வெயில் தாக்கம் தமிழிசை உளறல் தூக்கலாக கேட்கிறது
வெயில் தாக்கம் தமிழிசை உளறல் கொஞ்சம் தூக்கலாக கேட்கிறது
37 பேர் பதவி பிராமணம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சத்தம் அதிகமாய் கேட்கிறது வயிற்றெரிச்சல்
தண்ணீர் பஞ்சம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லையாம் .. அரசியலில் இருக்கவே அருகதையே இல்லாத கலைஞரின் தயவில் படித்து கரையேறியவர் கதைக்கிறார் வீராணம் திட்டத்தை நடப்பில் ஆக்கியிருந்தால் தண்ணீர் பஞ்சம் தீர்ந்திருக்குமாம் கலைஞரின் கனவை நசுக்கியதன் விளைவிது
அன்றைக்கு பயனில்லாத திட்டமென்றவர்கள் இன்று பின்பாட்டு பாடுகிறார்கள் ..
என்னதான் முந்தைய அரசு செயல்படவே இல்லையென்றாலும் அதன் மீதே குறைச்சொல்வதை முதலில் விடவேண்டும்
கலைஞர் ஆட்சியில் ஏரிகள் தூர்வாரபட்டன நீர் சேகரிப்பிற்கு அதிக அக்கறை செலுத்தபட்டது ஆட்சிவிட்டு வந்து எட்டாண்டு ஆகிறது இன்னமும் இவர்கள் செயல்படவில்லை என்பதைதான் இவர்கள் பேச்சு சொல்கிறது
ஒன்றரை ஆண்டில் முழு அரசு இயந்திரத்தையுமே மாற்றி செயல்படவைத்திட முடியும் நூறுநாட்கள் தாருங்கள் அழுகிப்போன ஈரலை செப்பனிடுகிறேன் என சொல்லி செயல்படுத்தி காட்டியவர் கலைஞர்
தமிழிசை உளறல் இதுதான் உங்கள் நிலமை
ஆனால் இன்றும் ஆட்சி செய்பவரை விட புறமிருந்து இயக்குகிற கோழைகள் அதிகம் கதைக்கிறார்கள் அதிமுகவை நம்பிதான் நின்றோம் அவர்கள் எமக்கு வேலை செய்யவில்லை தோற்கடித்துவிட்டார்கள் அதிமுக ஆதரவின்றி தேர்தலில் நின்றிருந்திருந்தால் கட்டிவச்ச காசு கூட திரும்ப கிடைத்திருக்காது
இதுதான் உங்கள் நிலமை தன் தகுதி அறிந்து பேசவேண்டும் வார்டு கவுன்சிலருக்கு நின்றால் கூட ஓட ஓட விரட்டுவார்கள் தமிழ் மக்கள்
இந்த நிலையில் அணுகழிவால் ஆபத்தில்லை என சர்டிபிகேட் வேறு தருகிறார் தமிழிசை கர்நாடக எடியூரப்பா இங்கே கொட்ட கூடாதென தான் சார்ந்த மாநில நலனுக்காக பேசுகிறார் ஆனால் தமிழ் மக்களுக்கெதிராக பேசுகிற ஞானசூன்யமாய் குமரியின் மகள் வெட்கபடவேண்டும்
தகுதியில்லாத தரங்கெட்ட செயலை செய்கிறார்
அமைச்சர் வேலுமணி தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லை வீண் வதந்தி என்கிறார் ஒருவேளை அவர் வீட்டில் அமைச்சர் என்ற அதிகார வரம்பில் தண்ணீர் மிகுதியாய் இருப்பதால் மக்களின் கஷ்டம் புரியவில்லை
குளித்து சிலநாட்கள் ஆகிறது .. தண்ணீர் குடம் 10/ 20 என விற்கிறது சாமானியர்கள் வாடகை குடித்தனங்கள் உணவு விடுதிகள் தண்ணீர் பறறாக்குறை அமைச்சருக்கு தெரியவாய்ப்பில்லை .. அமைச்சராக இருக்க தகுதியற்றவர்
தகுதி இல்லாதவர்களை அமைச்சராக்கியது ஜெயலலிதா செய்த தவறு .. அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களெல்லாம் அமைச்சர்களாக்கியது தான் .. லாயக்கற்றவர்களை நாம் கொண்டாடியதுதான் இதற்கெல்லாம் காரணம் சினிமாகாரனை ரசிப்பதோடு நிறுத்தியிருந்தால் இத்தனை இன்னல்கள் வந்திருக்காது
அதிமுககாரன் திமுகவை குறை கூறுவதில் கூட ஏற்றுக்கொள்ளலாம் .. ஐந்தாண்டு நலத்திட்டங்களை திமுக செயல்படுத்திவிடும் அதைவைத்தே அதிமுக ஐந்தாண்டை கடத்திவிடும்
ஆனால் பாஜகவை சேர்ந்த தமிழிசையும் பொன்னரும் பேசுவதுதான் வேடிக்கை உங்களுக்கு என்ன சம்பந்தம் என்ன தகுதியிருக்கிறது தமிழகத்தில் எக்காலத்திலும் தனித்து நின்று வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாத சாரணர் தேர்தலில் கூட ஓடவிட்டு அடித்துதுவைக்கிற நிலைதான்
மைக் கிடைக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறைச்சொல்லலாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் உளறலாம் என்பது .. திராவிடம் தந்த கருத்துரிமை தான் காரணம்
பிற மாநிலமாக இருந்தால் வாயிலேயே வெட்டுவிழும்
இங்குதான் தாரதரமின்றி விமர்சிக்கமுடியும் யோக்கியதை இல்லாதவன் கூட இங்கே கட்டவழித்துவிட்டவனை போல பேசி திரியமுடியும்
எதற்கும் ஒரு அளவுண்டு.. இவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் ஆம்.. அருகதையற்றவர்களோடு கதைப்பது கூட அறிவுடை செயல் அல்ல.. நமக்குதான் இழுக்கு
தகுதியற்றவர்களின் அரசியலால் தரங்கெட்டு போய் கிடக்கிறது தமிழகம்
தமிழகத்திலிருந்து இந்த பாசிசத்தின் அடிமைகளும் இன துரோகிகளும் விரட்டபடவேண்டும்,.. திராவிடத்தின் அடலேறுகள் அதை செய்து முடிக்கும் ..
திராவிடமே இந்த மண்ணில் நிலைக்கும்
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக