பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை
இந்த ட்வீட்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் நாடாளுமன்றப் பிரசாரத்துக்காகவும் பிரதமர் மோடி காஞ்சிபுரம் வந்திருந்தார். எப்போதும் போல இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வண்ணம் நெட்டிசன்கள் #GoBackModi, #GoBackSadistModi போன்ற பல ஹேஷ்டேக்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகின. இவற்றில் பல பாகிஸ்தானிலிருந்து பதிவிடப்பட்டன எனச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் எலியட் ஆல்டர்சன் என்ற புனைபெயர் கொண்டிருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் மற்றும் பிரபல ஹேக்கர் அப்படி நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆதார் தகவல் லீக் ஆன சர்ச்சையை வெளிக்கொண்டு வந்தவர் இவர்தான்.
இன்று ட்விட்டரில் இதுகுறித்து பல தகவல்களை அவர் தெரிவித்தார். அதில் #GoBackSadistModi மற்றும் அதற்குத் தொடர்புள்ள ட்வீட்களாக மொத்தம் 68,543 ட்வீட்கள் நேற்று மட்டும் ட்விட்டரில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நேரங்களில் நிமிடத்திற்கு 250 ட்வீட்களும், ஒரு மணிநேரத்துக்கு 12,000 ட்வீட்களும் பதிவாகியுள்ளன. மேலும் இந்த பீக் ட்ரெண்ட்நேரத்தில் 41174 ட்வீட்கள் #GoBackSadistModi என்ற ஹேஷ்டேக்குடனும், 16818 ட்வீட்கள் பதிவாகியுள்ளன
மேலும் பல தகவல்களை தெரிவித்த அவர் உங்கள் கனவுகளை கலைத்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.ஆனால், இந்த ட்வீட்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக