Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் சிறுமி ‘ஆசிபா விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள்

பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் சிறுமி ‘ஆசிபா விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள்

பிப்ரவரி 17 அன்று பலாத்காரம் செய்த கயவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்கிற அமைப்பு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் மூவர்ன கொடியுடன் ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை பாஜகவின் மாநில செயலாளர் உள்ளிட்ட மாநில தலைவர்கள் வழிநடத்தினார்கள்
கத்துவா மாவட்ட வழக்கறிஞர்கள் (பார் அசோசியேசன்) ஏப்ரல் 9 அன்று பல குழுக்களாக ஊர்வலம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களில், ஊர்வலங்களில் தவறாமல் மூவர்னக் கொடியை அசைத்தபடி ஒழித்தது “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” கோஷம்
கத்துவா வழக்கறிஞர்களின் கோரிக்கை சிபிஐ இதனை விசாரிக்க வேண்டும் என்பதே. மோடி ஆட்சியின் கீழ் சிபிஐ, வருமானவரி துறை மற்றும் இன்ன பிற துறைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது நாடு அறிந்ததே.
கடந்த மூன்று மாதங்களாக பாஜகவின் IT CELL இந்தியா முழுவதிலும் களமிறங்கி அசிபாவின் பலாத்காரத்தை கண்டிப்பது போலவும் அதே நேரத்தில் இந்த கயவர்களை காப்பாற்றும் செயலிலும் ஈடுபட்டது
அசிபா பலாத்காரத்தை கண்டித்தவர்கள் அனைவரையும் அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்தனர். அசிபா பலாத்காரம் பற்றி விரிவாக எழுதிய ஊடகங்களை “தேசவிரோத ஊடகங்கள்” என்று பட்டமளித்தனர்.
பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் அதன் IT CELL-ம் ஏன் இத்தனை தூரம் சென்று இந்த விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்

இந்த பலாத்காரத்தில் ஈடுப்பட்டவர்கள் எட்டு பேர்

இந்த பலாத்காரம் ஏன் இத்தனை துள்ளியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது?? அசிபாவின் குடும்பத்தார் பக்கர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த பள்ளதாக்கில் ஆடு மேய்ப்பது தான் பக்வர்வால் சமூகத்தின் தொழில் இந்த மேய்யசல் சமூகத்தை அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே அங்குள்ள இந்து வெறியர்களின் நோக்கம்
இந்த கிராமத்தில் இருக்கும் இந்துக்கள் யாரும் இவர்களின் ஆடுகளுக்கு மேய்ய்சல் உரிமை அளிக்க கூடாது, ஏரிகள்-குளங்களில் கூட ஆடுகளை நீர் அருந்த அனுமதிக்க கூடாது என்பதாக பல கட்டுப்பாடுகளை சஞ்சி ராம் விதித்து வந்தார்
சஞ்சி ராம் இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி இவர் தான் இந்த சமூகத்தை விரட்ட வேண்டும் என்றால் அவர்கள் அதிர்ச்சியாகும் படியாக ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறார்
அவரது உறவினரான கோவில் நிர்வாகியை அழைத்து ஒரு காவல்துறை அதிகாரியின் துணையுடம் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார் தொடர்ந்து ஒரு வாரம் அவளை மயக்க மருந்துகள் கொடுத்து சுயநினைவு வரும் பொழுதெல்லாம் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
இந்த பலாத்காரம் நடைபெறுவதற்கு மூன்று தினங்கள் முன்னரே தீபக் மற்றும் விகரம் அருகாமையில் இருந்த ஒரு மருந்து கடைக்கு சென்று EPITIRIL 0.5mg மயக்க மருந்தை வாங்கினார்கள்
அசிபா கடத்தப்பட்டு ஒரு இந்து கோவிலில் வைத்து தான் தொடர்ந்து பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டார், அந்த கோவிலை பராமரிக்கும் நிர்வாகி இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
மனு என்பவன் அசிபாவை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் சிலை முன்பே பலாத்காரம் செய்திருக்கிறான். இந்த வழக்கை விசாரித்து அசிபாவை தேடிச் சென்ற காவல்துறை அதிகாரி (SPO)யும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்
உத்திர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் இயங்கும் விஷால் என்கிற ஹிந்த்துவா தொண்டர் ஜனவரி 12 அன்று அசிபாவை பலாத்காரம் செய்யவே ஜம்முவுக்கு வந்து சேர்ந்தார்
உணவேதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் மூன்று மயக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் கொடுத்து கொடுத்து தான் பலாத்காரம் செய்தார்கள்
கடைசியாக அசிபா மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அவளை சிதைப்பதற்கு முன்னால், தான் ஒரு முறை புணர வேண்டும் என்று காவல்துறை அதிகாரி (SPO) கஜுரியா ( spo deepak khajuria) விருப்பட்டார், அவரது விருப்பமும் நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை அதிகாரி (SPO) பலாத்காரம் செய்தவுடன் முதலில் அவள் முதுகில் தனது கால்முட்டியை வைத்து அவளது முதுகெலும்பை உடைத்திருக்கிறார் தன் பின்னர் இரு முறை அவள் மீது பாறாங்கற்கள் வீசப்பட்டு அவள் இறந்துவிட்டாலா என்று உறுதி செய்தனர்

இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்

இந்த விசாரனையை நடத்திய அதிகாரி ஆனந்த தத்தா, பின்னர் இவர்களிடம் மூன்று லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மொத்த சம்பவத்தையே மூடி மறைக்க முயன்றார்
அசிபா அணிந்திருந்த உடைகளில் இருந்த கறைகளை எல்லாம் நீக்க, அவளது உடைகளை எல்லாம் துவைத்து அசிபாவின் சடலத்திற்கு மாட்டிவிட்டார் விசாரனை அதிகாரி ஆனந்த தத்தா அவரை சேர்ந்த்து இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்
அசிபாவின் சடலத்தை கூட அவள் வாழ்ந்த கிராமத்தில் அடக்கம் செய்ய இந்த வெறியகள் அனுமதிக்கவில்லை, அவளது கிராமத்தில் இருந்து 10 கிமி தொலைவில் மற்றொரு கிராமத்தில் தான் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசிபாவை காணவில்லை என்று முதலில் அவளது பெற்றோர் காவ்ல நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரி உன் எட்டு வயது மகள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்று சொன்னானாம்
இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் பல அதிர்ச்சியான விசயங்களை வெளிக் கொண்டுவந்ததுள்ளது.
அசிபாவின் வலியை நாம் எப்படி இந்த சமூகத்திற்கு கடத்தப் போகிறோம், இந்த வலியை எப்படி இந்த தேசம் உணரப் போகிறது.


பதிவை பகிர மட்டும் செய்யுங்கள், பதிவிடும் போது #justiceforasifa ஹேஷ்டேக்கை மீண்டும் ஒரு முறை பதிவிடுங்கள்
நன்றி : Muthu Krishnan
written BY PKB

எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு

எட்டு வயது பெண் குழந்தை ஆசிஃபாவின் கற்பழிப்பு விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்குத்தான் இதயம், இரக்கம், நியாயம், தர்மம், மனிதம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையென்றால்..
இதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், வக்கீல்கள் இவர்களுக்கும் இவை இல்லையெனும்போது பதைப்பு இரட்டிப்பாகிறது.
இது காமத்தின் விளைவாக நடந்ததல்ல..இன எதிர்ப்பால் எச்சரிக்கும் வெளிப்பாடாக சில கேவலமான ஜென்மங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆணவக் கொலை போல இது ஒரு ஆணவ கற்பழிப்பு. மதம் இனம் மொழி தாண்டி மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டிய விவகாரம். வெட்கப்பட வேண்டிய விஷயம்.
தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளை ஒரு விபத்தில் பறிகொடுத்த பிறகு அந்தத் தம்பதி ஆசிஃபாவைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
காட்டுக்குள் குதிரை மே்ய்க்கப் போன அந்த பட்டாம்பூச்சியின் சிறகுகளைப் பிய்த்த கொடூரர்களை தண்டிக்காத அத்தனைக் கடவுள்களின் மீதும் கோபம் கொள்கிறது மனம்.
மதம் கடந்து அத்தனைக் குழந்தைகளும் கடவுளின் பிரதிநிதிகளாக, தேவதைகளாகப் பார்க்கப் படுவார்கள் என்கிற பழைய நம்பிக்கையில் இங்கு வந்து பிறந்துவிட்ட குட்டி தேவதையே..மன்னிப்பாயாக

சிறுமி ‘ஆசிபா
சிறுமி ‘ஆசிபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left