தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து எரிக்கிறது இந்தியா
தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து எரிக்கிறது இந்தியா தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பூமியிலே தமிழகத்தின் இனப்பகை இந்திய அரசு இன்று விவசாயத்தை திட்டமிட்டு ஒழித்துவிட்டு,
தற்பொழுது தஞ்சை டெல்டா முழுவதும் மீத்தேன் எரிக்காற்று எடுத்து தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று இனப்பகை இந்தியாவின் ONGC நிறுவனம் கதிராமங்கலம் பகுதியில் இருந்து மீத்தேன் எரிக்காற்று எடுத்துச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு “தீ” பற்றி எரிந்து வருகிறது.
இதைப் பார்த்த கதிராமங்கலம் பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துப் போயுள்ளனர். 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து இந்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இனக்கொலை இந்திய அரசு தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்கப் போகும் 110 இடங்களின் பட்டியலை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களே தமிழ்நாட்டை உயிரோடு தீ வைத்து
எரிக்கிறது இந்தியா
தமிழகத்தில் தற்பொழுது நடைபெறுவது வாழ்வா? சாவா? போராட்டம் .
நாளை நாம் உயிர்வாழ வேண்டுமென்றால் இன்று இந்திய அரசிற்க்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இது ஏதோ ஒரு டெல்டா பகுதி சார்ந்த பிரச்சினையாக எண்ணி கடந்து செல்லாதீர்கள் இது ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் பிரச்சினை.
தமிழினத்தின் பிரச்சனை
டெல்டா இன்று அழிந்தால் நாளை தமிழகம், தமிழினம் அழியும்.
எனவேக் காலத்தின் அருமைக் கருதி அழிவின் விளிம்பில் உள்ள தமிழகத்தைக் காக்க போராட வீதிக்கு வாருங்கள் தமிழர்களே!!.
“நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் தவணை முறையில் தமிழ்நாடும், தமிழினமும் அழியும்!!!”
#SaveKathiramangalam
https://www.facebook.com/nimal.raghavan/videos/1346261362095974/?t=0
https://www.facebook.com/nimal.raghavan/videos/1346261365429307/?t=1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக