத்து கடைசியில் கழுத்தறுப்பார்கள், முதுகில் குத்திவிடுவார்கள் என்றே நம்பினேன்.
அதுவும் குறிப்பாக “ஸ்டாலினை” எதிர்த்துப் பிறந்தது தான் #மதிமுக என்பதால்
வைகோ ஸ்டாலின்
ஸ்டாலின் வஞ்சத்தோடு #வைகோவை பழிதீர்ப்பார் என்றே கருதினேன்
துரைமுருகனும், பழக்கடை அன்பழகனும் பேசிய பேச்சுகளைக் கேட்டபோது “இவர்கள் ஸ்டாலின் #உத்தரவின்றி இப்படி பேசியிருக்க மாட்டார்கள்” என்று நம்பினேன்
ஆனால் எனது அத்தனை எண்ணங்களையும் ஸ்டாலின் #தவிடுபொடியாக்கிவிட்டார்.
இன்றைய தேதியில் ரஜினி கட்சியை முறைப்படி அறிவிக்காத நிலையில்,
முழுமையாக அதிமுக #தினகரன் கைகளில் வராத நிலையில்
இருக்கின்ற இந்த 3 முதல்வர் வேட்பாளர்களில் அமைப்பு ரீதியாக முதலமைச்சர் பதவியைத் தொட்டுவிடும் தூரத்தில் மிகஅருகில் இருப்பவர் ஸ்டாலின் தான்
எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட நாளை #காலையில் தேர்தல் வைத்தாலும்
முதலமைச்சராகத் தனிப்பெரும்பான்மை பெற மிக அதிக வாய்ப்புள்ளவர் ஸ்டாலின் தான்
அத்தகைய உயரத்தில் இருக்கும் ஸ்டாலின், வைகோ நடத்தும் நியூட்ரினோ எதிர்ப்பு நடை பயணத்தை தொடங்கி வைக்க மதுரை வருகிறார் என்றால்!
ஸ்டாலின் வைகோ மீது எத்தனை பெரிய #மரியாதை வைத்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
பொதுவாக ஸ்டாலின் ஒரு மேட்டிமை குணம் படைத்தவராகவே அறியப்படுகிறார். #அவரே தனது நிலையிலிருந்து வந்து, வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார் எனில்!
அவர் மனதில் உண்மையாகவே வைகோவை பெரிதாக #மதிக்கிறார் என்பதை உணர முடிகிறது
அதிமட்டுமல்லாமல் ஸ்டாலின் யாரையும் புகழமாட்டார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் “இந்த நடைபயணத்தால் வரலாற்றில் சகோதரர் வைகோ இடம் பெறுவார்
இதைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு பெற்றதனால் என் பெயரும் இடம் பெறும்” என்று வைகோவை #உயர்த்தி பேசியிருக்கிறார்.
மேலும் அறிவாலயத்தில் தனது கார் #நிறுத்தும் இடத்தில் வைகோ காரை நிறுத்திக்கொள்ள ஸ்டாலின் அறிவாலய பணியாளர்களிடம் அறிவுருத்தியிருக்கிறார்
அதாவது தனக்கு #நிகராகத் திமுகவில் வைகோவுக்கு மரியாதை கொடுக்கிறார் ஸ்டாலின்
மற்றபடி அந்தக் கட்சியில் இதுநாள் வரையில் ஸ்டாலினை சுற்றி இருந்துகொண்டு ஜால்ரா தட்டிக்கொண்டு பிழைத்துக் கொண்டிருந்தவர்கள் வைகோவின் வரவால்
வைகோவுக்கு ஸ்டாலின் #முக்கியத்துவம் கொடுப்பதால் வயிற்றெரிச்சலில் புகைகிறார்கள்
ஆக வயிற்றெரிச்சலில் சில அல்லக்கைகள், எடுப்பு சோறுகள் பேசுவதற்கு பதில் அளிக்கையில் தேவை இல்லாமல், வைகோ மீது மரியாதை வைத்துள்ள ஸ்டாலினையும் விமர்சித்து நட்புடன், புரிதலுடன் கரம் கோர்த்துள்ள #இரு_தலைவர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்காமல் இருப்பதே நல்லது
பபி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக