உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது
உச்சபட்ச நியாயவான்களுக்கு கூட அடிப்படை நியதி தெரியாமல் போவது நீதிபரிபாலன முறை மீதான நம்பிக்கையை பொய்க்க செய்கிறது
சட்டம் மிக தெளிவாக யாரை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டுமென சொல்லியிருக்கிறது அதிக இடங்களை பெறுவோர் ..மட்டுமல்ல பெருபான்மையை எட்டியவர்கள் அல்லது இணைந்து பெருபான்மையை தருகிறவர்கள்..
பாஜகவிற்கு பெருபான்மையெனும் மாஜிக் நம்பர் magic number இல்லை .. ஆனால் அந்த கூட்டு எண்ணை தருகிற காங் ஜனதா கட்சிக்கு
வாய்ப்பு மறுக்கபட்டு .. அவர் கேட்ட ஏழுநாட்களை விட அதிகமாக இன்னுமொரு ஏழுநாட்களை வைத்துக்கொள் எது வேண்டுமானாலும் செய்துகொள்..ஆனால் சட்டமன்றத்தில் பெருபான்மையை நிரூபி!
நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள்
நள்ளிரவில் கூடி நீதிமான்கள் விவாதித்தார்கள் விடிய விடிய பேசி கடைசியில் கவர்னர் அதிகாரத்தில் தலையிட முடியாதென்று .. தடைவிதிக்க மறுத்தார்கள்.. தலையிட முடியாதென்று தெரிந்தும் கவர்னருக்கு உத்திரவிட முடியாதென தெரிந்தும் ஏன் வீணான விடிய விடிய கதைக்கவேண்டும்.. ஒற்றை இரவில் அல்லது அமர்வில் சட்டசிக்கலை தீர்க்கமுடியாதுதான் .. ஆனால் கண் முன்னே நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் தார்மீக பொறுப்பு நீதிமான்களுக்கு வேண்டாமா.. எப்படி நிரூபிப்பீர்கள் உங்களுக்குதான் பெருபான்மை இல்லையே என்று நீதிபதி கேள்விக்கு .. தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றால்தான் கட்சிதாவல் சட்டம் பொருந்துமென்கிறார் அதாவது நிறைந்த நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் விலைபேசபடுவார்கள் என சொல்லியிருக்கிறார் .. மற்ற கட்சியிலிருந்து வென்று வந்தவரின் ஆதரவை பெறுவது அந்த கட்சியின் அனுமதியில்லாமல் பெறுவது .. அதை நியாயபடுத்துவது எவ்வளவு கேவலம்.. பெருபான்மை உள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் மரபென்றால் கோவாவிலும் திரிபுராவிலும் ஏன் காங்கிரஸை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.. ஒருவேளை கோவா திரிபுராவிற்கென வேறு சட்டபுத்தகம் நீதி இருக்கிறதா..இப்போது கோவா திரிபுராவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோர இருப்பதாக செய்திகள் வருகின்றன .. இப்போது உச்சநீதிமன்றம் என்ன சொல்ல போகிறது..
..
இப்போதே விலைபேச தொடங்கியிருக்கிறார்கள் வருகிற ஆறு பேருக்கும் மந்திரி பதவி.. ₹100 கோடி என செய்திகள் வருகிறது .. மத்தியில் அவர்கள் ஆள்வதால் .. பணம் மாற்றம் மிக எளிதாக நடக்கும் .. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குதிரைபேர அரசியல் குறுக்குவழியில் ஆட்சியை பிடிப்பது .. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத மாநிலத்தில் .. இரு உறுப்பினர்கள் இருந்தால் போதும் அதிகாரத்திற்கு வந்துவிட எந்தவிதமான அயோக்கியதனத்தையும் செய்ய தயங்கவில்லை .. அத்தனை சனநாயக மரபுகளும் காற்றில் பறக்கவிடபடுகிறது 29 தொகுதிகளில் கட்ட்வச்ச காசை கூட பறிகொடுத்த கட்சி எங்கணம் அதிக இடங்களில் வெல்ல முடிகிறது..
..
எல்லாவற்றையும் திருவாளர்.பொதுசனம் பார்த்துக்கொண்டிருக்கிறான் .. என்பதை மதிப்பிற்குரிய நியாயவான்கள் கருத்தில் கொள்ளவேண்டும் .. ஆட்சியாளர்களும் தான்
Democratic assassination
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக