ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி
ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ” நான் பிராமண பெண் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் நிச்சயமா சாதி உள்ளது அதில் எந்த சந்தேகமும் இலலை என்கிறார்
குறிப்பாக பூணூல் எல்லோரும் அணிய முடியாது அதற்கான முறையான பயிற்சி வேண்டும் வைணவப் பேராசியர் வெங்கிட கிருஷ்ணன் தவறாக ஒன்றும் பேசவில்லை நிச்சயாக நான்கு பிரிவுகள் உள்ளது இதில் உசத்தி, தாழ்வு என்ற பிரிவு கிடையாது எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய முடியாது
சத்ரியன் தான் போர் செய்ய முடியும் மதுவந்தி அருண்
சத்ரியன் தான் போர் செய்ய முடியும் பிராமணரால் தான் முறைப்படி பக்குவமாக வேதமந்திரங்களை அதற்குரிய ஒழுங்கு அடிப்படையில் கற்று அதன்படி வாழ முடியும் என்கறார் மதுவந்தி அருண்
பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில்
சனாதன தர்மப்படி பார்ப்பனர் பிச்சை எடுத்துதான் ஜீவனம் நடத்தவேண்டும் – அதைச் செயல்படுத்தத் தயாரா
பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில் – என்று சொன்னவர் ஜகத்குரு காஞ்சி சங்கராச்சாரியார் (மகாபெரியவா)
இவர்கள் நடத்தும் கல்விநிலையங்களில் முறைகேடுகள் கட்டண கொள்ளை இதெல்லாம் பிராமணீயம் ஏற்காதே..
வர்ணதர்மப்படி, சனாதன நெறிப்படி, வைதீக வழிப்படி, சத்திரியன், வைசியன், சூத்திரன் செய்யும் தொழில்களை இன்று பிராமணர்களும்” செய்கிறார்கள
அதைக் கைவிட்டு பழைய முறைக்கே திரும்புவா ர்களா
இந்து சனாதனப்படி, கடல் கடக்கக் கூடாதே; வெளிநாட்டில் கணினிப் பொறியாளர், டாக்டர், ஆடிட்டர் மற்றும் ராஜதந்திர பதவிகளில் இருக்கிறார்கள் இதெல்லாம் விதி மீறல் இ்ல்லையா.. உணவு உடைகளில் கூட பிராமணர்களுக்கென்று தனிஒழுங்கு உள்ளதே .. அதுபோல் தான் மதுவந்தி வகையறாக்கள் இருக்கிறார்களா ..
வேலைக்கு செல்லும் பெண்களை சாஸ்திரம் விபாச்சாரி என்கிறதே .. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்ற பார்பனர்களின் ஜகத்குரு சங்கராச்சாரியார் சொன்னதை ஏற்கிறாரா
கட்டுபாடுகளும் சம்பரதாயங்களும் மீறப்படுவது காலங்காலமாய் நடப்பதுதான்
இவையெல்லாம் மீறப்படலாம் சாஸ்திர வேதங்கள் மீறப்படலாம் ஆனால் வர்ணகோட்பாடு சாதீயநிலையும் வேண்டும் என அதை பெருமையாக சொல்லிக்கொள்கிறார்
இவரது பாட்டி ராஜலட்சுமி பார்த்தசாரதி இயக்குனர் பாலசந்தருக்கு அளித்த பதிலில்
அரங்கேற்றம் பட விவகாரத்தில்
கட்டுபாடுகளும் சம்பரதாயங்களும் மீறப்படுவது காலங்காலமாய் நடப்பதுதான் பணம் புகழ் பதவி நோக்கி நகரும் வாழ்வில் இழப்புகளும் விதி மீறல்களும் (சாஸ்திரம்) ஏற்படுவது தவிர்க்கமுடியாது புதியவைகள் புகதான்செய்யும் கலப்பிடமில்லாதது ஏதுமில்லை என்றார்
தனித்துவம் என்பதும் மூன்று தலைமுறை ஒரே பிரிவில் என்பதெல்லாம் மிகப்பெரிய பொய் இதையெல்லாம் ஆய்ந்தால் அதிர்ச்சியே தரும்
இவையெல்லாம் அறிவார் ஆனாலும் தங்களை உயர்ந்தவர்கள் என சொல்லிக்கொள்வதில் கர்வம்
..
ஆலஞ்சியார்