எது பெண்ணுரிமை பெண் சுதந்திரம்
எது பெண்ணுரிமை பெண் சுதந்திரம்
நாம் (ஆண்கள்) வழங்குகிற எதுவுமே அவர்களுக்கு சலுகை என எண்ணிக்கொள்கிறோம்! கல்வி அளித்திருக்கிறோம் வேலைக்கு செல்ல அனுமதித்திருக்கிறோம் அழகாக உடையணிய தடையேதுமில்லை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் இதுவல்ல!
நீங்கள் செய்கிற செயல்களில் உங்களுக்கு எப்படி உரிமையிருக்கிறதோ யாரும் தலையிட கூடாதென நினைக்கிறீரோ.. என்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறீரோ
அதேபோல் பெண்கள் தங்கள் விடயங்களில் சுயமாக சிந்திக்க முடிவெடுக்க உரிமையை வழங்கியிருக்கிறீரா
..
நான் உள்பட எவருமே சரியாக நடந்துக்கொண்டிருக்கிறோமா.. முன்பெல்லாம் கலந்தாலோசிப்பதையே தவிர்த்தவன்தான் நானும்.. இப்போதெல்லாம்
அவரின்(இணையரின்)கருத்தை முதலில் கேட்கிறேன் .. என்னிடம் சொல்லியோ ஆகவேண்டுமென்றெல்லாம் இல்லை தகவலாக வேண்டுமானால் சொல் அவ்வளவு தான் ,எனது கருத்தை சொன்னாலும் முடிவு உனதாக இருக்கவேண்டுமென சொல்லியிருக்கிறேன்
அதையே என் மகளிடம் சொன்னேன்.. உன் அறிவு சொல்வதை கேள்.. தடுமாறும் போது ஆலோசனைகளை கேள் .. எதையும் உடன் ஏற்றுக்கொள்ளாதே.. உன் அறிவேற்காதவரை.. இப்படி சொல்லி வளர்க்கிறேன்..சின்ன சின்ன விசயங்களில் கூட அவர்களின் ஆசைகளை மறுக்கிறோம்
இப்படிதான் உடையணிய வேண்டும்.. இதைதான் செய்யவேண்டுமென.. எப்போது சரிநிகர் என்று நினைக்கிறோமோ அப்போதுதான் நாம் நாமாவோம்..
..
பேஷன் டெக்னாலஜி படிக்கணும் படி எனக்கு நல்லா டிராயிங் வரும் அதையே செய்.. என்ன படிக்கவேண்டுமென நீதான் தீர்மானிக்கவேண்டும்..ஒன்றை மட்டும்தான் சொன்னேன்.. நம் வீட்டிலேயே ரோல்மாடல் உண்டு
என் சகோதரியின் மகள்.. கடும் எதிர்ப்பிற்கிடையே தொடர்ந்து படித்து இன்று நீதிபதியாகி இருக்கிறார் பார்.. முயற்சி செய் எதில் உன்னால் மிளிர முடியுமோ அதை தேர்வு செய்.. இதைதான் என் மகளிடம் சொன்னேன்
பெண்களுக்கு நாம் தரும் சலுகைகளை அவர்களின் உரிமையாக கருதுகிறோம் அப்படியல்ல.. சிறிய விடயங்களில் கூட நாம் காட்டும் கடுமை அவர்களின் உரிமைக்கு எதிரானதாகும்.
விட்டுகொடுக்கிறேன் என்பதெல்லாம் ஒருவகை ஏமாற்று..
மதமும் அரசும் பெண்களுக்கு செய்த தீங்கைவிட குடும்பமும் சமூகமும் செய்தது அதிகம்
மதம் அவர்களை இரண்டாம்தரத்தில் அல்லது கீழ் வைத்ததென்றால் அதைவிட சற்று அதிகமாய் இந்த சமூகம் சுற்றம் குடும்பம்
சொற்களால் காயப்படுத்துகிறது..
பாமரர்கள் மட்டுமல்ல நன்கு படித்தவர்களிடம் கூட இந்த இனம்காணாத #திமிர் இருக்கிறது.. பெரியாரை படித்தவர்கள்.. அல்லது புரிந்தவர்களிடம் இந்த சமஉரிமை வழங்கல் சிறியளவில் தென்படலாம்
மாறாக வெகுமக்களிடம் பெண்களை சற்று கீழிறக்கி காண்பதிலேயே ஆர்வம் அதிகமிருக்கிறது…
இது மாறவேண்டும்..
#நிகரானவள்_பெண்என்கிற_நிலைவரவேண்டும்……
..
ஆலஞ்சியார்