ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள்
ஜூம்ஆ தொழுகைக்கு ஆதரவாக திரண்ட இந்து சகோதரர்கள் ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் பள்ளிவாசல்களில் இடப்பற்றாக்குறை காரணமாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை அருகில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகிறது..
சமீப காலமாக தீவிர இந்துத்துவ சக்திகள் பொதுவெளியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துபவர்களின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்..குறிப்பாக குருகிராம் மாவட்டத்தில் மிரட்டல் அதிகமாக இருந்தது…
“” முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் இடப்பற்றாக்குறை காரணமாக வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை வெளியில் செய்வது காலங்காலமாக நடைபெற்று வருகிறது என்றும் இதனால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் இந்துக்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்பதால் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளனர்…
இன்றைய ஜும்ஆ தொழுகை 47 பொது இடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது…
Colachel Azheem