சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்
‘சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார்’ என்கிற செய்திதான், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க ஆகிய கட்சிகளில் சிலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. இருக்காதா பின்னே
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடந்த அரசியல் காட்சிகள், இதுவரை ஹாலிவுட் படங்களிலுமே நாம் காணாதவை. சரி, அ.தி.மு.க-வின் தற்போதைய தலைமை, அடுத்து என்ன திட்டமிட்டிருக்கிறது?
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
தொடர்ந்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிப்பதற் குள், ஜெயலலிதா மரணம் அடைந்தார். பின்னர், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதலமைச்சர் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்
அதனால் கோட்டைக்குச் செல்லும் கனவிலிருந்த சசிகலா, பெங்களூரு சிறைக்குச் சென்றார். இதற்கிடையே முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போய்… எடப்பாடி பதவியேற்றது எல்லாம் தனிக்கதை. மறுபக்கம் தினகரன், கட்சியைக் கைப்பற்ற முயற்சிசெய்து தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகச் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டெபாசிட் இழந்தது இக்கட்சி
அ.தி.மு.க தன் கைக்கு வந்துவிடும்’ என்று சசிகலா உறுதியாக இருந்ததால்
‘எப்படியும் அ.தி.மு.க தன் கைக்கு வந்துவிடும்’ என்று சசிகலா உறுதியாக இருந்ததால், அ.ம.மு.க-வில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார் கள். அத்துடன், ‘அ.தி.மு.க மீதான உரிமை தொடர்பான வழக்கும் என் பெயரிலேயே நடக்கட்டும்’ என்றும் தினகரனிடம் சசிகலா சொல்லியிருப்பதாகத் தெரிகிறது
இந்த நிலையில்தான், தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் படுதோல்வியடைந்திருப்பதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சிலர் செய்துவரும் விமர்சனங்களால், ‘ஆட்சி கை நழுவி விடுமோ’ என்ற பயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இதனால், ‘சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் மட்டுமே ஆட்சியைத் தக்கவைக்க முடியும்’ என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசியபோது, “எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பத்து நாள்களுக்கு முன்பே சசிகலாவுக்குத் தூது விடப்பட்டது
உச்ச அதிகாரத்திலிருப்பவரின் மனைவியே, அடுக்கு டிபன் கேரியரில் சசிகலாவுக்குப் பிடித்த உணவுகளுடன் சிறைக்குள் சென்றார். அவர் சில விஷயங்களை, சசிகலா தரப்புக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கிறார்
தொடர்ந்து சசிகலா தரப்பில், ‘சிறையிலிருந்து வெளியே வருவதற்கு, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஒத்துழைத்தால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர உதவி செய்யப்படும்’ என்பது உட்பட சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது
அத்துடன், இந்த வழக்குக்குக் காரணமான முக்கிய வி.வி.ஐ.பி ஒருவரே, ‘சசிகலாவின் விடுதலைக்கு ஆட்சேபனை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார். அதனால், சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன” என்றார்கள்.
சசிகலாவுக்கு நெருக்கமான வர்கள் சிலரிடம் பேசினோம். “கர்நாடக சிறைத்துறை சமீபத்தில் அந்த மாநில அரசுக்கு அளித்த அறிக்கையில், ‘சசிகலாவின் நன்னடத்தை சிறப்பாக இருப்பதால், முன்கூட்டியே விடுதலை செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது
சசிகலா, சிறையிலிருந்தபடி கன்னட மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருப் பதையும் அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறது சிறைத்துறை இந்த அறிக்கை, சசிகலாவுக்கு மிகவும் சாதகமாக அமையும் ‘நன்னடத்தை அடிப்படையில் என்னை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சசிகலா சார்பிலும் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது
சசிகலா விரைவில் விடுதலையாகப் போகிறார் நடவடிக்கை எடுக்கப்படும்
தவிர, கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பத்தினர், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் அதனால், சசிகலாவின் கோரிக்கைமீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இதுதொடர்பான ஃபைல், கர்நாடக கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்
அதனால் நான்கு மாதங்களுக்குள் சசிகலா விடுதலையாவார் என்று உறுதியாக நம்புகிறோம்” என்கிறார்கள்.
“சசிகலாவின் விடுதலைக்கு சட்டரீதியாக சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா?” என மூத்த வழக்கறிஞர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டபோது, “சசிகலா அல்ல யாராக இருந்தாலும் சிறைத்துறை நன்னடத்தை சான்றிதழ் அளித்தால், அதைக் காரண மாகக்கொண்டு சம்பந்தப் பட்ட நபரை ஆளுநர் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் உண்டு
ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்களை கவர்னர் விடுவிக்க முடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
எடப்பாடி தரப்பு செய்த துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் சசிகலா மறந்திருக்க வாய்ப்பில்லை!
அதற்குக் காரணம், வட மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் கவர்னர்களின் ஆசியுடன் பாதியிலேயே விடுதலைபெற்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்ததுதான். இதற்குப் பிறகு உச்ச நீதிமன்றமே இவ்விஷயத்தில் தலையிட்டு, சில விதிகளைக் கொண்டுவந்தது
சசிகலா விவகாரத்தைப் பொறுத்தவரை அவர் ஏற்கெனவே வேறு சில வழக்குகளில் சிறையில் இருந்த காலகட்டத்தையும் கர்நாடக சிறைத்துறை கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கலாம்
அப்படி எடுத்துக்கொண்டால் மட்டுமே, ஒருவேளை அவரை முன்கூட்டியே விடுதலை செய்யும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்றார்.
சசிகலாவுக்கும் தினகரனுக்கும் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணர்ந்துதான், சசிகலாவுக்குத் தூது விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்
அதை நிரூபிக்கும் வகையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான பணிகளிலும் தினகரன் தலையிடாமல் இருக்கிறார்
அரசியல் சதுரங்கத்தில் கணக்குகள் அனைத்தும் சரியாக இருந்து ஒருவேளை சசிகலா விடுதலையானால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சியை விட்டுக் கொடுப்பாரா
இல்லை தட்டிப் பறிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்ஏனெனில், எடப்பாடி தரப்பு செய்த துரோகத்தை அவ்வளவு சீக்கிரம் சசிகலா மறந்திருக்க வாய்ப்பில்லை!
- அ.சையது அபுதாஹிர்
‘‘முன்விடுதலை சாத்தியமே இல்லை!’’ – டி.ஐ.ஜி ரூபா
சசிகலா விடுதலை குறித்து, பெங்களூரு முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவிடம் கேட்டோம். ‘‘கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி, சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலகட்டத்தில் வேறு எந்தத் தவறும் செய்யாமல் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால், அதன் அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உண்டு
இந்தச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி, சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகப் பலரும் பேசிவருகிறார்கள் இதுகுறித்து தொடர்ந்து என்னிடமும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில், சசிகலா சிறையில் நன்னடத்தையோடுதான் நடந்துகொண்டிருக்கிறார்
அதற்காகத் தண்டனையைக் குறைப்பார்கள் என்று சொல்லமுடியாது. சசிகலா வழக்கைப் பொறுத்தவரை, நன்னடத்தைச் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படுவது சிரமம்தான்
இந்த வழக்கு, மற்றப் பொதுவான விதிமுறைகளுக்குள் வராது ஆதலால், தண்டனைக் காலத்துக்கு முன்னதாகவே, அவரை விடுவிப்பது என்ற கேள்வியே எழாது எனவே, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை!’’ என்றார் உறுதியாக.
– இ.லோகேஷ்வரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக