வடமாநிலங்களில் பாரத் பந்த் அவாள்களின்” தீர்ப்பால் பற்றி எரிகிறது
வடமாநிலங்களில் பாரத் பந்த் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பலர் பலி, பலர் படுகாயம்
வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று, அவற்றை நீர்த்து போகும் வகையியல் புதிய சட்டம் கொண்டு வந்த உச்சநீதிமன்ற “அவாள்களின்” தீர்ப்பால் பற்றி எரிகிறது பல மாநிலங்கள்
மத்தியப்பிரதேசத்தில் தொடங்கிய இந்த போராட்டத்தில் 5 பேர்கள் பலியாகி உள்ளனர். சாமியார் மாநிலமான உபியிலும் கடும் போராட்டம் அங்கே ஒருவரும், ராஜஸ்தானில் ஒருவரும் பலியாகி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இந்த பந்தால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கபட்டுள்ளது. போராட்டம், டில்லி,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கும் ரயில் மறியல் போராட்டமாக் மாறியதால், பல ரயில் சேவைகள் முடக்கபட்டுள்ளன
வடமாநிலங்களில் பாரத் பந்த்
வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தால், அவரை உடனே கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை, தீரவிசாரனைக்கு பின்பே கைது செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் மீது புகார் வந்தால், அவர்களின் மேலதிகாரிகளின் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும் – இதுதான் சட்டதிருததின் முன்வடிவம். இனி அப்படி அப்படி ஒரு சட்டமே தேவையில்லை என்ற அளவில்தான் இந்த சட்டதிருத்தம் உள்ளது என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் அமைப்புகள் மற்றும் பழங்குடியினர் இந்த பந்துக்கு அழைப்பு விடுத்து வடமாநிலங்களை முடக்கி போட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக