வேல்முருகன் மாதிரி டோல்கேட்ட அடிக்கணும் நாம் தமிழர் மாதிரி ஐ.பி.எல் ரசிகர அடிக்கணும்
தி.மு.கவுக்கு சில அறிவாளிகள் புத்திமதி சொல்றாங்க வேல்முருகன் மாதிரி டோல்கேட்ட அடிக்கணும் நாம் தமிழர் மாதிரி ஐ.பி.எல் ரசிகர அடிக்கணும் பாம்பு உடுவன்னு சொல்லணும் டோல்கேட்டை அடிக்கலாம், ஐ.பி.எல்ல அடிக்கலாம், அப்புறம் அடுத்ததா என்ன செய்யறது… ஊர, நாட்ட கொளுத்தறதா ?கிறுக்குத்தனமா இல்லியா?
அந்தக் கட்சிகள் எல்லாம் முகம் தெரியாத அமைப்பு. கேஸ் போடணும்னா ஆள் தெரியாது. மிஞ்சிப் போனா, 10 பேர் பெயர் தான் தெரியும்.
தி.மு.க இது போல் போராடினால், சென்னையிலேயே 10,000 பேர் மீது வழக்கு போடும் அளவுக்கு முகம் அறிமுகமானவர்கள். அரசாங்கம் சும்மா இருக்குமா…
உதிரிக்கட்சி போராட்டம் பண்ணினா, அது ஆளுங்கட்சிக்கு மகிழ்ச்சி. காரணம், தி.மு.க போராட்டத்தின் மீதிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் உத்தி அது. அதனால் உதிரிக்கட்சிகள் ஆட்டத்தை ஆளுங்கட்சி கண்டும், காணததுமா இருக்கும். ஆனா தி.மு.கன்னா விடமாட்டான்.
கடந்த ரெண்டு வருடத்தில் தி.மு.க நிர்வாகிகள் மீது மாத்திரம், போராட்டங்களால் அஞ்சு கேஸ் விழுந்திருக்கும். அது கோர்ட்டு விசாரணைக்கு வந்தால், மாதம் அய்ந்து நாட்கள் கோர்ட்டுக்கு அலையணும். அப்படி அலைந்தால் மற்ற பணிகள் பாதிக்கப்படும்.
அவங்க குடும்பத்தில் இருக்கறவங்க, உனக்கு அரசியல் போதும், குடும்ப வேலைய பாருன்னு சொல்லிடுவாங்க.
அடுத்தக்கட்டம் குண்டாஸ் போட்டு திமுக நிர்வாகிகள முடக்கப் பார்ப்பாங்க.
குண்டாஸ் போட்டா, ஜெயில்ல இருந்தும், கேஸ்க்கு செலவு செய்தும் அசந்து போகணும்.
களத்தில் இருப்பவனுக்கு தான் யதார்த்தம் தெரியும். கொஞ்சம் புரிஞ்சு எழுதுங்க.
இதெல்லாம் தெரியாமலா தலைமை இருக்கும்…
அடுத்தது நடைபயணம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் எல்லாம் அவுட் டேட்டட் வழிமுறையாம்.
சாப்பிடறது, தூங்கறது எல்லாமும் தான் காலம்காலமா செய்றோம். அது அவுட் டேட்டட் ஆயிடுமா…
நடைபயணம், பொதுக்கூட்டம் எல்லாம், நாங்க உங்களுக்காகத் தான் போராடறோம்னு மக்களுக்கு தெரிவிப்பவை. மக்களை போராட்டத்தில் இணைய வைப்பவை. மக்கள் இணையாமல் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது.
வன்முறைப் போராட்டங்கள் வெல்லாது என்பதற்கு சமீபகால உதாரணங்கள் நிறைய, விடுதலைப்புலிகள், அல்கயிதா என. உலகையே மிரட்டும் வகையில் எழுச்சிக் கண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இப்போது சீட்டுக்கட்டாக சரிந்துக் கொண்டிருக்கிறது.
வன்முறை, பட்டாசு போல. அந்த நேரத்தில் பயமுறுத்தும் வகையில் ஓங்கி ஒலி எழுப்பும், கண்ணைப் பறிக்கும் ஒளி எழுப்பும், பின் காட்சியை மறைக்கும் புகை கிளப்பும். ஆனால் கடைசியில் கரி தான் மிஞ்சும்.
அகிம்சை போராட்டங்கள் விளக்கு போல. அதிர வைக்காது, அலற வைக்காது, கண்ணைப் பறிக்காது. ஆனால் நின்று எரியும், மனதில் பதியும், வெளிச்சம் தரும். கரியாகாது, வழிகாட்டும்.
தொடர் போராட்டம், முழு அடைப்பு, ரயில் மறியல், சாலை மறியல், நடைபயணம், கருப்புக்கொடி, பொதுக்கூட்டம் என்ற தளபதி அவர்களின் பயணம் வெளிச்சம் தரும், வெற்றி பெறும்.
Sivashankar SS
# நடப்போம், குரல் கொடுப்போம், உரிமை மீட்டெடுப்போம் !