பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா
இப்போதும் பொருந்துகிறது ரஞ்சித் போன்றவர்களின் அறியாமை யை காணும் போது
பெரியாரை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் ஜெய்பீம் என சொல்ல தயாரா என்கிறார் இளம் இயக்குனர் ரஞ்சித்
ஏன் அண்ணலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் அண்ணல் அம்பேத்கர் மீது மரியாதை உண்டு .. ஒடுக்கபட்ட சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளை தன் திறமை மூலம் பெற்றவர்.. தான் பிறந்த மதத்தின் இழிவுகளை போக்க தன் சார்ந்த மக்களை புத்தமதம் தழுவ செய்தால் புனிதராகிவிடலாமென்ற நினைத்து மாறியவர்
அதிலிருந்தே தான் தாழ்ந்தவர் என்ற எண்ணம் கொண்டிருந்தாரென அறிய முடிகிறது..
தான் சார்ந்த சமூக பின்னணியில் இருந்து மிகப்பெரிய மாற்றத்தை வடமாநிலங்களில் குறிப்பாக மராட்டியத்தில் அவரால் கொண்டுவர முடியவில்லையே வெகுமக்களை ஒருங்கிணைக்காத
அல்லது வெகுமக்கள் ஆதரவில்லாத எதுவும் எந்த மாற்றத்தையும் தர முடியாது.. ஆனாலும் அம்பேத்கர் வாழ்க என்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் பெரியாரை நாங்கள் ஏற்கவேண்டுமெனில் ஜெய்பீம் என அழைக்க வேண்டுமென்ற நிபந்தனை நிச்சயமாக தலித் மக்களை வெகு தூரத்தில் வைக்கவே பயன்படும்
இப்போது மெச்சபட்டிருக்கிற நிலை பெரியாரின் கைத்தடி தந்தது என்பதை உணரவேண்டும்.. தோளில் துண்டை போட கூட அனுமதிக்காத சமூக சூழலை மாற்றி ..
பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது திராவிடம்.. வாடா முனியா என்றழைத்த காலத்தில் மேடை போட்டு முனியாண்டி அவர்களே என விளித்து பழக சொன்னது திராவிடம்.. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமில்லாமல் நாடும்,இனமும் முன்னேறாதென்ற நம்பிக்கையில் உரத்து நின்றது பெரியாரும் திராவிடமும் தான்..
..
தெளிவு போதாமை அல்லது சிறிய வெற்றியின் மமதை இவ்வாறு பேச வைத்திருக்கிறது.. இதே இப்போது இந்த துணிவோடு தமிழகத்தில் கதைக்க முடிகிறதே ..அதற்கு காரணம் பெரியார் திராவிடம்.. இதே போல் மகாராஷ்ட்ராவில் பேசிவிட்டு நடமாட முடியாது .. அந்தளவிற்கு மிக கொடூரமான மனபோக்கை தலித்கள் மீது கொண்டிருக்கிறார்கள்..
குடியரசு தலைவரையே வெளியே நிறுத்துகிற சூழல்
இங்கே 52 லேயே பரமேஸ்வரனை அறநிலையத்துறை அமைச்சராக்கியவர் பெரியார் .. திலகர் உடலை தொட கூட காந்தியை அனுமதிக்காத வரலாறெல்லாம் படியுங்கள் ரஞ்சித்.. இரண்டு சினிமாவில் தலித்திய சிந்தனையை படமாக்கிவிட்டால் எல்லாம் அறிந்தவரென்றோ போராளியென்றோ நினைத்துக்கொண்டு களம் இறங்குகிறீர்
ஒடுக்கபட்ட மக்களுக்காக கால்நூற்றாண்டுக்கு மேலாக பாடுபடும் போராடும் தோழர்.திருமாவிடம் கேட்டுபாருங்கள் பெரியார் யாரென்று தெரியும்
பெரியாரை முன்னெடுக்காவிடில் பெரியாருக்கல்ல இழுக்கு
பெரியாரை முதன்மைப்படுத்த இவர் வேண்டுமென்பதில்லை.. தமிழகத்தில் பெரியாரை திராவிடத்தை கலைஞரை தாக்கினால் பெரிய ஆள் ஆகிவிடலாமென்ற பழைய வறட்டு சிந்தனையின் விளைந்தது தான் இந்த பெரியாரை ஏற்கிறோம் ஜெய்பீம் என சொல்ல தயாரா.. என கேட்பது..
..
பாசிசம் அஞ்சும் ஓரு பெயருண்டு.. இந்த பெயரை கேட்டாலே பாசிசத்தின் குலைநடுங்கும் ..அந்த பெயர் பெரியார்.. ஆனால் ஜெய்பீம் என சொல்லி பாருங்கள் கடித்து குதறிவைக்கும் .. அண்ணல் அம்பேத்கர் அறிவாளி என்பதில் மாற்றுகருத்தே இல்லை ஆனால் .. நல்ல அரசியல் தலைவராகவோ..
தொலைநோக்கு சிந்தனையாளராகவோ.. மக்களின் நாடிதுடிப்பை அறிந்து அவர்கள் மனதை மாற்றியவரில்லை.. ஆனால் பெரியார் .. பிராமணீயத்தின் (ஆரியத்தின்) ஆணிவேரையே அசைத்தவராக.. சமூகநீதிக்காக.. சமநீதிக்காக.. ஒவ்வொரு விடயத்திலும் தொலைநோக்கோடு சிந்தித்து கல்வி வேலைவாய்ப்பு கருத்து சுதந்திரம் பெண்கள் கல்வி அவர்களின் உரிமை என எல்லா படித்தளங்களிலும் கவனம் செலுத்தி புதியதொரு விடியலை தந்தவர்.. நாடு விடுதலை அடைந்ததையே கறுப்புநாளென்றவர்.. சமூகவிடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்து பயனில்லை என்றவர்.. பெரியார் தொலைநோக்கி..
..
எங்களுக்கு பெரியார் போதும்.. நீங்கள்
ஜெய்பீமையே முன்னெடுங்கள்.. அப்போது தெரியும் .. பெரியாரின் மேன்மை தளர்ந்து விழும் போது தூக்கி நிறுத்த ..ஆம்..
கடைசியில் பெரியார் தான் வந்து நிற்பார்
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக