Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்?

ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்?

ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்? ஜெயலலிதா செய்திருக்கும் ஊழலைப் பார்த்தால் தோண்டி எடுத்து தண்டனை கொடுத்தாலும் தகும் போல! 3 லட்சம் கோடி என்பது தமிழகத்தின் தற்போதைய கடன் சுமையில் முக்கால்வாசி இது வருமான இழப்பு எல்லாம் அல்ல. பச்சைத் திருட்டு பச்சை ஊழல்

வெள்ளை நிற உயர்ஜாதிப் பெண்மணி

ஜெயலலிதா செய்த ஊழல்
ஜெயலலிதா செய்த ஊழல்


ஜெயலலிதா செய்த ஊழல் மூலம் பயனடைந்தவர் யார்?

இந்திய வைர வியாபரத்தையே ஆட்டிப்பார்த்திருக்கும்
ஜெயலலிதா செய்த ஊழல் ஆனால் கவலைப்படாதீர்கள். கண்டெய்னர் விவகாரம் போல இதுவும் இரண்டொரு தினங்களில் காணாமல் போகும். அல்லது, “தள்ளாத வயதில் ஜெயலலிதா ஓடி ஆடி சிறுகச் சிறுகச் சேர்த்த 3 லட்சம் கோடியை திருடிய மன்னார்குடி மாஃபியா,” என செய்தி போடுவார்கள். அதைப் பார்த்தால் ஜெயலலிதா எனும் வெள்ளை நிற, உயர்ஜாதிப் பெண்மணி யின் மேல் உங்களுக்குப் பரிதாபம்தான் வரும். ஆனால் உண்மையில் யார் தெரியுமா பரிதாபத்துக்கு உரியவர்கள்?நீங்கள்தான்!!

பார்ப்பன ஊடகங்களின் பல்லாண்டுகால விஷமப் பிரச்சாரத்துக்கு பலியாகி, சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிட்ட நீங்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்!எடப்பாடி, ஓ.பி.எஸ்சை விட பெரிய அடிமைகள்!

மூன்று லட்சம் கோடி பணத்தை வைரமாக மாற்றிய ஜெயலலிதா

1950களிலேயே, அதாவது எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே காரும், பங்களாவும் வாங்கிய கலைஞரை, அரசியலால் சம்பாதித்தவர் என்றும், போயஸ் தோட்டம் ஜப்திக்கு வந்த சூழலில் அரசியலுக்கு வந்து சாகும்போது மூன்று லட்சம் கோடி பணத்தை வைரமாக மாற்றிய ஜெயலலிதா வை இரும்புப் பெண்மணி, மகாராணி என்றும் அவர்களால் உங்களை நம்ப வைக்க முடியும்.

பிரியாணிக்கடையில் ஒரு பொறுக்கி சோத்துக்காக போட்ட சண்டையை திமுக எனும் இயக்கத்தின் மேல் எழுதி உங்களை எல்லாம் பேச வைத்த அயோக்கியர்கள், பொள்ளாச்சியில் அதிமுக பெயரைச் சொல்லி மாணவிகளை ஆபாசப்படம் எடுத்து குரூரமாக சித்திரவதை செய்த ஆளுங்கட்சி கும்பலைப் பற்றி பேசவே மாட்டார்கள். நீங்களும் ஏதோ பக்கத்து ஊர் செய்தி போல கடந்துபோவீர்கள். ப்ரியாணியில் காட்டிய அக்கறையைக் கூட தமிழ் மாணவிகளின் மேல் காட்டமாட்டீர்கள்

நீட் தேர்வை விட உதயநிதி கிராமசபை கூட்டத்துக்கு வருவதுதான் நாட்டை நாசமாக்கும் பெரிய பிரச்சினை

நீட் தேர்வை விட உதயநிதி கிராமசபை கூட்டத்துக்கு வருவதுதான் நாட்டை நாசமாக்கும் பெரிய பிரச்சினை என அவர்களால் உங்களைப் பேச வைக்க முடியும்.

தூத்துக்குடியில் அத்தனை பேரின் உயிர் சேதத்தை விட ஸ்டாலின் ஒரு பழமொழியை தவறாகச் சொல்வதுதான் மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்சினை என அவர்களால் உங்களை நம்ப வைக்க முடியும். ஊழலில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்தான் அயோக்கியர். ஜெ பரிசுத்த ஆத்மா என அவர்களால்தான் உங்களை நம்ப வைக்க முடியும். ரஃபேல் ஊழல் ஏதோ அண்டை நாட்டுப் பிரச்சினை போல, அந்த ஊழல் பற்றிய செய்தி எல்லாம் உங்கள் காதுகளை அண்டாமலேயே செய்துவிட அவர்களால் முடியும்

அவர்களால் எதுவும் முடியும். உங்களை எப்படியும் ஆட்டுவிக்க முடியும். அட்டையைப் போல் உங்கள் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு, மேலே இருக்கும் மின்விசிறியைக் காட்டி, உங்கள் ரத்தம் வற்றிப்போக அதுதான் காரணம் எனச் சொன்னாலும் மனதார நம்புவீர்கள். பாவம் நீங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்!!

நாங்கள் மைனாரிட்டிகள்தான் எங்களுக்கு ஜனநாயகம் என்பது ஒவ்வொருமுறையும் பெரும் போராட்டம்தான் பெரும்பாலும் ஏமாற்றம்தான். 1991லும், 2001யிலும், 2016யிலும் ஏன் திமுகவைத் தோற்கடித்தீர்கள்? பதில் சொல்லுங்களேன். அப்போதைக்கு ஏதாவது பரப்பி இருப்பார்கள். அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடியிருப்பீர்கள்.

கலைஞர் கட்டிய எல்லாவற்றுக்கும் எம்.ஜி.ஆர் பெயரை வைக்க அதிமுகவினர் துடிக்கிறார்களே. ஏன்? 13 ஆண்டுகால தொடர் ஆட்சிகாலத்தில் எம்.ஜி.ஆர் ஒன்றுமே கட்டவில்லையா? இல்லை! ஒன்றுமே கட்டவில்லை. அதனால்தான் அடுத்தவன் குழந்தைக்கு இனிஷியல் போட்டுத் தனதாக்கத் துடிக்கிறார்கள். ஆனாலும் எவனாவது மேடையில் நின்று, “புரட்சித்தலைவர் ஆட்சி அமைப்பேன்,” என்றால் உடனே கைதட்டுவீர்கள்!! கலைஞர் நல்லாட்சி செய்தார் என அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ யாராவது பேசினால் சிரிப்பீர்கள். கிண்டல் செய்வீர்கள். ஏன் எம்.ஜி.ஆருக்கு கைதட்டுகிறீகள்? ஏன் கலைஞரைப் புகழ்ந்தால் நக்கல் அடிக்கிறீர்கள்? என்ன கணக்கு அது? உங்களுக்கு எப்படித் தெரியும் பாவம்!! உங்களை அப்படியே பழக்கப்படுத்திவிட்டார்கள்.

நாங்கள் யாரையும் புனிதப்படுத்தவில்லை. நாங்களும், எங்கள் தலைமுறையும் யாரால் நன்றாக இருக்கிறோம் எனப் பார்க்கிறோம். புள்ளிவிவரங்கள், தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது.

யார் எங்கள் தலைவர் என்பதை அதை வைத்து தேர்ந்தெடுக்கிறோம். அன்று அண்ணா, பின்னர் கலைஞர், இன்று ஸ்டாலின். இந்தத் தேர்வு கூட பச்சை சுயநலம்தான். எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும். எங்கள் தலைமுறை நீட்டுக்கு பலியாகக் கூடாது.

மதவெறிக்கு ஆளாகக் கூடாது. கல்வியுரிமையோடு வாழ வேண்டும். தென்னக ரயில்வேயில் இந்திக்காரர்களை பணியமர்த்தி உள்ளார்களே, அது எல்லாம் நம் அண்ணன், தம்பிகளுக்கு, அக்காள், தங்கைகளுக்குப் போக வேண்டிய இடம் தானே! அதை எல்லாம் திரும்பப் பெற வேண்டும். அவ்வளவுதான்.

இதையெல்லாம் யார் செய்வார்களோ, யார் ஆட்சியில் இதெல்லாம் இல்லாமல் இருந்தது என வரலாறு எங்களுக்கு கைகாட்டுகிறதோ, புள்ளிவிவரங்கள் கைகாட்டுகிறதோ அவர்கள்தான் எங்கள் தலைவர்கள்.

ஆனால், உங்கள் அனைவரையும் முழுதாக மாற்ற முடியுமா, காலம்காலமாக பார்ப்பன விஷம் உங்களின் மேல் திணித்த கருத்துக்களைத் தாண்டி உங்களை சுதந்திரமாக சிந்திக்க வைக்க முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதற்கானப் போராட்டத்தை நாங்கள் கைவிடப் போவதே இல்லை. கைவிடப் போவதே இல்லை.

டான் அசோக்
மார்ச் 9, 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left