ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் எழுத்தாளர் டான் அசோக்
ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் ஒற்றுமையை விளக்குகிறார் எழுத்தாளர் டான் அசோக் சிறுவயதில் அண்ணன் எம்.ஜி.ஆரையும் தம்பி எம்.ஜி.ஆரையும் நம்பியார் பிரித்துவிடுவார். அண்ணன் எம்.ஜி.ஆர்தான் தனது எதிரி என தம்பி எம்.ஜி.ஆர் நினைத்துக் கொண்டிருப்பார்
சண்டை எல்லாம் கூட போடுவார்கள். ரெண்டு பேரும் வேறு வேறு மேனரிசங்கள் செய்வார்கள். ஒருவருக்கு கன்னத்தில் ‘மரு’ இருக்கும், இன்னொருவருக்கு இருக்காது
ஒருவர் கதாநாயகியின் பைஷப்ஸை மசாஜ் செய்தபடியே ‘க்யூட்டாக’ லவ் பண்ணுவார். இன்னொருவருக்கோ காதல் என்றாலே பிடிக்காது. இப்படி ஏதேதோ வித்தியாசம் காட்ட ரொம்ப கடுமையாக முயற்சிப்பார்கள்
ஆனால் நமக்கோ ரெண்டுமே எம்.ஜி.ஆர்தான் என்றும், கடைசியில் எப்படியும் சேரத்தான் போகிறார்கள் என்பதும் அவர்களின் முகரைகளைப் பார்த்த அடுத்த கணமே தெரிந்துவிடும். இருந்தாலும், “என்னதான் செய்றாய்ங்கனு பார்ப்போமே,” என பொறுமையாக காத்திருப்போம்
திரையில் உள்ள எம்.ஜி.ஆர்களுக்கு கடைசியில்தான் தாங்கள் வேறுவேறல்ல, ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் என்று தெரியும். உடனே, “அண்ணே தம்பி அண்ணே ” என கண்ணீருடன் கட்டித்தழுவிக் கொள்வார்கள்
பாஜக சங்கிகளும், நாம் தமிழர் தம்பிகளும் அப்படித்தான். தாங்கள் வேறுவேறு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றுதான் என நமக்கு முதலில் இருந்தே தெரிந்தாலும், அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளான பெரியார் எதிர்ப்பு,
திராவிட எதிர்ப்பு, மும்மொழி ஆதரவு, நுழைவுத்தேர்வு ஆதரவு என எவ்வளவுதான் பல சான்றுகளுடன் விளக்கிச் சொன்னாலும் அவர்களில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் சிலருக்கு பொசுக்கென்று கோபம் கூட வருகிறது.
ஆனால் இன்றுகூட பாருங்கள், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, “திராவிடம்” எனப் பேசியவுடன் இரண்டே இரண்டே தரப்புக்குதான் அடிவயிற்றில் அல்சர் ஏற்படுகிறது
ஒன்று பாஜக. இன்னொன்று நாம் தமிழர். இப்படி நாம் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆனால் என்ன, நாங்கள் ரெண்டு பேரும் ஒன்று இல்லை என எம்.ஜி.ஆர்களைப் போலவே சாதிப்பார்கள். சரி விடுங்கள் எப்படியும் திரைக்கதை முடியும்போது, “அண்ணே… தம்பி… அண்ணே…” என கட்டிக்கொண்டுதானே ஆக வேண்டும் அப்போது இருக்கிறது கச்சேரி!
–டான் அசோக்
ஜூன் 30, 2019