ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை
ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை
உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்து மேல்முறையீடு செய்ய மூன்றுநாள் அவகாசம் வழங்கிய நிலையில் அரசும் ஊடகங்களும் சிதம்பரத்தை காணவில்லை என கதை பரப்புகிறது ஓடியொளிய இவர் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஏன் ஜெயலலிதாவை இழுக்கவேண்டுமென கேட்கலாம் இந்திய நீதியின் நிலைபாடென்பது வர்ண கலவையிலானது
சிதம்பரம் மிகப்பெரிய பொறுப்பு களை வகித்தவர்
சிதம்பரம் மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தவர் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர் நாடறிந்த அரசியல்வாதி திறமையான நிர்வாகி என பெயரெடுத்தவர் அதைவிட செட்டிநாட்டரசரின் பேரன் அப்படியொன்றும் ஓடியொளிய மாட்டார் பின் ஏன் இத்தனை களேபரம்,
திமுக நடத்தும் அரசின் கஷ்மீர் நிலைபாட்டிற்கெதிரான போராட்டம் உலகளவில் பேசபட்டுவரும் நிலையில் அதை இந்திய மக்களின் கவனத்திலிருந்து மடைமாற்ற ஒரு முயற்சி அவ்வளவுதான்
எச்.ராசா போன்றவர்கள் மீதான வழக்குகள் இப்படிதான் கையாளபட்டதா?
ஐஎஎஎக்ஸ் மீடியா வழக்கில் அவர் மீது வழக்கு பதிவு செய்யபடவில்லை முதல் தகவல் அறிக்கை இ்ல்லை ஆனாலும் கைது செய்ய பாஜக அரசு முயற்சிக்கிறது வழக்கை சந்திக்கவேண்டும விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்பதில் இரு கருத்தில்லை
உயர்நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காலம் கடத்தி நீர்த்துபோக செய்தார்களே எச்.ராசா போன்றவர்கள் மீதான வழக்குகள் இப்படிதான் கையாளபட்டதா
நீதி எல்லோருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும் சிதம்பரம் புனிதரென்று சொல்லவரவில்லை ஆனால் பொருளாதார மந்தநிலை இந்தியாவில் தொழில் நசிந்து வேலைவாய்ப்புகளை இழக்க தொடங்கியிருக்கிறார்கள் ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க மக்கள் யோசிக்கிற நிலையில் இருப்பதாக பிரிட்டானியா நிறுவனர் சொல்கிறார்
இதையெல்லாம் மறக்கடிக்க செய்யவேண்டும் அதற்காக துரிதகதியில் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்துவதென்பது சரியில்லை
ப.சிதம்பரம் விசாரணையை எதிர்க்கொள்ளவேண்டும் பிணை மறுக்கபட்டநிலையில் பத்திரிக்கையாளர்களை அன்றே சந்தித்திருந்தால் எங்கே ப.சி என ஊடகங்கள் தன் தொழிலை செய்திருக்காது
திமுகவினர் உட்பட சிலர் மகிழ்கிறார்கள் ஸ்பெக்டம் ராசாவை குறிவைத்தவர்தானே ராசா வாய்தா வாங்காமல் ஜெயலலிதா போல் இழுத்தடிக்காமல் பிணை கேட்டு கதறாமல் துணிவோடு வழக்கை வென்று வரவில்லையா என்கிறார்கள்
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முக செட்டியார்
“அறம் வெல்லும் ” என ஆசான் அப்போதே தெளிவுபடுத்தியிருந்தார் எமக்கு தீங்கிழைத்தவர் என்றாலும் மறப்போம் மன்னிப்போம் என்ற பேரருளாளின் வழி வந்தவர்கள் நாம்
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முக செட்டியார் கடுமையாக பெரியாரை விமர்சனம் செய்வார்/திட்டுவார்.. ஆனாலும் பெரியார் அவரை கடுஞ்சொல் சொன்னதில்லை மாறாக சண்முகம் அறிவாளி என்பார் அதே நிலைபாடுதான் நமக்கும்
இந்த பாசிச அரசு குற்றவாளிகளை கொடுஞ்செயல் செய்வோரை நீதிபதிகளை மிரட்டுவோரை கொலைபழி சுமந்தோரை எம்எல்ஏக்களை விலைபேசி வாங்குவோரை .. வங்கியை ஏமாற்றி நாடுகடக்க காசுவாங்குவோரை
கருப்புபணத்தை வெள்ளையாக்க கூட்டுறவுவங்கியை பயன்படுத்துவோரை கொண்ட /கொண்டாடுகிற அரசு .. ஆனால் அறிவாளிகள் முற்போக்காளர்கள் ஜனநாயகவாதிகள் திறமையான நிர்வாகிகள் நிபுணர்கள் இவர்களை கண்டால் ஆகாது ..
..
ஆலஞ்சியார்
..
ஆலஞ்சியார்