பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம் தமிழகம் தவிர்த்து வட, தென் இந்தியாவில் கருத்துக் கணிப்பை மீடியாக்கள் மூலம் வெளியிட்டு அதை சாதித்து காட்டிய மோடி அமித்ஷா கூட்டணி நடிக்கத் தெரிந்தாலே போதும் வெற்றி பெறலாம்
ஆம்இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னைப் பொருத்தமட்டில் எதிர்ப் பார்த்தது தான்.கடந்த வருடமே மீண்டும் மோடி தான் இந்தியாவின் பிரதமராவார் என்று இந்தியவின் வாக்களிக்கும் மக்களை விட வெளிநாடுகள் யூகித்து விட்டன
இதிலும் முஸ்லீம் நாடுகள் உட்பட.எனக்கும் வெளிநாட்டு நண்பர் கொடுத்த தகவலின் படியே அன்றே நான் இணையங்களில் ஒரு கட்டுரை எழுதினேன் ஆனாலும் மோடி அவர்கள் இந்திய மக்களுக்கு நல்லது செய்தததை விட கெடுதல் தான் செய்து வந்திருக்கிறார்
அதனால் வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நானும் நம்பினேன்
ஆனால் நடந்தது வெளிநாட்டினர் கூறியது தான் நடந்தது.எப்படி இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பின்பு நடக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அவர்கள் யூகித்தனர்
இதை எதிர்க்கட்சியினர் தீவிரமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்*
*1) மோடி அமித்ஷா அவர்களின் தந்திரங்கள்*
*2) 2014 ல் ஆட்சிக்கு வந்தவுடன் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்த அமைப்புகள் உச்ச நீதிமன்றம்,சிபிஐ,வருமானவரித்துறை,அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்*
*3) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்,நீதிபதிகளை மிரட்டுவது,தனக்கு சாதகமான வழக்குகளில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரிக்க வைத்து தீர்ப்புகளை சாதகமாக்கினர்*
*4) சிபிஐ யில் தனக்கு வேண்டியவர்களை (குற்றப் பின்னணி உள்ளவர்களையும்)நியமித்து எதிர்கட்சியினரை மிரட்ட பயன்படுத்திக் கொண்டனர்*
*5) வருமான வரித்துறை அமலாக்கத்துறை இவற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர்களை மட்டும் வழக்கில் சிக்க வைத்து அவர்களை முடக்கினர்*
*6) தேர்தல் ஆணையம் என்பதை தங்களது கட்சியின் அலுவலகமாகவே மாற்றி செயல்படுத்தி வந்தனர்.மோடி அமித்ஷா இவர்களின் கண் அசைவிற்கு நடனமாடினர்*
*7) மத்திய அரசின் உயர் பதவியில் உள்ள அனைத்துத் துறை செயலர்களையும் தன் கட்சி பிரதிநிதிகளாக மாற்றினர்*
மீடியாக்களை நடத்தும் அனைவரையும் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எந்த ஒரு மீடியாவும் மத்திய அரசின் திட்டங்களை விமர்ச்சிக்க பயந்தன
உலகத்திலேயே இந்திய மீடியாக்கள் மட்டும் தான் எதிர்க்கட்சிகளை மட்டும் விமர்ச்சித்தன
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தவறானதாக இருந்தாலும் அவை நல்லவை போல் விவாதம் செய்து மக்களை குழப்பினர்
மொத்தத்தில் இந்திய மீடியாக்கள் மோடி அமித்ஷா வீட்டு நாய்கள் போல் வாள் ஆட்டி பணிந்தன
ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதிகளும் தங்களது ஆட்சியில் ஒரு போரை வெளிநாட்டினர் மீது நடத்தி தங்களது ஆதரவை மக்களிடம் பெருக்குவர்
அது போல் மோடி அவர்களும் இப்படி ஒரு செயலை செய்ய தன் கடைசி கால ஆட்சிக் கட்டத்தில் காஷ்மீர் மாநில ஆட்சியை கலைத்து மத்திய அரசாட்சி கொண்டு வந்து தாங்களே ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் மீது பழியை போட்டு பாகிஸ்தான் மீது போர் நாடகம் நடத்தி மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றனர்
அந்த தாக்குதலின் பின்னணி இது வரை யாருக்கும் தெரியாது
*10) தாங்கள் இந்திய மக்களின் காவலன் என்ற இமேஜை மக்கள் நம்புபடி கொண்டு சேர்த்தனர்*
*11) இந்த ஐந்து வருட காலத்தில் தான் தீவிரவாதி தாக்குதலால் நிறைய காஷ்மீர் மக்களும் ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர்.ஆனால் இதை வெளிக்காட்ட இந்திய மீடியாக்கள் மறுத்தன
இதுவரை இந்திய மீடியாக்கள் மோடி பாத்ரூம் போவதை மட்டும் தான் காட்ட வில்லை*
*12 எங்கெல்லாம் சென்றாரோ அங்கு மக்கள் பயன்படுத்தும் துணைமணிகளை உடுத்தி தானும் உங்கள் ஆள் என விளம்பரப்படுத்தினார்*
*13 மக்களின் சென்டிமெண்ட் ஆன விசயங்களை மதம் மற்றும் பாதுகாப்பை அவ்வப்போது பயன்படுத்தினார்.இறுதி வெற்றிக்கும் இவையும் ஒரு காரணம்
நாம் பிரச்சாரங்களில் பார்த்திருக்கலாம்
*14) இவர் ஆட்சியின் சாதனைகள் என ஒன்றைக்கூட கூறி வாக்கு சேகரிக்க வில்லை.மாறாக எதிர்க்கட்சியினரை தாக்கியேவும் மதம் சம்பந்தமான பிரச்சனைகளையும் பாகிஸ்தான் போர் எனவும் இப்படியே பேசி வெற்றி கண்ட முதல் இந்தியப் பிரதமர்.அதற்கு எனது வாழ்த்துக்கள்*
*15) மோடி வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒன்று எதிர்க் கட்சியினர் ஒற்றுமையின்மையே.அது அவருக்கு பெரும் பலமாக இருந்தது.எதிர்க் கட்சியினரையும் ஒன்று சேர விடாமலும் பார்த்துக் கொண்டார்
எதிர்க்கட்சியினர் சிலர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என போராடினார்களோ அவர்களுக்கு வெற்றியை தானாகவே மோடிக்கு வாரி வழங்கியுள்ளனர்.தோல்விக்குப் பின் எதிர்க்கட்சியினரின் புலம்பல் நன்றாக தெரிகிறது*
*16) மக்களை ஈசியாக கவரும் நடிகர்களுக்கு தானும் நெருக்கமானவன் என்பதை தனது சுய புகைப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்றவும் பயன்படுத்தினார்*
*17) அனைத்து மக்களின் கையில் இருக்கும் செல்போன்களை எப்படி தனது விளம்பரைத்ததை கொண்டு செல்ல வேண்டும் என்ற நுட்பத்தை அறிந்து செயல்படுத்தினார்*
*18) தனக்கு எதிராக போராடியவர்களை இருக்கும் இடம் இல்லாமல் செய்தார்.(அய்யாக் கண்ணு,முகிலன்)*
*19) எங்கு எப்படி போராட்டம் நடந்தாலும் அதை ஈசியாக எதுவும் செய்து கட்டுப்படுத்தினார்
உதாரணமாக தமிழகத்தில் 35000 போராட்டங்கள் சில காலங்களில் நடந்தன இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பது போல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தி இன்று தமிழகத்தில் போராடுபவர்களை எச்சரித்தும் கட்டுப் படுத்தியும் வைத்துள்ளார்*
*20) இந்தியவின் முதுகெலும்பான விவசாயம் செய்யும் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு எந்த பலனும் தராமல் வெற்றி பெற்றுள்ளார்
விவசாயிகளை கார்பரேட் முதலாளிகள் மூலம் கட்டுப்படுத்தினார்*
*21) தனது படங்களை தொழிலதிபர்கள் மூலம் விளம்பரப்படுத்தினார்.அவர்கள் மோடி படம் போட்ட சேலை செயின் பனியன்கள் இனிப்பு வகைகள் இப்படி பல வழிகளில் அவரை விளம்பர்படுத்தினர்*
*22) பாஜக வில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி வளர நடவடிக்கை எடுத்தனர்.முக்கியமாக மூத்த தலைவர்களை ஓரம் கட்டினர்*
*23) பாஜக வின் ஐடி விங் என உருவாக்கி அதில் லட்சக்கணக்கில் இளைஞர்களை நியமித்து (ஊதியத்துடன்) தனது ஆட்சி சாதனைகளை பரப்புவதை விட அந்தந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் குறைகளை கடுமையாக விமர்ச்சித்து மக்களிடம் கொண்டு சென்றனர்*
*24) உலக நாடுகளிடம் தன்னை பெரிய சக்தி என நிருபிக்க அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்தார்.மேலும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் இந்திய தொழில் அதிபர்களை அழைத்து சென்று அவர்கள் அங்கு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தினார்
அதன்பலனாக தொழில் அதிபர்கள் இந்திய மீடியாக்களையும் கவனித்துக் கொண்டனர். பாஜக வுக்கு அதிக நிதியும் மோடி விளம்பரத்திற்கான செலவையும் ஏற்றனர்*
*25) மொத்தத்தில் சாதனைகள் செய்யாமலே பொய் பிரச்சாரம் சென்டிமெண்ட் பேச்சு போர் எதிர்க்கட்சியினரை தரம் தாழ்ச்சி விமர்ச்சனம் இவருக்கு கை கொடுத்தது*
*26) வட இந்தியர்களின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி அவர்களை ஈசியாக ஏமாற்றி ஆட்சி நடத்தியும் மீண்டும் நடத்தவும் வந்து விட்டார்*
*27) பாமர மக்களின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி வாக்கு பதிவில் நிறைய தில்லுமுல்லு வேலைகளை அவரது கட்சி பிரதிநிதிகள் செய்தனர்.இதற்கு தேர்தல் ஆணையம் காவல் காத்தது*
*28) இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்பதால் தான் அவர்களின் காவலன் என்பதை கூறி அவர்களை பல வழிகள் ஊக்கப்படுத்தினார்*
*29) ஒரு கட்சி மாற்றுக்கட்சியினரைத் தான் தன் கட்சிக்கு கொண்டு வரும்.ஆனால் இது வரை உலகில் யாரும் செய்ய முடியாத ஒன்றை மோடியும் அமித்ஷாவும் செய்தனர்
ஆம் மாற்றுக் கட்சியையே கைப்பற்றி இருக்கிறார்கள்(அதிமுக) இது பெரும் சாதனை*
*இவையாவும் மோடியின் மீண்டும் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக நான் கருதுகிறேன்*
உங்கள் கருத்தை பதிவிடவும். M d Soud