இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல கிருஷ்ணசாமி
இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல! கிருஷ்ணசாமி~ எது சரியில்லையென்கிறார் சகமனிதனை மதிக்க கூடாதென்கிறாரா .. ஏற்றதாழ்வோடு தாழ்ந்தவன் உயர்சாதிக்காரன் என பேதம் கொண்டு துண்டை கக்கத்தி வைத்துக்கொண்டு கும்பிடுறேன் சாமி என சொல்வதுதான் சரியென்கிறாரா.. இவர் அப்பன் பாட்டன் போல செருப்பை கையில் தூக்கிக்கொண்டு ஜாதி தெருக்களில் செல்ல தயாரென்கிறாரா.. இவரும் இவர் குழந்தையும் இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறிவிட்டு .. இவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட யாரும் இடஒதுக்கீட்டில் படிக்காமல் உயர்ஜாதிகாரன் பணம் படைத்தவன் மட்டும் உயர்கல்வியை பெறுவதுதான் சரி என்கிறாரா?
..
தான் கட்டும் மருத்துவக்கல்லூரிக்காக எந்த இடைஞ்சலும் வரகூடாதென்று பாசிசத்தின் காலில் விழுந்து கிடக்கிறவர் தன் சமூகத்தையே பள்ளத்தில் தள்ளிவிட நினைக்கிற கேடுகெட்ட எண்ணம் இவரை இப்படி பேச வைக்கிறது பாவம் யாருமே கண்டுக்கொள்வதில்லை ஆனாலும் எதாவது உளறிக்கொண்டே இருப்பார்
பெரியாரின் கொள்கைகள் வேண்டாமாம்.. பார்பணீயத்திற்கெதிராக .. வர்ணம் கொண்டு பிரித்து தன்னை உயர்ந்தவனாய் காட்டி .. எல்லாருடைய உரிமைகளையும் பறித்து அனுபவித்து வந்ததை தடுத்து அனைவருக்கும் எல்லா கிடைக்கவேண்டும் கல்வி வேலைவாய்ப்பில் அவனுக்குரிய இடங்களை உறுதி செய்யவேண்டுமென்று பாடுபட்ட பெரியாரும் அம்பேத்கரும் வேண்டாம் .. குலக்கல்வி திட்டத்தோடு இந்த சமூகத்தில் சாக்கடை அள்ளுகிறவனின் மகன் அதே தொழிலை செய்தால் போதும் அவனும் உயர்பதவிக்கெல்லாம் வரகூடாதென்று நினைக்கிற எண்ணம் கொண்டோரோடு சேர்ந்ததால் சகதி உருளும் பன்றியாகிப்போனார்