எந்த ஊர்? எந்த சாதி செய்தியாளர் கோகுல் மீது வன்மம்
எந்த ஊர்? எந்த சாதி செய்தியாளர் கோகுல் மீது வன்மம் கக்கிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் இன்று (28-05-2019) செவ்வாய்க்கிழமை காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , ” நீ எந்த ஊர்? என்ன ஜாதி? ” என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான
டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.
பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும், ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக