எண்ணைக் கப்பல்கள் தாக்கப் பட்டுள்ளன ஈரான் தான் தாக்குதலுக்கு காரணம்
அண்மைக் காலத்தில் ஈரானுக்கும் ஒமானுக்கும் இடையிலான கடற்பிராந்தியத்தில் நான்கு எண்ணைக் கப்பல்கள் தாக்கப் பட்டுள்ளன ஈரான் தான் தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் தெரிவிக்கின்றன
ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் கூட அதை நம்பத் தயாராக இல்லை. சுயாதீனமான விசாரணை நடத்தக் கோருகின்றது
அதே நேரம் சில விசித்திரமான போக்குகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது ஈரானில் ஜப்பானிய தூதுவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரம் ஜப்பானிய எண்ணைக் கப்பல்கள் தாக்கப் பட்டுள்ளது
இப்படியான நேரத்தில் ஈரான் தாக்குதல் நடத்த துணியுமா என்பது கேள்விக்குறி
அது மட்டுமல்ல எந்தக் கப்பலும் வெடித்து சிதறியதாகவோ அல்லது எண்ணைக் கசிவு ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை
அது ஒரு பொற்காலம்:
அது ஒரு பொற்காலம் ஐம்பதுகளில் இலங்கையில் வெளிவந்த பத்திரிகை ஒன்றில் முஸ்லிம் பெண்களும் உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகளாக மதிக்கப் பட்டுள்ளனர்
தற்கால ஊடகங்களை முஸ்லிம் பெண்களை பூர்க்கா அணியும் மதம் காவிகளாக மட்டுமே சித்தரிக்கின்றன மத அடையாள அரசியலும், முதலாளித்துவ வர்க்க அரசியலும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு உழைக்கும் வர்க்க மக்களை பிரித்து வைப்பதில் கணிசமான அளவு வெற்றி பெற்றுள்ளன
Kalai Marx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக