அணைகளை கட்டியிருந்தால் நாம் யாரிடமும் கையேந்த தேவையில்லையே
அணைகளை கட்டியிருந்தால் நாம் யாரிடமும் கையேந்த தேவையில்லையே ஆற்றுநீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும்
தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது.. தமிழகத்தில் சமவெளிதான் அதிகம்.. வற்றாத ஆறுகளும் கிடையாது.. மழையளவும் சராசரிதான்
அதேபோல, கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும், அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்..
மேலும், இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை
அணைகளை கட்டியிருந்தால்
தமிழ் நாட்டில் உள்ள அணைகள் பெரிய நீர்தேக்கங்கள் எண்ணிக்கை – 85
அரசர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை — 10
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை
50 #ஆண்டுகால #திராவிட #கட்சிகள் #ஆட்சியின் #போது #கட்டப்பட்டவை — 61 (#திமுக – 30 , #அதிமுக – 31)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக