நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை
காத்திரு பகையே நாளை நாடாளுமன்றம் வருகிறது எம் திராவிடர் படை இதுவரை பார்த்திருந்த முகமன்று அஞ்சிபிழைத்த அருகதையற்றோரை கண்டு மகிழ்ந்திருந்ததெல்லாம் காற்றோடு போனது
கடூம்சீற்றமாய் அறநெறியோடு ஆற்றல் நல்படை வருகிறது சொல் செயல் இரண்டும் சமநேர்கோடோடு சுட்டெரிக்கும் சூரியனின் பிள்ளைகள் வருகிறார்கள்
அணுகழிவு எம்மீது கொட்டலாமென்ற இருமாப்பை தகர்த்தெரிய
நீட் எனும் அரக்கனை எம் இன துரோகியை கொண்டே எம் கண்ணில் குத்திய கொடுஞ்செயலுக்கு பழிதீர்க்க
தமிழகத்தின் மறைமுகமாய் ஆட்சி செய்யும் பாசிசத்தின் சங்கறுக்க தளபதி படை வருகிறது காத்திரு பகையே
கர்நாடக ஒன்றும் குப்பை மேடல்ல என்று பாஜக எடியூரப்பா சொல்கிறார் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்
இங்கே ரொட்டி துண்டிற்கு வாலாட்டும் தமிழிசை போன்ற கருங்காலிகள் அணுக்கழிவை கொட்டுவதால் ஆபத்தில்லை என்கிறது தண்ணீர் தட்டுபாடு ஏன் என்றதற்கு
எட்டாண்டுக்கு முன்பு ஆண்ட திமுகவும் காங்கிரஸும் காரணமாம்
மும்மொழி கொள்கை என்னானதென்றால் திமுகவை கேட்கவேண்டியதுதானே சேக்கிழார் பதில் சொல்கிறார் .. புளித்தமாவிற்கெல்லாம் உலகத்தர செய்தியை வெளியிட்டு தண்ணீர் பஞ்சத்தை மறக்கடிக்க நினைக்கிற நான்காம் தூண்களை இனியும் நம்புவதென்பதென்பது முட்டாள்கள் செயல்
பதினொரு பேரின் தகுதிநீக்க வழக்கென்னானது என கேள்வி எழுப்ப முடியவில்லை நீதிமன்றம் வாய்மூடி இருக்க சொல்கிறது
தகுதியில்லாதவன் ஐந்தாண்டு முடியும் வரை பதவியில் வாக்குபதிவு இயந்திரம் பதிவைவிட அதிகம் காட்டுவதை தேர்தல் ஆணையமே ஒப்புகொண்டு ஜனநாயகம் வென்றதென முரசு கொட்டுகிறது
இப்படி நிறைய அநீதிகள் இனியும் பொறுப்பதோ.
சிறந்த ஜனநாயகத்தை படிப்பிக்க .. தலைசிறந்த ஆசிரியர்களை அனுப்புகிறது தமிழகம் .. அறம் தவறா ஜனநாயக மரபுகளை மறந்து போன இந்தியாவிற்கு பாடம் எடுக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் .. காயிதெ மில்லத்தையும் அறிஞர் அண்ணாவையும் இரா.செழியனையும் , மாறனையும் தந்த தமிழகம் இன்று புதிய எழுச்சிமிகு இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது .. அனுபவமும் கொண்டவர்களும் புதிய ஆளுமைகளையும் பல்வேறு துறை சார்ந்தவர்களையும் இலக்கியவாதிகளையும் மக்கள் தொண்டர்களையும்
அனுப்புகிறது .. இனி தமிழகத்திற்கு ஒரு கேடு எனில் இந்த புரட்சிகாரர்கள் பொங்கியெழுவார்கள்
மேசையை தட்டி பூயுட்டிபுல் காஷ்மீர் என்றவரை பார்த்து களித்திருந்த இந்திய நாடாளுமன்றம் இனி பி கேர்புல் இந்தியா என கேள்வி கணைகளை தொடுக்கும் படைவீர்களை காண போகிறது ..
..
அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு .. ஜனநாயகத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட தமிழர் படை இது தளபதி எனும் ஆற்றல்மிகு தலைவரின் வழிகாட்டுதலோடு .. நாடுவிரும்பிகளாய் நாட்டுமக்களின் நலம் விரும்பிகளாய் மொழி இனம் கலாச்சார காவலர்களாய்
பகுத்தறிவு பகவலவனின் ஒளிச்சுடர்களாய் .. கலைஞர் பெருமகனிடம் நேரடி பயற்சி பெற்ற தளபதிகளாய் வருகிறார்கள் ..
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
..
காத்திரு பகையே ..
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக