சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா
சோவியத் யூனியனில் ஷரியா சட்டம் அனுமதிக்கப் பட்டிருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள் ஆமாம் சில இடங்களில் நடைமுறையில் இருந்தது!
முதலில் சோவியத் சட்ட அமைப்பு பற்றிய சுருக்கமான புரிதல் வேண்டும். அதனை நிகழ்காலத்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடலாம்
அதாவது, ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான சட்ட்டங்கள் இயற்றி வைத்திருக்கலாம். அதே நேரம், எல்லோருக்கும் பொதுவான சோவியத் சட்டமும் இருக்கும்
தீர்ப்புகள் தவறென்று மேன்முறையீடு செய்தால், அல்லது சட்டங்களில் முரண்பாடுகள் காணப்பட்டால் சோவியத் சட்டமே இறுதியானது
அந்த வகையில், ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருந்த குடியரசுகளில் ஷரியா சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது
ஆனால் அது சோவியத் சட்ட அமைப்புடன் சமாந்தரமாக அமுல்படுத்தப் பட்டது. அதாவது, அந்த இடங்களில் இரண்டு வகையான நீதிமன்றங்கள் இயங்கும். ஒன்று சோவியத் நீதிமன்றம். மற்றது ஷரியா நீதிமன்றம்.
ஷரியா நீதிமன்றத்தை நாடுவதா அல்லது, சோவியத் நீதிமன்றத்தை நாடுவதா என்பது அங்குள்ள மக்களின் தெரிவு
இதன் மூலம் இரண்டு வகையான நீதித்துறைகளையும் சீர்தூக்கிப் பார்த்து எது முற்போக்கானது என்பதை மக்கள் தாமாக முடிவு செய்து கொள்வார்கள்
காலப்போக்கில் பெருமளவு வழக்குகள் சோவியத் நீதிமன்றங்களினால் தீர்க்கப் பட்டமை வரலாறு.
உண்மையில் ஷரியா நீதிமன்றங்கள், சோவியத் நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படிவானவை. அதன் அர்த்தம் நாகரிக உலகிற்கு மாறான தீர்ப்புகளை வழங்க முடியாது
உதாரணத்திற்கு, திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்ட வேண்டுமென ஷரியா நீதிமன்றம் தீர்ப்புக் கூறுவது தடுக்கப் பட்டிருந்தது
தற்காலத்தில் ஷரியா சட்டத்தை கொண்டிருக்கும் பாகிஸ்தான போன்ற நாடுகளிலும் இது போன்ற நிலைமை உள்ளது
ஷரியா நீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்தவர்கள் சோவியத் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்
உதாரணத்திற்கு, விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு பாதகமான தீர்ப்பு கூறப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண் சோவியத் நீதிமன்றம் சென்று தனக்குரிய நீதியை பெற்றுக் கொள்ள முடியும் இந்த விடயத்தில் சோவியத் சட்டமே இறுதியானது
பெரும்பாலான இஸ்லாமியர் அல்லாத மக்கள் மத்தியில் ஷரியா சட்டம் தொடர்பாக தவறான எண்ணம் காணப் படுகின்றது உலகில் பல வகையான சட்ட அமைப்புகள் உள்ளன
உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பது ரோமன்- டச்சு சட்டம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நெப்போலியன் காலத்து சட்டம் உள்ளது
அதே மாதிரி ஷரியா என்பதும் இஸ்லாமிய மதம் சார்ந்த பொதுவான சட்ட அமைப்பு தான் அதிலும் சட்டத் துறை சார்ந்த அறிஞர்கள் தமக்குள் முரண்படும் அளவிற்கு நான்கைந்து ஷரியா பிரிவுகள் உள்ளன
Kalaimarx
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக