ஆ.ராசா மீது குற்றச்சாட்டு இதுதான் இந்திய அரசியல்!
ஆ.ராசா மீது குற்றச்சாட்டு! இதுதான் இந்திய அரசியல் நியூஸ் 18 டிவியில் அண்ணன் ஆ.ராசா அவர்களது பேட்டி முழுவதுமே சின்ன சின்ன பகுதியாக பிரித்து போடலாம்!
ராசா மீது குற்றச்சாட்டு எழுந்த பிறகு அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார்! அதன்பிறகு நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவிக்கிற நிகழ்வொன்றில், ராசா ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கலந்துகொள்கிறார்!
விழா முடிந்து வரும்போது பிரதமர் மன்மோகன் சிங், ஆ.ராசா வை முதுகில் சினேகமாக தட்டுகிறார். நேற்றுவரைக்கும் தன்னுடைய அமைச்சரவையில் இருந்த ஒருத்தரை பிரதமர் முதுகில் கை வைக்கிறார்!
ஆண்டுகள் உருண்டோடுகின்றன
ஒரு அமைச்சரிடம் முறைகேடாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது என்பதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வருமானவரித்துறை தெரிவிக்கிறது. அதை ஆதாரமாக நீதிமன்றத்திலே காட்டி இந்திய தேர்தல் ஆணையம் ஆர் கே நகர் தேர்தலை நிறுத்துகிறது! அந்த அமைச்சர் அதன்பிறகு தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்யப்படுகிறார்.
அந்த அமைச்சரவை ஏற்பாடு செய்த ஒரு அரசு விழாவிற்கு பிரதமர் மோடி வந்து கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகிறார்!
இப்போது அன்றைய தினம் ராசாவை கேலி பேசிய எந்த ஊடகங்களும் மோடி மீது விமர்சனம் வைக்கவில்லை..!
இதுதான் இந்திய அரசியல்..!
– Sivasankaran Saravanan