அத்வானிக்கு மோதி ‘மரியாதை’ செலுத்தாதது பற்றி பல மீம்கள், பல மீம்கள், ஸ்டேட்டஸ்கள்.
என்னமோ அத்வானி மனிதருள் மாணிக்கம் போலவும், அந்த ‘உயர்ந்த’ ஜீவனை மோதி மதிக்காதது போலவும் இப்போதைய kids, அத்வானியின் ரதயாத்திரை பற்றிப் படித்துப் பாருங்கள் மோதிக்கு அப்பர் அவர் என்று தெரியும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் அத்வானியின் ரதயாத்திரையே இருந்தது இப்போது அத்வானிக்கு நேர்ந்தது பின்னால் மோதிக்கும் நேரலாம்~! இதையெல்லாம் நாம் கண்டுகொள்ளவே கூடாது
சீனியர் அம்மாவாசை அண்ட் ஜூனியர் அம்மாவாசைகளுக்குள் ஆயிரம் இருக்கும்
அத்தனை சக்தி படைத்து, ‘வானளாவிய அதிகாரம்’ பெற்றிருந்த அத்வானியே இப்போது மோதியைப் பார்த்துக் கூழைக்கும்பிடு போடுகிறார் என்றால் அதுதான் சந்தர்ப்பவாத அரசியல் மக்களிடம் செல்வாக்கு பெறாமல் இருந்து
சுயமரியாதை உள்ள தலைவன் இதைச் செய்யமாட்டான்
இனவாதத்தைத் தூண்டும் அத்தனை போலிகளுக்கும் இந்த நிலைதான் யாரையெல்லாமோ பார்த்து கூழைக்கும்பிடு போடவேண்டி இருக்கும் வண்டிகளின் டயர்களைப் பார்த்து விழுந்து கும்பிட்ட நிலைதான்
சுயமரியாதை உள்ள தலைவன் இதைச் செய்யமாட்டான் அதுதான் நிஜமான மக்களின் தலைவர்களுக்கும், தன்னைத்தானே தலைவராக நினைத்துப் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கும் போலிகளுக்கும் வித்தியாசம்.
பி.கு – the disclaimer was deleted, owing to the comments from friends.
Written By Karundhelrajesh