சம்பளத்தை அதிகரிக்கா விட்டால் வரிச்சலுகை நிறுத்தப் படும் என பிரதமர் அறிவித்துள்ளார்
நெதர்லாந்தில் கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன சம்பளத்தை அதிகரிக்கா விட்டால் வரிச்சலுகை நிறுத்தப் படும் என பிரதமர் அறிவித்துள்ளார்
அதே நேரம் கடந்த பத்து வருடங்களாக சம்பளம் அதே நிலைமையில் தான் இருக்கிறது. தொழிற்சங்கங்களின் பல வருட கால போராட்டம் காரணமாக, அரசு இப்போது தான் சம்பளத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது
தனியார் நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தை அதிகரிக்கா விட்டால் வரிச்சலுகை நிறுத்தப் படும் என பிரதமர் அறிவித்துள்ளார்
தொழிலதிபர்களின் சங்கம் இது குறித்து “அதிர்ச்சி” தெரிவித்துள்ளது. வேலையாட்களின் சம்பளத்தை கூட்டினால் பெரிய நிறுவனங்கள் நெதர்லாந்தை விட்டு வெளியேறி, குறைவான சம்பளம் கொடுக்கும் வெளிநாட்டில் முதலிடப் பார்க்கும் என்று முதலாளிகள் அரசை மிரட்டி வருகின்றனர்
Kalai Marx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக