பார்பனர்கள்கள் தமிழர்களா?
பார்பனர்கள்கள் தமிழர்களா? கும்பகோணம் மடத்தின் தலைவர் காஞ்சி பெரியவர்
தமிழை நீசமொழி என்றார் சமஸ்கிருதம் மட்டுமே தெய்வத்தோடு பேசும் மொழி என்றெல்லாம் தெய்வத்தின் குரலில் அளந்தார்
ஆனால் பார்பனர்கள் தங்களை தமிழர்களாக தேசியளவில் முன்னிறுத்தினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஏச மறப்பதில்லை தமிழர்களை அவர்கள் தங்களின் பிரதான எதிராளியாகவே கருதுகிறார்கள் காரணம் அவர்கள் தங்களின் கோட்பாட்டிற்குள் வருவதில்லை/ அடைக்கமுடியவில்லை
பாஜக வின் ராகவனும் பத்ரியும் தமிழை எப்படி காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் சொல்லலாம் கூடவே எங்கள் #தமிழ்மொழி என சேர்த்துக்கொள்கிறார்கள்..
..
#பெரியார்
முதலில் மிகதெளிவாக சொன்னார்..
மொழியில் சீர்திருத்தம் செய்யாமல் எந்த மொழியும் வளராது..சமகாலத்திற்கு பொருந்துகிறார்ப்போல் வடிவமைக்கப்படாமல் இருப்பதைதான் பெரியார் குறிப்பிட்டார் ..
பெரியார் சீர்திருத்தம் செய்த தமிழ் மொழியின் எழுத்துக்கள் தான் இந்த கணணி யுகத்திலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது..
தமிழைப்படித்து விட்டு சாமியாராக போனவர்கள் அதிகம் பட்டினத்தார் தாயுமானவர், வள்ளலார் போன்றோர்..அதையும் பெரியார் பலஇடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்..
தமிழ் படித்து விட்டு மடமை பேசியவனே அதிகம் யாரும் பகுத்தறிவு பேசவில்லை என்றும் குட்டுவைத்தார் பெரியாரை ஒரு பிரேமிற்குள் அடைத்துவிடமுடியாது அவர் தனக்கு மொழிப்பற்றோ இனப்பற்றோ நாட்டுபற்றோ இல்லை இருப்பதெல்லாம் மானுடப்பற்று என்று சொன்னவர்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும்?
விடயத்திற்கு வருவோம்..
பாப்பான்கள் எப்படி தமிழர்களாக முடியும் #இனத்தால்..தமிழனில்லாத ஆரியர்கள்..
வடமொழி கலப்பிலேயே பேசும் சமஸ்கிருதத்தை பேச்சுவழக்கில் தமிழோடு கலக்கும் ..இவர்கள் தமிழர்கள் அல்லர்..
தமிழ் மொழி பேசுவதால் மட்டுமே தமிழன் என்று பொருள்கொள்ளமுடியாது..
எனக்கு ..ஆங்கிலம் தெரியும் பிரஞ்சு தெரியும் எனவே நான் ஆங்கிலேயன் பிரஞ்சுகாரன் என ராகவன் கோஷ்டி சொல்லுமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக