இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழியை பயன்படுத்த கூடாது
இலங்கை முஸ்லிம்கள் எந்த சூழ்நிலையிலும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் அரபு மொழியை பயன்படுத்த கூடாது என்று இலங்கை அரசு ஆணை பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மிகவும் மடமையான செயல் எந்தவொரு மொழியும்
அதன் வளமும் பிற மக்களோடு தொடர்பினை ஏற்படுத்தவே தவிர மொழி தீவிரவாதமாகாது .. எந்த மொழி திணிப்பையும் எப்படி ஏற்பதில்லையோ அதைப்போல அந்தந்த மொழி அறிந்தோர் அதன் பயன்பாட்டை நிறுத்தவேண்டுமென சொல்வது அறிவுடை செயல் அல்ல..
இஸ்லாம் அரபுமொழி என்றாலே அது தீவிரவாதத்தின் வாசலென கட்டமைக்கபட்டிருப்பதற்கு ஒருவகையில் அந்த மொழி வழக்கை கொண்ட மதபோதகர்களின் செயல்பாடும் இஸ்லாத்தை அரபி மொழியோடு மட்டுமே தொடர்புபடுத்தியதும் அதை ஒரு “புனித” நிலைக்கு கொண்டுபோய் வைத்ததும் காரணம் .. இஸ்லாம் பயங்கரவாதத்தை எங்குமே எடுத்தியம்பாத போது சிலர் தங்கள் அதிகாரவரம்பை நிலைநிறுத்த செய்த செயல்கள் அதற்கு வேதத்தை .. எது எப்போது எந்த காலகட்டத்தில் இறங்கியது எதற்காக அதை செயல்படுத்தபட்டதென்ற அறிவின்மையால் .. நேரடி மொழியாக்கமென்ற பெயரில் அதன் உட்பொருள் அறியாமல் மேலெழுந்தவாரியாக மக்களிடையே திணிக்கப்பட்டதும்.. அதை தீவிரவாத மார்க்கமென வல்லரசுகள் நம்பவைத்ததும் இவர்களின் பழைய “புனித போர்” Holy War வேறொரு பரிணாமத்தை அடைந்து அதில் முஸ்லிம்கள் மீது உலகளாவியளவில் தீவிரவாதிகள் என்ற “அடைமொழி”யை வைத்துவிட்டார்கள் ..பொது சமூகம் ஒருவித பயத்தோடு இஸ்லாமியர்களை காண கூடிய சூழலை உருவாக்கியதில் சில வல்லரசுகளுக்கு உரிய பங்கு எவ்வளவோ அதிலும் சற்றும் குறையாமல் இஸ்லாமிய அமைப்புகளின் மத போதகர்கள் மதத்தை ரட்சிக்கவந்தவர்களென சொல்லிக்கொண்டோரின் பங்கும் உண்டு
..
மொழி என்பது ஒரு ஊடகம் .. சில மொழிகள் செத்தொழிந்து போயின காரணம் எந்தவொரு மொழியும் அதன் சிறப்பு இலக்கணத்தில் இருக்கவேண்டும் மக்கள் மொழியாக இருந்தால் அதை எந்த சக்தியாலும் அழித்திட முடியாது .. தமிழ் நிலைத்து நின்றதற்கு “திணைமரபு ” இலக்கணமே காரணம் .. சமஸ்கிருதம் செத்ததற்கு இலக்கணமில்லாததே காரணம் .. தெய்வமொழி என்பதாலோ.. நிலைத்திடாது அரேபிய மொழி அந்த மண்ணின் மொழி அதை மதத்தின் மொழியாக கருதியதால் இந்த இழிநிலை ..
வெகுமக்கள் பேசுகிற மொழியும் கூட..
..
ஜப்பான் மற்றும் சீன நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களில் அரபு மொழி எழுத்துக்களை பயன்படுத்தி சந்தை படுத்தி வருவதை நாம் அறிய முடிகிறது.. 54 நாடுகளில் பேசபடுகிற மொழி கீழைநாடுகளின் ஒருவித மதரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய மொழி பல்வேறு நாடுகளின் அலுவல் மொழியாகவும் இருக்கிற மொழியை இலங்கை போன்ற வளைகுடா பொருளாதாரத்தை பெரிதும்
நம்பியிருக்கிற நாட்டில் தடை என்பது கேலிகூத்காக முடியும்…எந்த ஒரு மொழியும் எப்படி பயங்கரவாத மொழியாக அமைய முடியும் அதற்கான சாத்தியங்கள் எவ்வாறு ஏற்படும் என்கிற சராசரியான அறிவு கூட இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இல்லை என்று தான் நாம் கூற முடியும். இதன் பின்னில் குறிப்பாக சில பௌத்த துறவிகள்..? இது போன்ற வெறுப்பு தன்மைக்கு காரணம் என்று ஸ்ரீ லங்கா மீடியாக்கள் கருத்து தெரிவித்துள்ளன
..
#மொழி
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக