திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா
எப்படியும் வீழ்த்திவிடவேண்டுமென கங்கணம்கட்டி செயல்பட்டாலும் திராவிடம் திமிரி எழுகிறதே ஏன் தெரியுமா ..
அடித்தளம் சரியாக கட்டபட்டிருக்கிறதென்றார் அண்ணா
..
எத்தனை சூதுகள் நயவஞ்சகங்கள் கூடஇருப்போரையே கூர்தீட்டி எம்மிடமே திருப்பிய தந்திரங்கள் தாங்கள் தமிழர்களென எம்மவரை வாயாலேயே சொல்லவைத்து எவ்வளவு பார்த்தாயிற்று .. ஒரு மொழியை அழித்தொழிக்க நினைத்தால் முதலில் பேசும் மக்களிடம் பிரிவினையை உண்டாக்கு .. இனத்தின் கலாச்சாரத்தை அழிக்க நினைத்தால் முதலில் நூலகத்தை கொளுத்து மக்களிடமிருந்து கல்வியை பிடுங்கு இதைதான் ஆரியம் மிக சாதூர்யமாக நடந்திவந்தது .. திராவிட இயக்கம் தோன்றியதன் பின்னால் தான் மக்களிடையே கல்வியை பற்றிய விழுப்புணர்வும் நமதான உரிமை அது என்ற தெளிவும் வந்தது எங்கே நம்மிடம் உள்ளதெல்லாம் இதுவரை கட்டி காத்ததெல்லாம் நாம் மட்டுமே அனுபவித்ததெல்லாம் போய்விடுமோ என அஞ்சி மெல்ல பழைய நிலைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை படிபடியாக செய்துவருகிறது ஒவ்வொரு முறையும் வெகுண்டெழுந்து போராட வேண்டியிருக்கிறது .. நீட் தேர்விற்கு அனுமதியை ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது துரோகி மாஃபா பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட்டு இன்று அதை நீக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது எதையும் நேரடியாக எதிர்க்க முடியாமல் திரைமறைவிலேயே நகர்த்தும் வேலை தெரிந்தவர்கள் ..
..
இன்றல்ல ஆரம்பம் தொட்டே எல்லாவற்றையும் தமிழர்களுக்கு எதிராகவே செய்பவர்கள் .. தமிழ்நாடு என பெயரிட வேண்டுமென கேட்டபோது
திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர்கள் தமிழ் நாடென்று கேட்கிறார்கள் என கு.க.பாளையம் ராஜகோபால்(ராஜாஜி) டெல்லிக்கு தகவல் அனுப்பிய போது
அன்றைக்கு நாட்டிற்குள்ளே நாடா என நாடாளுமன்றம் கேட்டபோது…அண்ணா சொன்னார்
இந்தியாவே நாடு அல்ல துணை கண்டம் .. நாடென்றால் ஒற்றை கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே இனம் மொழி கொண்டதாக இருக்கவேண்டும்
பன்முக தன்மை கொண்ட பல்வேறு இன மொழி கலைச்சாரம் கொண்டது இந்தியா அதில் தமிழர்களுக்கென ஒரு நாடு என்றார் .. எதை செய்தாலும் அதில் தமிழ்நாட்டிற்கு தமிழ்மொழிக்கு தீங்கிழைப்பதையே கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு ..
..
மெல்ல திணிக்கலாமென்று எண்ணத்தில் இந்தி ஆங்கிலம் மட்டுமே என்ற சுற்றறிக்கையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறார் திரு.ஸ்டாலின் தமிழகத்தில் எந்தவடிவில் வந்தாலும் நசுக்கபடுவீர்களென எச்சரித்து திமுக தன் கடமையாற்றியிருக்கிறது இந்தி வேண்டுமென பேசிய மாபொசியை கூட கடந்துதான் கரிபூசியிருக்கிறோம் .. எத்தன் வழிகளுண்டோ முயற்சி செய்யுங்கள் .. பேரருளாளன் கலைஞர் மறைந்தவுடன் பெரிய வெற்றிடம் என்றெல்லாம் பேசி திரிந்து யார்யாரையோ மெருகேற்றி வெளிச்சம் போட்டுகாட்டி சாந்துபூசி .. கடைசியில் இங்கு திராவிட இயக்கத்தின் வேர் ஆயிரம் அடி ஆழ சென்று விரிந்து ‘தரு’ பரந்து விரிந்து நிழல் தருகிறது என்ற உண்மையை உணர்ந்திருக்கிறார்கள் ..
..
திமுக தமிழகம் காக்கும்
..
ஆலஞ்சியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக