4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு
4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு மொத்தம் ரூ.953.54 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதுமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் பதவியேற்றது முதல் தற்போது வரை விளம்பரங்களுக்காக செய்துள்ள மொத்த செலவின் தொகையை தெரிவிக்குமாறு மும்பையைச் சேர்ந்த அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.
அதில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரூ.4 ஆயிரத்து 300 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் விமர்சனங்களுக்கு இடையில் 2017-ஆம் ஆண்டில் இந்த செலவில் இருந்து ரூ.308 கோடி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பாக நிதி ஆலோசகர் தபன் சூத்ரதார் வெளியிட்ட தகவல்களில் கூறி இருப்பதாவது:-
நிதியாண்டு மற்றும் துறை ரீதியாக மத்திய அரசு விளம்பரங்களுக்காக செய்த மொத்த செலவுகளின் விவரம் பின்வருமாறு:
2014 ஜூன் முதல் 2015 மார்ச் வரை:அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.424.85 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.448.97 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.79.72 என மொத்தம் ரூ.953.54 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2015-16 நிதியாண்டு: அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.510.69 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.541.99 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.118.43 என மொத்தம் ரூ.1,171.11 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2016-17 நிதியாண்டு:அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.463.38 கோடி, டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.613.78 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.185.99 என மொத்தம் ரூ.1,263.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
2017-18 நிதியாண்டு:டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்காக ரூ.475.13 கோடி மற்றும் பொதுவெளி விளம்பரங்களுக்காக ரூ.147.10 செலவு செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் அச்சு ஊடக விளம்பரங்களுக்காக ரூ.333.23 செலவு செய்துள்ளது. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரை மொத்தம் ரூ.955.46 கோடி செலவு செய்யப்பட்டுள்ள
Thanks By Dinathanthi