7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்
பத்திரிக்கைச் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள கொந்தகை – முனியாண்டிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா (23) 7 மாத கர்ப்பிணி பெண் போலீசாரால் கொடூர தாக்குதல்
தலித் சமூகத்தைச் சேர்ந்த சித்ராவை திருப்புவனம் காவல்நிலைய போலீசார் 5 பேர் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்
காயமடைந்த சித்ரா தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்
இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் களஆய்வு மேற்கொண்டனர் களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது
முனியாண்டிபுரம் ஊர்காவலன் கும்பாபிசேக திருவிழா தொடர்பான நாடகம் கடந்த 18.06.2019 அன்று இரவு நடைபெற்றது
இந்த ஊர்காவலன் கோவில் என்பது பட்டியல் சாதி பள்ளர் சமூகத்து மக்கள் மட்டுமே வழிபடுகிற கோவிலாகும். நள்ளிரவு அதாவது 19.06.2019 அன்று சுமார் 1.00 மணியளவில் திருப்புவனம் காவல்நிலைய போலீசார் சுமார் 5 பேர் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்
அப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 25 – 30 பேர் நியாயவிலைக் கடையின் மாடியில் நின்று கொண்டு நாடகத்தை பார்த்துள்ளனர்
திருப்புவனம் காவல்நிலைய போலீசார் அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்
அங்கு வந்த போலீசார் அந்த சிறுவர்களை ஆபாசமாக பேசி கீழே இறங்குங்கடா என்று மிரட்டியுள்ளனர். சிறுவர்களும் கீழே இறங்கியிருக்கின்றனர் திடீரென்று அந்த போலீசார் சிறுவர்களை பிடித்து அடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்
நாடகத்தை கீழே இருந்துதானே பார்க்கனும் ஏன் நியாயவிலைக் கடை மாடியில் நின்று பார்த்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே அக்குழந்தைகள் கன்னத்திலும் அறைந்துள்ளனர்
இதனை கவனித்த காளிஸ்வரன் என்கிற 28 வயது தலித் இளைஞர், ஏன் சார் குழந்தைகளை அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே அந்த போலீசார் காளிஸ்வரனின் கன்னத்தில் அறைந்து லத்தியைக் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்
இதனை கவனித்த கிôôமத்து மக்கள் ஓடிவந்து தடுத்துள்ளனர். காளிஸ்வரனின் மனைவியான 7 மாத கர்ப்பிணிப் பெண் சித்ரா, சார் தயவு செய்து என் வீட்டுக்காரரை அடிக்காதீர்கள் என்று போலீஸ்காரர்கள் காலில் விழ, அவர்கள் லத்திக் கம்பாலும் பூட்ஸ் காலாலும் எட்டி உதைத்து தாக்கியிருக்கின்றனர்
போலீசாரின் தாக்குதலால் மயக்கமடைந்த சித்ரா உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்
சித்ராவுக்கு நடந்த வன்கொடுமை குறித்து மருத்துவமனையில் எம்எல்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை
போலீசாரின் அத்துமீறல்
சமீபத்தில் கடந்த 15.06.2019 அன்று இரவு மதுரையில் போலீசாரின் அத்துமீறலால் விவேகானந்தகுமார் என்பவர் கொல்லப்பட்டார்
போலீசாரால் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டிருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றவரை போலீசார் தாக்கியிருக்கின்றனர்
போலீசாரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் வன்முறை என்பது பெரிய போராட்டம், கலவரம் போன்றவற்றில் தான் இருக்கும்
ஆனால் தற்போது சாதாரண நிகழ்வுகளில் கூட போலீசார் அத்துமீறல் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் பலமான சக்திவாய்ந்த ஆளுமை இல்லததனால் போலீசார் இப்படி தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்
இந்நிலையில் சித்ராவின் கணவர் காளிஸ்வரன் 20.06.2019 இன்று சம்பவம் குறித்து தலைமைச் செயலர் – தமிழ்நாடு, டிஜிபி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.
பெண் போலீசாரால் கொடூர தாக்குதல் பரிந்துரைகள்
• கர்ப்பிணி பெண் சித்ரா மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்
• வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
• பாதிக்கப்பட்ட சித்ராவின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
(A.கதிர்) செயல் இயக்குன