இட்டிலி யை அறிமுகப்படுத்திய விசய நகர அரசு..
விசய நகர பேரரசு .. என்ற ஒற்றை சொல் தான் தாய்த் தமிழகத்தின் அனைத்து வகையான கலப்பிற்க்கும் மூல காரணமாகும்.,
குறிப்பாக மொழிக் கலப்பு,15 ம் நூற்றாண்டில் தான் தெலுங்கு மொழியும்,சமஸ்கிருத வட மொழிகளும் தமிழகத்தில் ஊடுருவின அது வரை வேறு எந்த மொழியும் இல்லாமல் தமிழ் நிலத்தில் தமிழ் மட்டுமே கோலேச்சிய நிலையில் சற்று சருக்கல் ஏற்பட விசய நகர பேரரசின் படையெடுப்பே முக்கிய காரணமாகும் ..
மேலும் குறிப்பாக தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நாயுடு.,ரெட்டி,அருந்ததியர்கள் மற்றும் குஜராத்தை பூர்வீக மாக கொண்ட சௌராஸ்ட்ரா க்கள் தமிழகத்தில் குடியேற விசய நகர பேரரசே காரணம்,பார்ப்பணிய ஆதிக்கம் தமிழக இந்து மதத்தில் தலை தூக்கியதும் இக் காலத்தில் தான்..
இது மட்டுமல்ல உணவு பழக்கவழக்கமும் பெரிய மாற்றமடைந்தது..நாம் இன்று தவிர்க்க முடியாத இட்டிலி ..தோசை.,அதிரசம் போன்றவைகள் நாம் 15ம் நூற்றாண்டில் தான் உண்ண ஆரம்பித்தோம் ,அதை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் வி.ந பேரரசே.இவை பற்றிய குறிப்புக்கள் விசய நகர ஆட்சி கால கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது..
ஆனால் பக்தி இயக்கத்தின் மூலம் தமிழர் உணவு வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. .ஆம் லட்டு ( லட்டுவம்) எள்ளுருண்டை,அப்பம், போன்றவை பெரியாழ்வார் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார் So நம் முன்னோர்கள் 6 ம் நூற்றாண்டிலே லட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். ஆக 14 நூற்றாண்டு பழைமையான ஸ்வீட் அயிட்டம் தான் இன்றைக்கும் கண்டினியுட்டி ஆகிறது.# இளம்பரிதி யின் படித்ததில் பிடித்தது #
இந்த வலைப்பதிவில் தேடு
உணவு ரகசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு ரகசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி