காதல் மனைவியை கவுரவக்கொலை செய்து விடுவார்கள். எனவே அவரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் என்று சென்னையில் மனைவியை தேடி அலையும் கணவர் போலீசை கேட்டுக்கொண்டார்.
மாணவியின் காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர் மார்க் ராஜீவ் (வயது 24). சொந்த ஊரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.
இவர், சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இறுதியாண்டு படிக்கும் சுருதியை உயிருக்கு உயிராக காதலித்தார். சுருதி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை கோபாலகிருஷ்ணன் ஊட்டி நகராட்சி அ.தி.மு.க. துணைத்தலைவர் ஆவார்.
சுருதியின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த கோபாலகிருஷ்ணன், மகளுக்கு பெங்களூருவில் வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்தார். ஆனால் சுருதி தாய்-தந்தையை ஏமாற்றி விட்டு, காதலன் மார்க் ராஜீவை கடந்த 11-ந் தேதி அன்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
கடத்தல்
இந்த நிலையில் எனது வீட்டுக்கு அடியாட்களுடன் வந்த கோபாலகிருஷ்ணன், மனைவி சுருதியை கடத்திச் சென்று விட்டார் என்றும், என்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார் எனவும் ராயக்கோட்டை போலீசில் கடந்த 14-ந் தேதி பரபரப்பு புகார் மனு ஒன்றை மார்க் ராஜீவ் கொடுத்தார். அந்த மனு மீது ராயக்கோட்டை போலீசார் கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தி, தினத்தந்தி நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது. இதை எடுத்துக்கொண்டு, மார்க் ராஜீவ் தனது தாயாருடன், நேற்று சென்னை வந்தார். பின்னர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து எனது மனைவியை பெரம்பூரில் உள்ள ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது என்றும், அவரை பத்திரமாக மீட்டுத்தரவேண்டும் எனவும் கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் சென்று அவர் முறையிட்டார்.
கவுரவக்கொலைக்கு வாய்ப்பு
கமிஷனர் அலுவலகத்தில் மார்க் ராஜீவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நானும் கேரளாவை சேர்ந்தவன் தான். சுருதியும் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். வெவ்வேறு மதமும் எங்கள் காதலுக்கு குறுக்கே நின்றது. அதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை அவரது தந்தை கவுரவக்கொலை செய்து விட வாய்ப்பு உள்ளது. எனவே, எனது மனைவியை போலீசார் பத்திரமாக மீட்டுத்தர வேண்டும்’’ என்றா