மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது
மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும்?
மோடி ஆட்சி இனி காலி
இந்தியாவில் இருந்து வெகு விரைவில் துடைத்து எறியப்பட வேண்டிய ஓர் தீய சக்தி தான் மோடி
மன்மோகன் ஆட்சியில் நடக்காத பல அக்கிரமங்கள் மோடி ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது
ராணுவ சீருடை
அதில் சில ஆவடியில் உள்ள ராணுவ சீருடை நம் மதிப்பிற்குரிய ஊறுகாய் மாமி நிர்மலா அவர்களின் உத்தரவின் பேரில் மூடுவிழா கண்டது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும்.
ராணுவ வீரர்களின் உடைகளுக்கான செலவை அவர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்த போகிறார்களாம் இதனால் நாடு முழுவதும் 12,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….
ராணுவ வீரர்களின் சீருடை தயாரிக்கும் உரிமையையே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது எந்த மாதிரியான பாதுகாப்பு என்பது தெரியவில்லை. இனி தீவிரவாதிகள் மிக எளிதாக அதிகாரப்பூர்வ ராணுவ உடையில் கூட வலம் வரலாம்….
அடுத்தது இன்னொரு பேரிடி நம் கேடி அரசால் காத்திருக்கிறது. அது என்னவென்றால்
ரயில்வே பள்ளிகள் மற்றும் ரயில்வே மருத்துவமனைகளை மத்திய அரசு வரும் 2019 க்குள் முழுமையாக மூடிவிடுமாம்.
அடுத்து வரும் காங்கிரஸ் அரசு மூடியதை திறக்கும். ஆனால் 2019 க்கு பின் பாஜக என்னும் ஒரு கட்சியே இந்திய அரசியல் வரலாற்றில் இருந்து துடைத்தெறிய படும் பரவாயில்லையா?
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், ரயில்வே துறையில் பணியாற்றும் ஆங்கிலேயர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், சென்னை, திருச்சி, மதுரை, அரக்கோணம், ஈரோடு, ஜோலார்பேட்டை, போத்தனூர், விழுப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, ரயில்வே பணியில் இல்லாதவர்களின் பிள்ளைகளையும் இந்தப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப் பட்டனர். மிகக் குறைந்த கட்டணத்தில், ஏழை எளிய குடும்பங்களின் பிள்ளைகளும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்ற தெற்கு ரயில்வேயின் திடீர் அறிவிப்பு, இங்கு படித்துவரும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், சில நூறு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இயங்கிவரும் ரயில்வே பள்ளிகள் 2019-ல் மூடப்படும். இங்கு படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது’ என ரயில்வே பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்துவரும் சுமார் 6,800 மாணவ, மாணவிகள் இங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ரயில்வே பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக, ரயில்வே மருத்துவமனைகளையும் மூடப்போவதாக வெளியாகியுள்ள செய்தி, இந்த மருத்துவமனைகளை நம்பியுள்ள ரயில்வே தொழிலாளர்களைப் பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள ரயில்வே மருத்துவமனை, ரயில்வே தொழிலாளர்களுக்காக பிரிட்டிஷ் அரசால் 1925-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 500 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் சிகிச்சை, மருந்துகள் என அனைத்தும் இலவசம். தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள், சுமார் ஒன்றரை லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என சுமார் ஐந்து லட்சம் பேர் இந்த மருத்துவமனைகளால் பயனடைந்துவருகிறார்கள். காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவம் தொடங்கி இதய அறுவை சிகிச்சை வரை பல சிறப்பு மருத்துவப் பிரிவுகள் இந்த மருத்துவமனையில் உண்டு. பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் டி.ஜே.செரியன் இந்த மருத்துவமனையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவமனை களையும் மூட மத்திய அரசு நடவடிக்கை
இந்த மருத்துவமனையை மட்டுமல்ல, அரக்கோணம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் மருத்துவமனை களையும் மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் ரயில்வே மருத்துவமனை களில் 2,597 டாக்டர்களும், 54,000 துணை மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தை யும் மூடிவிட வேண்டும்’ என்று கங்கணம் கட்டி கொண்டு மோடி செயல்படுகிறார். இதுபோல் மன்மோகன் அவர்கள் கேவலமாக செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
நரேந்திர மோடி அரசு
இந்திய ரயில்வேயை ‘மறுசீரமைப்பு’ செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்தது ரயில்வே பள்ளிகள் மற்றும் ரயில்வே மருத்து வமனைகள் உள்பட எல்லா வற்றையும் மூடுவதற் கும், ரயில்வேயை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதற்கும் அச்சாரம் போடுவதாக விவேக் தேப்ராய் கமிட்டியை அது அமைத்தது. இந்த கமிட்டி பல ‘முக்கிய’ பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் விளைவுதான், இந்த மூடல் நடவடிக்கை.
மைய (Core) வேலைகளை மட்டும்தான் ரயில்வே செய்ய வேண்டும்; மையம் அல்லாத (Non Core) வேலைகளை ரயில்வே செய்யக் கூடாது என்பது விவேக் தேப்ராய் கமிட்டியின் முக்கியமான பரிந்துரை.
ரயில்களை இயக்குவது என்பதுதான் ரயில்வேயின் மைய வேலை. இது தவிர பாதுகாப்பு உட்பட எல்லாவற்றையும் அவுட்சோர்சிங் செய்துவிட வேண்டும் என்கிறது விவேக் தேப்ராய் கமிட்டி
பாதுகாப்புப்படை என்கிற ஓர் அமைப்பு தேவையே இல்லை
ரயில்வே பாதுகாப்புப்படை என்கிற ஓர் அமைப்பு தேவையே இல்லை’ என்பது இந்த கமிட்டியின் ஆபத்தான பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப்படையை இனி கலைத்துவிடுவார்கள். அதற்குப் பதிலாக, அந்தப் பணியை தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைத்து விடுவார்கள். ரயில்களில் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது எந்த அளவுக்குப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்குமே புரியும்.
பயணிகள் ரயில்களையும் சரக்கு ரயில்களையும் இயக்குவதற்கு உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப் போகிறார்கள். இவற்றையெல்லாம் அமல் படுத்த, ‘ரயில்வே வளர்ச்சி ஆணையம்’ அமைக்கப் போகிறார்கள். அதற்காக, மத்திய அமைச்சரவையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில்வே சட்டத்தைத் திருத்தியே ரயில்வே ஆணையம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அந்த ஆணையத்தை மத்திய அரசு அமைக்கிறது.ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைக்கப்பட்டு விட்டால், அனைத்தையும் அதுதான் முடிவு செய்யும். ரயில்வே நேர அட்டவணை, வழித்தடங்கள் உள்பட அனைத்தையும் அந்த ஆணையமே முடிவு செய்யும். தனியாரை அனுமதிப்பதால்,அரசு இயக்கும் ரயில்களில் பாதி குறைந்து விடும். பாதி ரயில்கள் தனியாருக்குப் போய்விட்டால், ரயில்வே தொழிலாளர்களில் பாதிப் பேர் வேலையை இழப்பார்கள். முக்கிய ரூட்களைத் தனியாருக்குக் கொடுத்துவிடுவார்கள். இதனால், ரயில் வேயின் வருமானத்தில் பாதி குறைந்துவிடும். உபரி யாகும் பாதித் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமாட்டார்கள். தெற்கு ரயில்வேயில் ஒரு லட்சம் தொழிலாளர்களும், சுமார் ஒன்றரை லட்சம் ஓய்வூதிய தாரர்களும் உள்ளனர்.
ரயில் தொழிலாளர்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதான அக்கறையில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் ஆங்கிலேய அரசு அன்று திறந்தது. யார் மீதான அக்கறை யில் இவற்றையெல்லாம் மோடி அரசு மூடுகிறது? வெள்ளைக்காரனை காட்டிலும் கேவலமான கொலைகாரனாக அல்லவா இந்த மோடி மஸ்தான் அரசு இருக்கிறது. உலகிலேயே அதிகம் பேர் பணிபுரியும் நிறுவனங்களின் பட்டியலில், எட்டாவது இடத்தில் உள்ளது இந்திய ரயில்வே. இந்த நிறுவனத்தை, அதன் பெருமை சிதையாமல் காப்பாற்றுவதே சரியான முடிவாக இருக்கும்.
ஊழல்வாதி என்று குற்றம் சாட்டப்பட்ட லாலு ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ரயில்வேத்துறை எவ்வாறு? லாபத்தோடு இயங்கியது.
இந்த மோடி அரசு செய்யும் அணைத்து தவறுகளையும் நான் ஆதரித்தால் தான் எனக்கு ஹிந்து என்னும் அடையாளம் கிடைக்கும் என்றால் தக்காளி எனக்கு ஹிந்து என்னும் அடையாளமும் வேண்டாம் பிராமணன் என்னும் அடையாளமும் வேண்டாம். நான் முதலில் இந்தியன்.
மன்மோகன் ஆட்சியில்
உடனே ஈழத்தில் 1.75 லக்ஷம் னு ஆரம்பிப்பாங்க. அதை நினைத்து நானும் கண்ணீர் விட்டு வருந்தினேன். அதே சமயம். ராஜீவ் காந்தியோடு உடன் இருந்த 14 அப்பாவிகளும் குண்டினால் இறந்தது தமிழர் போராளி பத்மநாபா மட்டும் அல்லாமல் அவர் உடனிருந்த 12 நபர்கள் அந்த 12 நபர்களில் டீ கொடுத்த சிறுவனும் அடக்கம். அந்த சிறுவன் உட்பட அனைவரும் கோடம்பாக்கத்தில் இறந்தது முதலான பல விஷயங்கள் என் கண் முன்னாடி வந்து, வந்து போகுது.
காங்கிரஸ் ஆட்சியில் இந்த திருமுருகன் போன்ற பிரிவினை வாதிகள் எல்லாம் அட்ரசே இல்லாமல் இருந்தார்கள். உடனே காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியாவில் இருந்து பாக் பிரிந்தது என்னும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கி கொண்டு வந்து விடுவீர்கள்.
இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலை காட்டிலும் மோடி பெரிய ஆளா? அவராலேயே அன்று பிரிவினையை தடுக்க முடியவில்லை. மோடியால் என்ன செய்திருக்க முடியும். சுருக்கமாக சொன்னால் பட்டேல் பாக் பிரிவினைக்கு ஆதரவாக ஒட்டு போட்டார். காந்தி அதற்கு எதிராக ஒட்டு போட்டார். பட்டேல் ஏன்? அவ்வாறு. செய்தார்
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 2 நாடுகளில் உள்ள இன்றைய மொத்த மக்கள் தொகை 36 கோடி ஏற்கனவே நம் நாட்டின் அதிக மக்கள் தொகை நமக்கு ஒரு முட்டுக்கட்டை. இதில் அந்த 36 கோடி கூடுதல் சுமை. பிரிவினை வாத எண்ணம் கொண்ட அந்த 36 கோடி பேர் இந்தியாவுக்கு ஒட்டு போட்டால் அதன் விளைவு எவ்ளவு? பயங்கரமாக இருக்கும்.
மேலும் ஒரு காஷ்மீரையே நம்மால் சமாளிக்க முடியல. மோடி பவருக்கு வந்தும் காஷ்மீரில் இன்னமும் கல் எறிதல் நடந்து கொண்டு தான் இருக்கு. சமீபத்தில் கூட நாம் திருமணி என்னும் ஒரு அப்பாவியை இழந்தோம். பாக், பங்களாதேஷ் லாம் இன்றும் இந்தியாவோடு இருந்திருந்தால் நம் நாட்டில் மேலும் ஒரு 10, 12 காஷ்மீர் இருக்கும். கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஆக எல்லாம் நன்மைக்கே.
இப்பகூட ஒன்னும் கெட்டுபெய்டல. இன்னும் 1 ஆண்டு அவகாசம் இருக்கு. அதற்குள் மோடி தனது அரசாங்கம் செய்த தவறுகளை திருத்தி கொண்டால் மீண்டும் மோடி சர்க்கார் ஆட்சிக்கு வரும் இல்லையேல்
மோடி ஆட்சி இனி காலி.
எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததன் விளைவு தொடர்ந்து 25 ஆண்டுகளாக வென்று கொண்டிருக்கும் கோரக்பூர் தொகுதியிலேயே பாஜக மண்ணை கவ்வியது. அது தான் 2019 இல் இந்தியா முழுவதும் நடக்கும்
Written by KrishNa Prashad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக