கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது
கர்நாடகவில் மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது மிரட்டல்,கடத்தல், ஊழல்.. மாஃபியா …இது போன்ற அரசியல்தான் நடைபெற்று வருவதாக தற்போது செய்தி வெளியிட்டிருக்கிறது
காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் பாஜகவால் கடத்தபட்டு டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்..
பாஜக வின் எம் எல் ஏ ராமூலு எம்எல்ஏக்கள் நாளை நடைபெறும் மெஜாரிட்டி நிருபிக்கும் சட்ட மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கவேண்டுமென பகிரங்கமாக எச்சரிக்கிறார்.. வெளிப்படையாகவே
மாஃபியா அரசியலை பாஜக நடத்துகிறது
பாஜகவால் இந்திய அரசியல் மேன்மையை முழுவதுமாக சீரழித்து விட்டது குறைந்தபட்ச நியாயம் தர்மங்கள் கூட கடைப்பிடிக்கபடுவதில்லை அதிகார போதையில் என்ன செய்கிறோமென தெரிந்தும்
அந்தளவு கீழே செல்கிறார்கள்.. சனநாயகம் மிக ஆபத்தான காலத்தின் அருகில் நிற்கிறது
இந்திய ஜனநாயகத்தின் குரல் வலை முழுவதும் நெறிக்கும் பட்டு விட்டது. இந்தியா எனும் தேசம் உலகத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாய் விளங்கியது இப்போது இந்த கயவர்களால் வெட்கி தலைகுனிவை சந்திக்கிறது..
..
நாளை எதுவும் நடக்கலாம் .. ரகசிய வாக்கெடுப்பை ஏற்காத உச்ச நீதிவான்கள்.. கையை உயர்த்தி ஆதரவை எதிர்ப்பு/ஆதரவு தரவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள்.. பாஜக வழக்கறிஞர் முகில் ரோஹகத்கி .. காங்.ஜனதாதள எம்எல்ஏக்கள் கூட பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என்பதிலிருந்தே இவர்கள் சதி நமக்கு புரியும்.. வெளிப்படையான மரபுகள் மீறபடும்.. ஆட்சி அதிகார போதையில் எல்லைமீறிய செயல்கள் அரங்கேற்றபடலாம்..
நாளைய நிகழ்வு அது எந்த நிலைபாடாக இருந்தாலும் .. அனைத்து அட்டூழியங்கள் செய்து வெற்றிபெற்றாலும் அறநெறியோடு எடியூரப்பாவை தோற்கடித்தாலும் .. நிச்சயம்
சரித்திரத்தில் நிச்சயம் இடம்..
கர்நாடகவில் மாஃபியா
நேர்மையான அரசியலை செய்து ஆட்சிக்குவர எந்தகாலத்திலும் விரும்பாத இயக்கம் ஆர்எஸ்எஸ் .. அனைத்து உயர்பதவிகளும் ஊடுறுவி உள்ள ஆர்எஸ்எஸ் .. இந்திய ஜனநாயக மாண்புகளின் குரல்வலையை கடித்து குதறுகிறது .. உச்சபட்ச நீதிபீடம் முதல் அனைத்தும் சொல்பேச்சை கேட்க வைத்திருக்கிறது.. பாஜகவின் அத்துமீறல்களும் அடாவடிகளும் ..மிரட்டல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியவைத்தல் .. மீறுகிறவர்களை .. எதிர்பாளர்களை முற்போக்கு பேசுவோரை கொலை செய்தல் .. அடிபணிய மறுத்தல் வருமானவரித்துறை காவல்த்துறை மூலம் மிரட்டல் என ஆடுகிற பேயாட்டம் மக்களிடத்தில் பெரும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது.. இவர்களின் செயல்கள் மாபெரும் மக்கள் புரட்சியை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்கிறது .
..
சனநாயகத்தின் சுவாசத்தை நிறுத்த முயலும் இந்த பாசிசவாதிகளை ..இந்திய அரசியல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் நாளே உண்மையான விடுதலை நாள்.. ..நாளை ஒருவேளை தோற்க்கலாம் .. ஆனால் பாசிசத்தின் கொடூர பற்கள் நம்மை கடித்து குதறிக்கொண்டே இருக்கும்.. அதன்பற்களை பிடிங்கியெறி வேண்டும்.. அதன் தொடக்கமாக நாளை பெங்களுரூ விதான்சபா..இருக்கட்டும்..
..
சனநாயகம்
..கர்நாடகவில் மாஃபியா ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக