மதவாதிகளின் பார்வையில் கம்யூனிசமும் ஒரு “போதனை”
மதவாதிகளின் பார்வையில் கம்யூனிசமும் ஒரு “போதனை” தான். ஏனெனில் அவர்கள் அப்படித் தான் வளர்க்கப் பட்டுள்ளனர். மசூதிகளில் குரான் போதிப்பது மாதிரி, “கம்யூனிச நாடுகளில் கம்யூனிசம் போதிக்கிறார்கள் போலும்” என்று சிறுபிள்ளைத்தனமாக நினைக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, பொஸ்னியா பற்றிய இவரது கூற்றை சரியென எடுத்துக் கொள்வோம்.
பொஸ்னியாவில் சேர்பியர்கள் மட்டுமல்லாது முஸ்லிகளுக்கும் கம்யூனிசம் போதித்து இருப்பார்கள் தானே? உண்மையிலேயே அது நடந்திருந்தால், இன்று வரை சேர்பியர்களும், முஸ்லிம்களும் தமது இன, மத அடையாளங்களை துறந்து, மனிதர்களாக ஒன்று சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள். யுத்தமும் நடந்திருக்காது. ஏனெனில் கம்யூனிசம் சகோதரத்துவத்தை போதிக்கிறது.
பொஸ்னிய போருக்கு காரணம் ஒரு பக்கம் சேர்பிய தேசியவாதம், மறுபக்கம் முஸ்லிம் தேசியவாதம். இல்லாவிட்டால் ஒரு பக்கம் கிறிஸ்தவ மத அடிப்படைவாதம், மறு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படைவாதம். அந்த மக்கள் கம்யூனிசத்தை மறந்து போனதால் ஏற்பட்ட விளைவு. பொஸ்னியாவில் முன்பு சகோதரர்களாக வாழ்ந்த மக்களை, இனவெறியும், மதவெறியும் தான் ஜென்மப் பகைவர்களாக மாற்றின. இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மறுப்பது ஏனோ? இதை எழுதியவருக்கு (Ahmed Jamsath Ahamedsha) உண்மையை பார்க்க விடாமல் மதவெறி கண்ணை மறைக்கிறது.
தகவலுக்காக: சோஷலிசம் (கம்யூனிசம் என்பது வேறு) என்றால் அது ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை குறிக்கும். பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் மார்க்சிய லெனினிசம் தனிப் பாடமாக படிப்பித்தாலும் அதை எல்லோரும் கவனமெடுத்து படிப்பதில்லை. ஏனெனில் அரசியலில் எல்லோருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அது மனித இயல்பு
Written By Kalai Marx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக