Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜல்லிக்கட்டு தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜல்லிக்கட்டு தடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

 

மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும் மெரினாவின் கடைசி நிமிடங்களைக் கடந்துவர இன்னும் இயலவில்லை. இன்னும் அந்தக் கிழிந்த கால்சட்டையைக் கழற்றாமல் அமர்ந்திருக்கிறேன். அதிகாரிகள் நடத்திய நாடகங்கள், கண்முன் வெளிப்படையாகச் செய்த சூழ்ச்சிகள், சினிமாவைவிட அதிபயங்கரமாக இருந்தன. ஓர் அதிகாரக்குரலின் கூச்சலில் விடிந்த அந்தப் பொழுதில் கண் விழிப்பதற்குள் விழுந்தது அடி. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மீண்டும் இரு அடிகள். அனைத்து இளைஞர்களும் பொதுமக்களும் கடலை நோக்கி ஓடத் தொடங்கினோம். லத்தியுடன் துரத்திக்கொண்டே வந்தனர் போலீஸ்காரர்கள். சேலைக்கட்டி ஓட முடியாமல் சில பெண்கள் தடுமாற, அவர்களை ஒரு பொம்மைப்போல் தூக்கி வீசினர் காவல் துறையினர். நான்கு திசைகளிலும் சிதறி ஓடினோம்; கடலுக்குள் இறங்கினோம்; காலில் விழுந்து மன்றாடினோம். சில மாணவர்கள் அப்படியே கடல் அலைகளுக்குள் மூழ்கினார்கள். இறந்துவிடுவார்களோ என்று பயந்து பின்வாங்கியது காக்கிச் சட்டை. அவர்களை மீட்டுவந்து மனிதச் சங்கிலி அமைத்தோம்; ‘போலீஸ் வெளியேற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தோம்; பெண்களையும் குழந்தைகளையும் எங்கள் மையத்தில் வைத்தோம்.

நிலைமை சற்றுச் சீரான பிறகு சுற்றிலும் அழுகுரல்கள், தேடல்கள். ‘தனது நண்பரின் கை முறிக்கப்பட்டு அவர் துடித்தபோதிலும்… தொடர்ந்து அடித்தனர் போலீஸார் என்றும், சில மாணவர்கள்… அவரை, தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் என்றும், அடிபட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கரு கலைந்துவிட்டது’ எனவும் அழுதுகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் இருந்தோம். கூட வந்த உறவுகள் எங்கே எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்க, இங்கிருந்து கலைந்துசென்ற மாணவர்களில் சிலர் பட்டினம்பாக்கம் வழியாக மெரினாவை நோக்கி ஓடிவந்தனர். அவர்களைத் தடுக்க போலீஸார் லத்திகளுடன் ஓடினர். மாணவர்களுள் சிலர், கடலில் குதித்து நீச்சல் அடித்து எங்களுடன் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள்ம் அப்படியே நின்றனர். மேலும், சிலர் விவேகானந்தர் இல்லத்தின் வலப்புறம் இருந்து ஓடிவந்தனர். இந்தத் தடியடி சம்பவத்தை அறிந்த குப்பத்து மக்களும் மீனவர்களும் துறைமுகச் சாலையின் வழியே வந்து போராட்டக் குழுவோடு இணைந்தனர். 9 மணியளவில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடிவிட்டோம். நேரம் ஆக ஆக… பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை தேடி அலைமோதினர்.
சில பெண்கள், காவல் துறையினர்களிடம் சென்று பையோ டாய்லெட்டை உபயோகிக்க அனுமதி கேட்டனர்; மறுத்துவிட்டனர். ‘அதை எடுத்துவந்து இங்கே வைத்துக்கொள்ளலாம்’ என்று எங்களுள் சிலர் முன்னேற… லத்திகளுடன் ஓடி வந்தனர் போலீஸார். வேறு வழியின்றிச் சில பெண்கள்  வயிற்றைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துகொண்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் உடனே, கடற்கரை மணலில் பெரிய குழிதோண்டி… தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்களையும் துணிப் பைகளையும் கிழித்து, கட்டைகள் வைத்து கழிப்பறை கட்டத் தொடங்கினர். இதைக் கண்ட மீனவ மக்கள், ‘நாங்க தங்குற குடிசை இருக்கு; பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துட்டோம்; இதைச் சுத்தி துணியைக் கட்டி கழிவறையா பயன்படுத்திக்கோங்க’ என்றனர். நெகிழ்ந்துவிட்டோம். தங்கள் இருப்பிடத்தைக்கூட மாணவர்களுக்காக கழிப்பறையாக மாற்றித் தந்தனர் மீனவர்கள். கழிப்பறை காட்டியதை காணொலியாகப் பதிவுசெய்தோம்.
 
 

 
 
 
அந்தக் குடிசையைச் சுற்றி நம் மாணவர்கள் நின்றுகொண்டு, எந்த போலீஸாரும் வராமல் பார்த்துக்கொண்டனர். மாணவர்களுக்காகக் கொண்டுவந்த உணவையும், நீரையும் தடுத்துநிறுத்தி போலீஸார் பிடுங்கி உண்டனர். மிச்சம் இருந்த உணவுகளைக் கழிவறையில் கொட்டினர். இந்தத் தகவல் அறிந்த மீனவர்கள், சிறிது நேரத்தில் உணவு மற்றும் நீருடன் ஒரு பெரிய லாஞ்சு போட்டுடன் அங்கு வந்தனர். கரையில் இருந்த மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு சென்று உணவுகளை நிரப்பிவந்தனர். மேலும், இரண்டு படகுகளில் இருந்து உணவும் நீரும் வந்தது. ‘தம்பி கோட்ரஸ்ல சொல்லிட்டோம். கடனுக்கு டீசல் வாங்கிக்கொண்டு வர்றாங்க. இன்னும் எத்தனை பேருக்கு சாப்பாடு தேவைன்னு சொல்லுங்க தம்பி, எங்க புள்ளைகளுக்கு நாங்க கொண்டு வர்றோம்’ என்று குதூகலித்தனர் மீனவத் தோழர்கள். அவர்களுக்கு பதில் கூறும்முன் போலீஸார் லத்திகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர்.
மிரண்ட எங்கள் கூட்டத்தினர் அனைவரும் ஒரு வட்டமாகச் சேர்ந்தோம். குப்பத்து பாட்டி ஒருவர், ‘இங்கிட்டு வாங்க புள்ளைகளா, எங்களைத் தாண்டி உங்களை அடிக்கமாட்டாங்க’ என்று சிவப்புச் சீலையை கொடிபோல ஆட்டி பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முன்சென்று நின்றார். ஒன்றுகூடி கோஷமிட்டதனால் ஓடி வந்த காவல் துறையினர் ஒடுங்கி நின்றனர். கலைந்து செல்லச் சொல்லி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடற்கரைச் சாலையின் பின் இருந்து, கறும்புகை கிளம்பிக் கொண்டிருந்தது. பெரிய தீ விபத்து நடந்ததுபோல இருந்தது. ‘உங்கள் மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இப்போது நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்துவோம்’ என்றார் போலீஸ் உயர் அதிகாரி.
கலைந்து சென்ற நம் மாணவர்களுள் சிலர், விவேகானந்தர் இல்லத்தின் வலது புறம் இருந்த கோட்ரஸின் மாடியில் நின்றிருந்தனர். அவர்களுக்கு போன் செய்து விசாரித்ததில், காவல் துறையினர்தான் வண்டிகளுக்குத் தீ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ‘நம் மாணவர்கள் யாரும் அங்கு இல்லை’ என்று கூறினர். அப்போது, திடீரென காவல் துறையினர் மீது எங்கள் கூட்டத்தில் இருந்த சிலர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இதனால், ஆவேசமான காவல் துறையினரை நாங்கள் தடுத்து நிறுத்தி, செருப்புகளையும் கற்களையும் எறிந்தவர்களைப் பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தோம். போலீஸாரும், அவர்களைச் சிரித்துக்கொண்டே அரவணைத்துக்கொண்டனர். காரணம், எங்கள் கூட்டத்துக்குள் மஃப்டியில் இருந்த போலீஸார்தான் இந்த அநாகரிகச் செயலை செய்தது. ‘எங்கள்மீது இன்னொரு முறை செருப்புகளோ பாட்டில்களோ விழுந்தால் கண்டிப்பாக தடியடி நடத்துவோம்’ என்றார் உயர் அதிகாரி. எங்கள் மீது தடியடி நடத்தியே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் இருந்து கலவரத்தைத் தூண்ட சில போலீஸார் அங்கு நின்றிருந்தனர். காவல் துறையின் இந்தச் சதியை அறிந்து அனைவரும் அப்படியே தரையில் அமர்ந்தோம். அமர்ந்தவர்களைச் சுற்றி மனிதச் சங்கிலி போட்டு அரணாக நின்றனர் சில மாணவர்கள்.

மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

மேலும், எவரும் காவல் துறையினரை நோக்காமல் கடலை நோக்கியே திரும்பி உட்கார்ந்தோம். எங்கள் கூட்டத்துக்குள் கற்களை போலீஸார் மீது வீசக் காத்திருந்த சில விஷமிகளை மாணவர்களுள் சிலர் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்களுள் சிலர், போலீஸாருடன் கைகோத்தனர். ‘வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்’ என குரல் வற்ற கத்திய போராட்டக் குழு, அவ்வளவு அழகாகவும் வழிநடத்திக் கொண்டிருந்தது. அதையும் மீறி போலீஸார் மீது எறியப்பட்ட செருப்புகளையும்… பாட்டில்களையும் நாங்கள் தடுத்தபோதிலும் போலீஸார் எங்கள் மீது தடியடி நடத்தினர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் தடியடி நடத்தக் கூடாது என்று தடை வாங்கி வந்தனர். எந்த ஒரு வன்முறையும் நடக்கக் கூடாது என்று அவ்வளவு உறுதியாகத் திட்டம் வகுத்தனர் மாணவர்கள். உச்சிவெயில், தண்ணீர் இல்லாததால் சில மாணவர்கள் மயங்கிவிழுந்தனர். அவர்களை தூக்கிக் கொண்டு ஓடினர், கூட்டத்தினர். தகவல் அறிந்து தண்ணீருடன் ஓடிவந்த சில மாணவர்களைத் தடுத்து, அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினர் காவல் துறையினர். எங்கள் கண்முன்னே அந்தத் தண்ணீரை… அவர்கள் பகிர்ந்து அருந்தினர். இவ்வளவு வெறியாட்டம் இங்கே நடந்துகொண்டிருக்க, சில நியூஸ் சேனல்களில் – ‘மெரினாவில் மாணவர்கள் கலைந்துசென்றனர். தற்போது தேசியக்கொடியை எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று செய்திகள் வெளியாகின. அவ்வளவு நாள் எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரும், ‘வெளியேறுங்கள்’ என்று கூறி கைவிட்டார்கள். பிறகு லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வந்ததும்… தோழர் தியாகு மற்றும் நீதிபதிகள் வந்ததும் நடந்ததும் நாடறிந்ததே…
‘சட்டம் இயற்றப்பட்ட பிறகும்… ஏன் அங்கு அமர்ந்திருந்தீர்கள்’ என்று கேட்கும் அன்பர்களே…
நாங்கள் அவ்வளவு உறுதியாக அங்கே அமர்ந்திருந்ததற்கான காரணமும்… எங்கள் கேள்விகளும் இதுதான்…
மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

 
அன்று மாலை எங்களிடம் பேச வந்த நீதிபதி ஹரி பரந்தாமன், ‘சற்றுநேரத்துக்கு முன்தான் எங்களுக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கானஅதிகாரபூர்வமான அறிக்கை வந்தது’ என்றார். ‘சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் நாங்கள் எப்படிக் கலைந்துசெல்ல முடியும்’ என்று காவல் துறையினரிடம் கேட்டதற்கு, ‘நீங்கள் செல்லவில்லை என்றால்… தடியடி நடத்துவோம்’ என்றனர். ‘சரி, மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அவகாசம் கொடுங்கள்’ என்று மன்றாடினோம். இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்திருந்தால், மக்களுக்கு அதைப் புரியவைத்து கலைந்து சென்றிருப்போம். பத்து நிமிடம்கூட அவகாசம் கொடுக்காமல் வேண்டுமென்றே அடித்துவிரட்டினார்கள், போலீஸார்.
அத்தனை மக்களும் அங்கு அமர்ந்திருக்க… கலவரம் செய்தது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? எந்த ஒரு வெற்றியும் இன்றி, 6 நாட்கள் வெந்துகிடந்த இந்த மாணவர்கள் எப்படி கலைந்துசெல்வர்? எங்களுக்குள் இருந்த விஷமிகளை நாங்கள் தடுத்துவிட்டோம். கலவரத்தை உண்டு பண்ணியது காவல் துறைதான் என்பதும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இன்று அந்தக் குப்பத்து மக்கள் மீதும்… மீனவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது காவல் துறை. இப்படியொரு வெறியாட்டத்தை காவல் துறையினரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அந்த மக்களுக்கோ, கைது செய்யப்பட்ட எங்கள் மாணவர்களுக்கோ அநீதி இழைக்கப்படுமெனின்.
மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும்.
நாளை காவல் துறையினருக்கு ஓர் அநீதியெனில்கூட,
மீண்டு வர போராட்டம் நடக்கும்!’
 
Thanks Vikatan

உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.

  1. காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில்,
  2. தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது.
    போராட்டம்
  3. மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.
    பொதுமக்கள்மீதான தாக்குதல்கள் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். “மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
  4. அரசியல் பேசக் கூடாது.” அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.
    இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும்.
  5. இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும்.
  6. அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டிப் புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களைச் சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?
  7. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், “தேசியக் கொடி பிடித்தால்,
  8. தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது” என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்
  9. . “ஜனகண மண” பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவைச் சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
  10. தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும்பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
  11. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை.
  12. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.
  13. ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில்
  14. , பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.
    போராட்டக் களத்திற்குள் இடது சாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசைப் பீதியுற வைத்துள்ளது.
  15. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள்.
  16. இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.
  17. இனிவரும் காலங்களில் இடது சாரி அமைப்புகள்மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம்.
  18. “தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்” என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம்.
  19. அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
    சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடது சாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
  20. (நாம் தமிழர் என்ற வலது சாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)
    மேலும்,
  21. “பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், “தோழர்” என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்” சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
  22. அதன் அர்த்தம் என்ன? இடது சாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?
  23. பெற்றோரே பிள்ளைகளைக் காட்டுக் கொடுக்க வேண்டும்” என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
  24. Written By Kalai Marx 
  25. https://youtu.be/hf80oy0gK3g   

மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம் ஓயவில்லை

வெற்றிவிழாவாக மாற வேண்டியதை சோக விழாவாக மாறியது யார்?
தடியடி நடத்த கமிஷனர் ஜார்ஜுக்கு உத்தரவு இட்டது யார்? அல்லது அவர் தன்னிச்சையாக செய்தாரா?
முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை குறை சொல்ல இயலாதும, அவரால் என்ன செய்ய இயலுமோ, வாக்குறுதி அளித்தபடி செய்து முடித்துவிட்டார்.
டில்லிவரை சென்று அவசர சட்டம் கொண்டு வருவதற்குண்டான அனைத்து வேலைகளையும் செய்தது, அவசர சட்டம் கொண்டு வந்தது, சட்டபேரவை சிறப்பு கூட்டம் கூட்டி அதை சட்ட வடிவமாக்கியது ..அனைத்தும் சீராகத்தான் சென்று கொண்டு இருந்தது. அதே வேளையில் போராட்டமும் அறவழியில், அமைதியாகத்தான் நடந்து கொண்டு இருந்து.
போராட்ட குழுவினரின் முயற்சியையும் மழுங்க செய்ய வேண்டும், அதன் மூலம் அவர்களை சோர்வடைய செய்ய வேண்டும், முதல்வர் பன்னீர் அவர்களுக்கு இதற்குண்டா புகழ் கிடைக்க கூடாது, அவரும் கவுக்கப் படவேண்டும் என்று, பக்கா திட்டம் போட்டு அப்பாவி பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, இரண்டு தரப்பினருக்குமே தீராத கஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது யார்?
காவல்துறையை வைத்தே கலவரத்தை தூண்டும் உத்தியை முதல்வரால் செய்ய இயலாது, அந்த அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை.
அத்தனைக்கும் விடை, கமிஷனர் ஜார்ஜ் என்பவர் கையில் உள்ளது, அவர் விசாரிக்கப்பட வேண்டும், இதை உச்ச நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டு,நடத்த வேண்டும்.
கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பாக பதவி விலகவேண்டும்.

சென்னை மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம் ஓயவில்லை, மீனவர்கள் முழு ஒத்துழைப்புடன் நடந்து கொண்டு தான் இருக்கிறது,
வீரிய மிக்க இளைஞர்கள் சுமார் 300 பேர்கள் குழுமி உள்ளார்கள், இந்த கூட்டம் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.
அவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்னுறித்தி போராட்டத்தை தொடர்கிறார்கள். 

Haja Deen 

மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம்

எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி 300க்கும் மேற்பட்டோர் மெரீனாவில் நடத்தி வரும் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.*
1* *ஜல்லிக்கட்டுக்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தை 9வது பிரிவில் சேர்க்க முதல்வர் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்படும்.*
*காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இன்னும் இவர்கள் நீக்கவில்லை.*
*மேலும் பீட்டா அமைப்புக்கு எதிராகத் தடை எதுவும் இன்னும் விதிக்கப்படவில்லை.*
2. *போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை வழக்குகள் எதுமின்றி விடுதலை செய்ய வேண்டும்*
3. *போராட்டத்தில் மறைந்தவர் குடும்பத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும்*
ஜல்லிக்கட்டு தடை

இதில் அரசியிலும், சினிமா பின்னணியும், சமூக விரோதிகளுக்கும் இடம் கொடுக்காமல் நடைபெற்றால் நலம்
_____________=____=___=_____________
*10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற போராட்டம் இப்போது 300 பேருடன் நீடித்து …
spread this… support them…

ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழா

  1. ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழாவை ஆப் செய்து விட்டார்கள் தேச பக்தகோடிகள்.
  2. தேசியக் கொடியைக் கீழே போட்டு இழிவுபடுத்தினார்கள், முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல விசயங்களில் உரிமை மறுக்கிறது என்று சொல்கிறார்கள்,
  3. காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார் என்கிறார்கள்,
    ஹிப் ஆப் தமிழா
  4. சொல்லப்போனால் மோடிஜீயை நார் நாராகக் கிழிக்கிறார்கள், சில அமைப்புகள் போராட்டத்தைத் திசை திருப்புகின்றன அதனால்தான் நான் போராட்டத்திலிருந்து வாபஸ் வாங்கி விட்டேன் என்று ஹிப் ஆப் தமிழா ஆதி சொல்ல,
  5. சபாஷ் நீதான்டா உண்மையான தமிழன் என்று பாஜக எச்சி.ராசா சொல்ல, ஒரே கூத்தும் கும்மாளமுமா கெடக்குது.
  6. முதலில் ஒன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் மத்திய அரசின் துரோகத்தையும் மாநில அரசின் நாடகத்தையும் எதிர்த்துதான்
  7. துவக்கப்பட்டது. பீட்டா என்ற அமைப்பிற்கு எதிராகப் போராட்டம் துவக்கப்படவில்லை.
  8. காரணம் பீட்டா என்ற அமைப்பு ஒரு தனியார் அமைப்பு, அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள்
  9. . ஆகப் பீட்டா என்ற அமைப்பு வெறும் பேனர் மட்டும்தான்.
    இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களை இந்த ஹிப் ஆப் தமிழா ஆதி போன்ற சோமாரிகள் உள்ளே புகுந்து என்னவோ பீட்டா என்ற அமைப்புதான் எல்லாவற்ற்கும் காரணம் என்பது மாதிரியும்,
  10. மத்திய அரசு ஐஸ் குச்சியைச் சப்பிக் கொண்டு போஸ் கொடுக்கும் சின்னக் குழந்தை மாதிரியும் பீட்டா மட்டும்தான் ஜல்லிக்கட்டை தடை செய்தது மாதிரியும் பீட்டா பீட்டா எனப் பீட்டாவை மட்டும் வில்லனாக்கி மக்களைத் திசை திருப்பி விட்டார்கள்.
  11. ரயில் நிலையத்தில் வேகமாக வரும் ரயிலை ஸ்டேசனில் ட்ராக் மாற்றி விடுவதைப் போல ஹிப் ஆப் தமிழா ஆதி போன்ற பாஜக புல்லுருவிகள் போராட்டத்திற்குள் புகுந்து மக்களைத் திசை மாற்றி விட்டனர். பீட்டா என்பது வெறும் கிளைதான், அதன் ஆணிவேர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்கள். பீட்டாவைத் தடை செய்தால் அடுத்து டாட்டா என்ற பெயரில் வேறு அமைப்பு வரும். ஆகக் கிளையை வெட்டுவதை விட ஆணி வேரைப் பிடுங்குவதுதான் சரியானது என்பதை உணர்ந்துதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை மத்திய அரசை நோக்கித் தங்களை போராட்டத்தை மீண்டும் திருப்பினார்கள்.
  12. தேசியக் கொடியை அவமதித்தார்கள் என்று ஆதி சொல்கிறார். ஆனால் மரத்தமிழர்கள் எப்போதும் தேசியக் கொடியை அவமதித்தார்கள் என்று சொல்வதெல்லாம் பச்சைப் பொய். தேசியக் கொடியைத் தலைகிழாக ப்ரொபைலாக வையுங்கள் என்று சிலர் சொன்னார்கள்,
  13. அதைத்தான் அவமதித்து விட்டார்கள் என்று சொல்கிறார் ஆதி. இது அவமதிப்பது அல்ல! நாட்டு மக்களின் கொந்தளிப்பில் எழுந்த ஒரு வகையான எதிர்ப்பு. இதைத்தான் ஆதி அவமரியாதை என்கின்றார்.
  14. ஆனால் இன்றைக்கு அவர் போய்ச் சேர்ந்திருக்கும் இடத்தில் உள்ளவர்கள் அதே தேசியக் கொடியை விரித்து வைத்துச் சீட்டு விளையாடினார்களே! அதைக் கேட்டாரா?
  15. பிரதமர் மோடி தேசியக் கொடியில் முகம் துடைத்தாரே! அதைக் கேட்டாரா?
  16. மலேசியாவிற்கு உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் இந்தியாவின் தேசியக்கொடி தலைகீழாக இருந்ததை ஜப்பான் நாட்டு அதிபர் சுட்டிக் காட்டி கொட்டு வைத்தாரே! அது அவமரியாதையாகத் தெரியவில்லையா?
  17. ஹிப் ஆப் தமிழா ஆதியைப் பாராட்டும் எச்.ராசா உறுப்பினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அலுவலகங்களில் இன்றுவரை தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்ற கொள்கை வைத்துள்ளார்களே! அது அவமரியாதையாகத் தெரியவில்லையா  ஹிப் ஆப் தமிழா ஆதி?
  18. பாவம் நீலச்சாயம் வெளுத்துப் போன நரியைப் போல ஹிப் ஆப் தமிழா ஆதியின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
  19. அஹ்மத் கபீர்.

மாணவர்களே அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும்?

  1. அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே,
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க

    ஓர் அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நாடு முழுமைக்கும் நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.
  2. கடந்த ஒரு வாரக் காலமாக எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.
  3. இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே குறிப்பிடத் தக்க போராட்டமாக இடம் பெறும் என்பது நிச்சயம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி இப்படி ஒன்றுபட்டு நின்று போராடியதற்கு முன்னுதாரணம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    ஜல்லிக்கட்டு தடை
  4. போராட்டத்தின் துவக்கத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமே கோரிக்கையாக இருந்தது, பிற்பாடு அது பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாக மாறியது.
  5. காவிரி நீர், விவசாயிகள் தற்கொலை, நீட் நுழைவுத் தேர்வு எனப் பல பிரச்சினைகளுக்காகவும் குரல்கள் எழுந்தன. அனைத்துக்கும் மையமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி என்ற கோரிக்கையே இருந்தது.
  6. உங்கள் கோரிக்கையின்படி அரசு இறங்கிவந்து, மத்திய அரசுடன் கலந்து பேசி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை நடத்த வழிசெய்து விட்டது. ஆக, உங்கள் போராட்டத்துக்கு நேற்றே வெற்றி கிட்டி விட்டது.
  7. இந்தச் சூழலில் போராட்டத்தை நிறுத்தாமல் பொதுமக்களை வாட்டும் மிக முக்கிய பிரச்சனைகள் குறித்தும் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தது உங்கள் நல்ல மனதைக் காட்டும் அடையாளமாகவே பார்க்கிறோம்
  8. . ஆயினும், இது மிகவும் அபாயகரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
    மெரினாவில் மாணவர்கள் போராட்டம்

    எந்தவொரு போராட்டத்தையும் எப்போது நடத்த வேண்டும் என்பது மட்டுமல்ல, எப்போது முடித்துக்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.
  9. அது தவறிப்போகும்போது, போராட்டத்தைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகள் உள்ளே நுழையக்கூடும். அதன் காரணமாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படக்கூடும். அதன் பின்விளைவாகத் தமிழக அரசியல் சூழலே மாறக்கூடும்
  10. . அதனினும் முக்கியமாக, இத்தனை நாளும் அமைதியாகப் போராடியது எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகப் போகும்.
  11. நாட்டுக்கே முன்னுதாரணமாக நடைபெற்ற போராட்டம் என்பதெல்லாம் மறந்து போகும்,
  12. கடைசியில் நடந்த கசப்பான சம்பவங்கள் மட்டுமே நினைவில் பதியும்.
  13. ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள் தமது போராட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொண்டு இல்லம் திரும்புமாறு வேண்டுகிறோம்.
  14. உங்கள் முன்னே போராடுவதற்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கின்றன. இப்போது போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்.
    ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
  15. இந்தப் போராட்டத்தில் கிடைத்த அனுபவங்களை மதிப்பிடுங்கள், பரிசீலியுங்கள்,
  16. எதை இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம், எதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கலாம், வெற்றி கிடைத்தது எதனால் என்று யோசியுங்கள்.
  17. இன்னும் தெளிவடையுங்கள். அடுத்த போராட்டத்தில் இன்னும் தெளிவான கோஷங்களுடன், இன்னும் வீரியத்துடன் இறங்கலாம்.
  18. இந்த நாட்டின் எதிர்காலம் நீங்கள்தான். எதிர்காலத்தை அனுபவிக்கப் போகிறவர்கள் மட்டுமல்ல, தீர்மானிக்கப் போகிறவர்களும் நீங்கள்தான்.
  19. உங்கள் செயல் இனி வரும் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், ஒரு பாடமாக இருக்க வேண்டும். கசப்பான நினைவுகளின் பதிவாக இருந்துவிடக் கூடாது.
  20. நீங்கள் அடைந்திருப்பது உண்மையான – முழுமையான வெற்றி. அவசரச்சட்டமும், அதன் அடிப்படையில் சட்ட சபையில் நிறைவேற்றப்பட இருக்கிற சட்டமும் முழுமையானவை. உங்கள் கோரிக்கையை எந்தக் குறைவுமின்றி நிறைவேற்றக்கூடியவை.
  21. தகுந்த நேரத்தில் நீங்கள் செயல்பட வேண்டியது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் எவ்வளவு முக்கியமோ அதுபோலத் தகுந்த நேரத்தில் நீங்கள் உங்கள் செயல்பாட்டைத் தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதும் மிக மிக முக்கியம்.
  22. இதனைப் புரிந்து கொண்டு, இத்தனை நாட்களும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த, உங்களை நம்பியிருக்கும் பெற்றோர்,
  23. குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்காக, போராட்டத்தை முடித்துக்கொண்டு, இயல்புநிலைக்குத் திரும்புமாறு வேண்டுகிறோம்.
  24. இப்படிக்கு
    உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
    நாளைய தமிழகம்
    # வழக்கத்துக்கு மாறாக டேக் செய்வதற்கு நண்பர்கள் மன்னிக்கவும். அதிமுக்கியம் என்பதால் செய்கிறேன்.
    # இது சரியென்று உடன்பட்டால் உடனே உங்கள் காலக்கோட்டில் காபி பேஸ்ட் செய்து பகிரவும்.
    – Shan Karuppusamy

பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..

பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..

ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்கள் போராடியது ,அரசியல் ஆக்கப்பட்டது , அதாவது மாணவர்கள் போராடியது  தங்கள் அரசியல் உரிமைக்காக தான் ஆனாலும் அவர்கள் அந்த நோக்கத்திற்காக எந்த அரசியல் கட்சி அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நபரை முன் நிறுத்தி அவர்கள் போராட வில்லை ஆனால் அவர்கள் போராட்டம் அரசியல் ஆக்க பட்டு விட்டது நேற்று இரவு அதற்கான முதல் அத்யாயம் ஆரம்பம் ஆனது. இன்று காலை முதல் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள பட்டது , மாணவர்கள் தங்கள் உரிமைக்காக ஜன நாயக முறையில் போராடி கொண்டு இருக்கையில் காட்டு மிராண்டி தனமாக அவர்கள் தாக்க  பட்டர்கள் மாணவர்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தான் பார்த்து கொண்டார்கள் மாணவர்கள் மேற்கொண்டது அரசியல் அற்ற அரசியல் , ஆனாலும் ஆளும் வர்க்கம் இப்படி தங்கள் சுயரூபத்தை காட்டி விட்டது ஆனாலும் சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தரமணியில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆங்காங்கே சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது
  பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!.. 
மெரினாவில் உள்ள காவல்துறையினரை சிதரிக்கடிக்க வேண்டும் என்றால், சென்னை முழுக்க சாலைமறியல் நடத்தப்பட வேண்டும். அதுவும் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும்,
இனி மெரினாவிற்கு யாரும் செல்ல இயலாது, அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அண்ணாசாலையில் கூடுங்கள், அண்ணா சாலை மொத்தமாக ஸ்தம்பித்தால், காவல்துறை அங்கே அதிகம் தேவைப்படும்.
சென்னையில் எந்த நேரமும் வன்முறை நிகழலாம், அதற்காக சில சமூக விரோதிகள் காத்திருக்கின்றார்கள்.
நமக்கு வன்முறை தேவையில்லை, போராட்ட களம் என்பது மெரீனா மட்டும் அல்ல, அது சென்னை மொத்த நகரமும் போராட்டக்களம்தான் என்ற நிலை உருவாக வேண்டும்.
– பீட்டா என்ற அமைப்பு தடை செய்யப்படும் வரை நமது போராட்டம் ஓயாக் கூடாது.
அந்த நாய்கள் எப்படியும் தடை வாங்கிவிடுவார்ர்கள்.

.https://www.facebook.com/SunNewsTamil/videos/1332033723520007/

ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்

  1.  ஜல்லிக்கட்டு போராட்டம்  தமிழ்நாட்டில்  ஒரு ஜனநாயக போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.
  2. இது வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயம் அல்ல. தற்போது இடது சாரிகளும் கூடப் போராட்டக் களத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  3. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம். ஆனால், போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு விட்டுக் கொடுக்காது
  4. . இவ்வளவு நாளும் மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 360 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
  5. .இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது.
    ஜல்லிக்கட்டு தடை
  6. வலது சாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே “ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்” என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  7. வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசுகின்றன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன.
  8. அதன் மூலம் பாரவையாளர் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்கின்றன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மூடி மறைக்கின்றன.
  9. அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம்
  10. . குறிப்பாக இடது சாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்திலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.
  11. ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்கின்றன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நிற்கிறார்கள். வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்
  12. Written By Kalai Marx

பீட்டா ஒரு தீவிரவாத அமைப்புதான்! ஆதாரங்கள்

பீட்டா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்குகளிற்கு எதிரான ஒரு தீவிரவாத ? அமைப்புதான் இது வெறுமனே பீட்டா மீது உள்ள தனிப்பட்ட காழ்புணர்ச்சியோ அல்லது தனிப்பட்ட பீட்டா எதிர்ப்புக்காகவோ அல்ல,  இதோ படியுங்கள் மற்றும் ஒரு  தெளிவான பதிவ ,ஆனந்த விகடன்   முதலில் நமது தளத்தில் தான் இதை பற்றித் தெளிவாக எழுதி இருந்தோம், அதற்கு முன்பு எந்த ஒரு பலம் வாய்ந்த பிரபலமான ஊடகமும் தமிழில் முதலில் வெளிப்படுத்தவில்லை, 18/1/2017 அன்று பதிவிட்டு இருந்தோம் ஆகவே நிச்சயமாகப் பீட்டா தடை செய்ய வேண்டிய அமைப்புதான்
தமிழக இளைஞர்களுக்குள் இருந்த போராட்ட குணத்தையும், இன உணர்வையும் வெளிக் கொண்டு வர முக்கிய பங்காற்றிய பீட்டா அமைப்பு தன்னை விலங்குகள் உரிமைக்காக போராடும் அமைப்பு என உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் அது அடையாளம் அல்ல, பீட்டாவின் ரத்த சாயம் பூசிய முகமூடி என்று அதிர்ச்சித் தகவல்களை போட்டு உடைக்கிறது Peta Kills Animals(PKA) என்ற அமைப்பு. பீட்டா எப்படி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக உலகம் முழுவதும் இயங்கி வருகிறதோ, அதே அளவு பலத்துடன் Peta Kills Animals(PKA) அமைப்பும் பீட்டாவை எதிர்த்து முழு வீச்சில் இயங்கி வருகிறது.
பீட்டா
அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பீட்டாவின் தலைமையகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற விலங்குகளுக்கான காப்பகத்தை இயக்கி வருவதாக பதிவு செய்திருக்கிறது பீட்டா. இங்கு தான், கடந்த 1978-ம் ஆண்டு முதல் 2015 வரை 27 ஆண்டுகளில் மட்டும் 34,970 நாய் மற்றும் பூனைகளை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடுகிறது (PKA).
விர்ஜீனியாவின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், மேற்கூறிய ஆண்டுகளில், பீட்டா எத்தனை விலங்குகளை எடுத்துக் கொண்டுள்ளது, அதில் எத்தனை விலங்குகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளது, தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை கருணை கொலை செய்யப்பட்டது போன்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்.
 
பீட்டா
பீட்டாவுக்குள் நுழைந்த 40,328 நாய் மற்றும் பூனைகளில், 5468 மட்டுமே உயிருடன் வெளியே சென்றிருப்பது தெரியவந்துள்ளது. நாய் மற்றும் பூனைகளை சேர்த்து கொல்லப்பட்டவை மொத்தம் 34,970. அதாவது, பீட்டாவுக்குள் வரும் 87 – 90% விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன.
அந்நாட்டு சட்டப்படி, ஆதரவற்றதாக கருதப்படும் விலங்குகளை 15 நாட்களுக்கும் மேலாக யாரும் சொந்தம் கொள்ளவோ, தத்தெடுக்கவோ வராவிட்டால் கருணை கொலை செய்யலாம் என்கிறது. ஆனால், இந்த விதிமுறையை பீட்டா பின்பற்றவே இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது.  பீட்டா தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்ட 84% விலங்குகள்,  24 மணி நேரத்துக்குள் கொலை செய்யப்பட்டுள்ளன. இதனை கருணை கொலை என்கிறது PETA
கொண்டு வரப்பட்ட விலங்குகள் எதுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவையோ, காயமடைந்து உயிருக்கு போராடும் வகையில் இருந்ததாகவோ பீட்டா கூறவில்லை. 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், 24 மணி நேரத்துக்குள் விலங்குகளை கொலை செய்ய அப்படி என்ன தேவை வந்தது என்பதற்கு பீட்டாவிடம் பதில் இல்லை. ஆக, நன்றாக இருந்த நாய் மற்றும் பூனைகளை ஏன் பீட்டா! கொல்ல வேண்டும்?.
சரி கருணை கொலை செய்ததாகவே வைத்துக் கொள்வோம். சோறு போடும் சாமியாக தமிழர்கள் கருதும் காளைகளையும், அவற்றை சிறப்பிக்க நடத்தும் திருவிழாவான ஜல்லிக்கட்டையும் துன்புறுத்தல் என்று கூறும் பீட்டா அமைப்பு, கருணை கொலைக்கு பதில் அந்த விலங்குகளை காப்பாற்றுவதற்கான வழியை மேற்கொண்டிருக்கலாமே. இதை செய்வதற்கு பீட்டாவிடம் நிதி உதவி இல்லை என்று கூற முடியாது. உலகம் முழுதும் 3 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களை இவர்கள் விளம்பரத் தூதர்களாக நியமிக்கிறார்கள். பல லட்சம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து, வழக்குகள் நடத்த பல நூறு கோடிகளை செலவிடுகிறார்கள். அக்கவுண்டில் பல்க்காக பணம் வைத்திருக்கும் அந்த அமைப்புக்கு நாய், பூனைகளை காப்பாற்ற எவ்வளவு செலவாகி இருக்கப் போகிறது.
பீட்டா
பீட்டாவின் நோக்கம் விலங்குகள் நலன் இல்லை, அதையும் தாண்டி அதில் வேறு ஏதோ காரணம் இருப்பதாக PKA அமைப்பு சந்தேகிக்கிறது. அதற்கும் ஒரு எவிடென்ஸை காட்டுகிறது அந்த அமைப்பின் இணையதளம்.
2010-ம் ஆண்டு, பீட்டாவிடம் நாய் ஒன்றை ஒப்படைக்க விர்ஜீனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் “நாங்கள் எந்த விலங்கையும் ஏற்றுக் கொள்வதில்லை” என்று அதன் நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். உடனே அந்த பெண், இந்தத் தகவலை விர்ஜீனியா விவசாயம் மற்றும் வாடிக்கையாள சேவை மையத்திடம் புகாராக தெரிவிக்கிறார்.
“தாங்கள் விலங்குகள் காப்பகத்தை நடத்தி வருவதாக பதிவு செய்துள்ள பீட்டா ஏன் இப்படி சொல்ல வேண்டும்”  என்று யோசித்த அதிகாரிகள், பீட்டா தலைமை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தனர்.அந்த ஆய்வு பற்றிய அறிக்கையை டேனியல் கோவிச் என்ற அதிகாரி சமர்ப்பித்திருக்கிறார். அந்த அறிக்கையும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
Peta Kills Animals
அதில் “ பீட்டாவின் வரவேற்பாளர், தாங்கள் எந்த வித விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளனர். கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளும் இதே பதிலை தந்தனர். ஆனால் சற்று நேரம் கழித்து வந்த, உயர் அதிகாரி ஒருவர், அங்கிருந்த மூன்று அறைகளைக் காட்டி இவற்றில் தான் விலங்குகள் பாதுகாக்கப்படுவதாக கூறினார். அந்த மூன்று சிறிய அறைகளைத் தவிர வேறு அறைகள் அங்கு இல்லை. இந்த காப்பகம் பொதுமக்களிடம் இருந்து விலங்குகளை ஏற்றுக்கொள்வதில்லை. Peta ஊழியர்கள் மூலம் கொண்டு வரப்படும் விலங்குகள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்” என்று ஆய்வில் நடந்தவற்றை அந்த அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.
மேலும் ஆய்விலிருந்து தெரியவருவது “ கடந்த சில ஆண்டுகளில் அந்த அமைப்பு கையாண்ட விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், விலங்குகளை வைக்கும் இடம் சிறியதாக இருக்கிறது. இது அரசின் நெறிமுறைகளுக்கு உட்படாத வகையில் உள்ளது. PETA தனக்கென்று உருவாக்கிக் கொண்ட விதிமுறைகளைக் கூட இங்கு பின்பற்றவில்லை. இவ்வளவுக்கும் மேல், பீட்டாவின் ஊழியர்களுக்கு இங்கு விலங்குகள் காப்பகம் செயல்படுவதே தெரியாமல் இருந்திருக்கிறது. மேலும், பீட்டாவில் எடுத்துக் கொள்ளப்பட்ட 85% விலங்குகளை, 24 மணி நேரத்துக்குள் கருணை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அந்த அமைப்புக்கு விலங்குகளை பராமாரித்து வேறு காப்பகங்களுக்கோ, தத்துக் கொடுக்க முயற்சிப்பதோ நோக்கம் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அறிக்கையில் போட்டு உடைத்திருக்கிறார் டேனியல்.
PETA KILLS ANIMALS
இது மட்டும் அல்ல, இன்னும் PETA திரைக்கு பின் செய்யும் அநீதிகள் ஏராளமாக இருப்பதாகவும் PKA அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் பீட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கை நீக்கவும் அந்த அமைப்பு, அரசாங்கத்துக்கு குரல் கொடுக்க தனது இணையதளம் மூலம் அழைக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் பீட்டா பதிலளிக்கவும் இல்லை, அஞ்சவும் இல்லை. ஒருவேளை, இது பீட்டா மீதான அவதூறாகவே இருந்தாலும், ஏன் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.  பீட்டாவுக்கு இருக்கும் பண பலத்துக்கு, சட்ட நடவடிக்கைகளால் அந்த இணையதளத்தை முடக்கி இருக்க முடியும். ஏன் இது எதையும் செய்யவில்லை PEEta? அப்படியானால் பீட்டாவின் கை ரத்தம் படிந்ததா?

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?

பண்பாடு, கலாச்சாரம், உரிமை என்ற அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட்டு விட்டதால் எனது பதிவை பெரும்பாலும் சட்டம் சார்ந்து சுருக்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கான தடை எல்லோரும் நினைப்பது போல 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்ட காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தவுடன் ஆரம்பிக்கவில்லை.

2006-ல் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர் நீதி மன்ற கிளையை அணுகிய போது தான் இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மாண்புமிகு பானுமதி அவர்கள் அந்த வழக்கை மட்டும் தள்ளுபடி செய்யாமல் மிருகவதை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு விலங்குகளின் மீதுள்ள ‘கருணை’யால் ஒட்டுமொத்தமாக ரேக்ளா ரேஸ், எருதோட்டம், ஜல்லிக்கட்டு போன்றவற்றையும் தடை செய்து உத்தரவிட்டார். இது விலங்குகள் நல ஆர்வலர்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. ஏனென்றால் விலங்கு நல அமைப்புகள் ஏற்கனவே எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத போது இது எதிர்பாராமல் கிடைத்த பரிசு.
பிறகு மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 2007-ல் பானுமதியின் தீர்ப்புக்கு தடை விதித்து அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழிகோலியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டின் போது தான் விலங்குகள் நல வாரியம் (AWBI ) உள்ளே வருகிறது. விசாரணைக்கு பிறகு 2007 மார்ச் மாதம் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பானுமதியின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது. மேலும் ஒழுங்குமுறை சட்டம் இயற்றுமாறு உத்தரவிடுகிறது.
இதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அங்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை. 2008ம் ஆண்டு வழக்கம் போல ஜனவரியில்உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்ட உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கிறது, வேண்டுமானால் ரேக்ளா ரேஸ் நடத்திக்கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறார்கள். ஆனால் சில நாட்கள் கழித்து தமிழக அரசு (திமுக) சீராய்வு மனு போட்டு மீண்டும் அனுமதி கோருகிறார்கள். உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளிலேயே ஜல்லிக்கட்டு நடக்கிறது. பிறகு திமுக அரசு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009 இயற்றுகிறது. அவ்வப்போது இடைக்கால அனுமதி வாங்கி ஜல்லிக்கட்டு நடத்தி எல்லாம் சுமுகமாக போய்கொண்டு இருக்கிறது.
2011-ம் ஆண்டு ஜூலை வாக்கில் ஹேமமாலினி அவர்கள் சுற்றுச்சுழல் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். காளைகளை காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று. பல விலங்குரிமை பிரபலங்கள் ஆதரவளிக்கிறார்கள். (2011-ம் ஆண்டு தான் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து PETA அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது). சர்ச்சைக்குரிய அறிவிக்கை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளை இணைத்து வெளியிடப்படுகிறது. (இதே ஆண்டு ஹேமமாலினிக்கு PETA PERSON OF the year விருது அளிக்கப்பட்டது, போன ஆண்டு தோழர் சன்னி லியோனிக்கு அளிக்கப்பட்டது என்பது உப தகவல் )
இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்படுகின்றன. மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது ( கவனிக்க, இடைக்கால நிவாரணமாக மட்டுமே ). இறுதியாக ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு வழக்குகளையும் இணைத்து விசாரித்து உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு may மாதம் இறுதி தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அறிவித்து விட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட தமிழக அரசின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது, பாஜக நம்மை நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருக்க சொல்வது, கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சொத்தை அறிக்கை சட்டப்படி செல்லத்தக்கதா இல்லையா என்பதே. சந்தேகமே வேண்டாம், நமக்கு பெரிய நாமக்கட்டி தான் கிடைக்கும். (2014 தீர்ப்பில் இருக்கும் குறைபாடுகளை தனியாக எழுத முயல்கிறேன்)
இப்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு என்ன வழி ? ஒரு பிரபல வழக்கறிஞர் அந்த 2011-ம் ஆண்டின் காட்சிப்படுத்த இயலாத பட்டியலில் இருந்து காளையை நீக்கினாலே போதுமானது, அல்லது அந்த அறிவிக்கையையே திரும்ப பெற்றால் போதுமானது, அவசர சட்டம் தேவையில்லை என்று தொலைகாட்சி ஊடகத்தில் சொன்னார். அது சரியானது அல்ல என்பதே எனது பார்வை. பிரச்சினை இப்போது அந்த அறிவிக்கை அல்ல. உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஜல்லிக்கட்டு என்பது இயல்பிலேயே ஒரு மிருகவதையுடன் கூடிய விளையாட்டு தான் என்று தீர்ப்பளித்து விட்டது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் 2008ல் ஜல்லிக்கட்டை தடை செய்த போது ‘2011 அறிவிக்கை’ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிருகத்தையின் பேராலேயே பானுமதியும் தடை செய்தார். (பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது எல்லாம் இடைக்கால நிவாரணங்களின் மூலம் தான்)
எனவே இப்போது அதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் அவசர சட்டத்தின் வழியாக தான் செய்ய வேண்டும். சரி யார் பிறப்பிக்க வேண்டும்? மிருகவதை தடுப்பு சட்டம் மத்திய சட்டம் என்பதால் மத்திய அரசு தான் பிறப்பிக்க வேண்டும், அது தான் உடனடியானதும் எளிதானதும் கூட. ஆனால், அது தனியாக ஒரு சட்டமாக அல்லாமல் (தமிழக அரசு இயற்றிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் போல அல்லாமல் ) மிருக வதை தடுப்பு சட்டத்தையே திருத்த வேண்டும். எப்படி செய்வது ? எது எல்லாம் வதை (Cruelty) என்று சொல்லும் மிருகவதை தடுப்புச்சட்டம், அதற்கு விதிவிலக்குகளும் கொடுத்துள்ளது.
11. (3) Nothing in this section shall apply to –
(a) the dehorning of cattle, or the castration or branding or noseroping of any
animal in the prescribed manner, or
(b) the destruction of stray dogs in lethal chambers 20[by such other methods as
may be prescribed] or
(c) the extermination or destruction of any animal under the authority of any law
for the time being in force; or
(d) any matter dealt with in Chapter I V ; or
(e) the commission or omission of any act in the course of the destruction or the
preparation for destruction of any animal as food for mankind unless such
destruction or preparation was accompanied by the infliction of unnecessary
pain or suffering.
—–
28. Saving as respects manner of killing prescribed by religion : Nothing contained in
this Act shall render it an offence to kill any animal in a manner required by the
religion of any community.
அதாவது கொம்பை நீக்குவது, காயடிப்பது, தெருநாய்களை கொல்வது, உணவிற்காக கொல்வது, மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்துவது அல்லது மதநம்பிக்கைகளுக்காக பலியிடுவது மிருகவதையில் வராது. எனவே இந்த விதிவிலக்கு பட்டியலில் ஜல்லிக்கட்டையும் சேர்க்க வேண்டும். இதை தான் மத்திய அரசு போன வருடம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விட்டு விட்டு சட்ட பாதுகாப்பில்லாத நீதிமன்றம் தூக்கி எறியக்கூடிய ஒரு சொதப்பலான அறிவிக்கையை பாஜக வெளியிட்டு விட்டு, நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்வது கயமைத் தனமின்றி வேறில்லை. அதுவும் அந்த அறிவிக்கை காளையை காட்சிப்படுத்துதல் பட்டியலில் இருந்து கூட நீக்கவில்லை, மாறாக காளையை அந்த பட்டியலில் வைத்துக்கொண்டே ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றது! முதலாம் ஆண்டு சட்டம் படிப்பவனுக்கு கூட இது எவ்வளவு மடத்தனமானது என்று புரிந்து கொள்ள முடியும். இதையும் விட்டு விடுங்கள். அப்போது தெரியாது என்று சொல்பவர்கள் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வந்த பிறகு தெரிந்திருக்க வேண்டாமா..? உச்ச நீதிமன்ற தீர்ப்பின் operative portion இப்படி தான் ஆரம்பிக்கிறது
….77 (1) We declare that the rights guaranteed to the Bulls under Sections 3 and 11 of PCA
Act read with Articles 51A(g) & (h) are cannot be taken away or curtailed, except
under Sections 11(3) and 28 of PCA Act…
அதாவது மிருகங்களுக்கான உரிமைகள், சட்டப்பிரிவுகள் 11 (3) மற்றும் 28 ஐ தவிர வேறு எந்த விதத்திலும் பறிக்கபட முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டை இந்த பிரிவுகளில் சேர்ப்பது தான் உடனடியாக செய்ய வேண்டியது. சரி, அப்படியே சேர்த்தாலும் அது இந்த மிருகவதை சட்டத்தின் நோக்கத்திற்கும் அரசியலமைப்புச்சட்டத்திற்கும் விரோதமானது என்று விலங்குநல ஆர்வலர்கள் நிதிமன்றதை அணுகலாம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் அவ்வாறு சொல்லாது என்பதே நிதர்சனம்.
மத்திய அரசுக்கு இதை விட எளிதான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை. காவிரி நீர் வேண்டுமென்றால் கர்நாடகாவை சமாளிக்க வேண்டும், ஈழம் வேண்டுமென்றால் அடுத்த நாட்டின் ‘இறையாண்மை’ பாதிக்கப்படும். எந்த வித சிக்கலுமே இல்லாத மிக எளிதான கோரிக்கையில் கூட நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்வதற்கு உண்மையிலேயே மிகவும் தடித்த தோல் வேண்டும். மோடி தைரியமானவர் என்று பாஜகவினர் சொல்லும் போது எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் புல் டாஸ் பாலில் டொக் வைப்பதற்கு முரட்டுத்தனமான குருட்டுத்தனமும், குருட்டுத்தனமான தைரியமும் வேண்டும். அது தான் நம்மாளிடம் நிறையவே இருக்கிறதே 🙂 அதை ஆதரிப்பதற்கும் இங்கே ஆட்கள் இருக்கிறார்களே. பிறகு என்ன
கவலை?
மிகப்பெரிய காமெடி என்னவென்றால் முதல்வரின் கோரிக்கைக்கு மோடியின் பதில் ‘வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, எனவே ஒன்றும் செய்ய இயலாது’. விருமாண்டி படத்தில் கமல் அவர் அம்மா இறந்தவுடன் குடித்து விட்டு சலம்பிக்கொண்டிருப்பார். அப்போது சண்முகராஜா ‘இங்க பாரு விருமாண்டி இப்போ நீ குடிச்சிருக்க’ என்று ஆரம்பிப்பார். அப்போது கமல் ‘ஏ இந்தா பாருடா போலீஸ் கண்டுபிடிச்சுருச்சு’ என்று சொல்வார். அது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
கடைசியாக, இதைவிட பெரிய வாழ்வாதார ஜீவாதார பிரச்சினைகளுக்கெல்லாம் போராடாமல் இது போன்ற ‘சிறிய’ பிரச்சினைக்கு மாணவர்கள் போராடுவதற்கு சில மொண்ணை அறிவுஜீவிகள்வழக்கம் போல துருப்பிடித்த பிளேடை வைத்து வழு வழு கன்னத்தில் தேய்ப்பது போல மொழியை திருகி, வளைத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது பல்லாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வு வெளிப்படுவது என்பதை தாண்டி இந்த ‘சிறிய’ உரிமையை கூட பெற்றுத்தர ஆட்சியாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வக்கில்லை என்றே அரசியல்வாதிகளை காறி உமிழ்ந்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வாயிலும் வயிற்றிலும் அடித்தது பத்தாது என்று அவன் கையில் இருந்த கிலு கிலுப்பையும் பிடுங்கினால் அழ மட்டும் செய்யாது குழந்தை, ஏதாவது எதிர்ப்பை காட்ட தான் செய்யும். இதை தாண்டி எனக்கு ஒரு கேள்வி..? எல்லா வாழ்வாதார ஜீவாதார போராட்டங்களுக்கும் மாணவன் தான் போராட வேண்டுமா? அப்புறம் என்ன ஹேருக்கு இங்கே ஆட்சியாளர்கள், மத்திய மாநில அரசுகள்?
இங்கு PETA பற்றி பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், விலங்குகள் நல வாரியம் (AWBI) என்ற மத்திய அரசின் கீழ் வரும் அதிகாரப்பூர்வ அமைப்பையோ அல்லது Beauty without Cruelty, Compassion Unlimited Plus Action உள்ளிட்ட NGOக்களை வெளியில் தெரியாது. ஆனால், இவர்கள் செய்த ‘சாதனைகள்’ கொஞ்சம் நஞ்சம் அல்ல. (இவற்றை விரிவாகஅடுத்த பதிவில் பார்க்கலாம்).
பின்குறிப்பு: PETA சர்வதேச சதி, A 1, A2 பால், நாட்டு மாடு ஒழிப்பு இது பற்றி எனக்கு தெரியாது. தனிப்பட்ட முறையில் இதை நம்புமாறு இதுவரை நான் எதுவும் படிக்கவில்லை

ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது? மிக விரிவான போஸ்ட். இதைத் தவறாம படிங்க. ஒரு வழக்கறிஞரின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. படிச்சிட்டு இவரோட போஸ்ட்டை கட்டாயம் பகிரவும்.
Thanks on Written  By
RajaGopal Subramanian

வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க

 

வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க

வாருங்கள் மெரீனாவிற்கு

 
மாணவர் எழுச்சி அல்லது மக்கள் கிளர்ச்சி எப்படி வேண்டுமாலும் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேரடியாக மெரினா விற்க்கு செல்லாதவரையில் அதை உங்களால் ஒரு வரம்புக்குள் அடைத்து உவமை சொல்ல முடியாது

  1. ஆகவே உங்களால் வரமுடிந்தால் அல்லது நீங்கள் மெரீனாவிற்கு அருகில் இருந்தால் தயவு செய்து மெரீனாவிற்கு வாருங்கள் வந்து எங்கள் மாணவச்செல்வங்கள் தங்களது உரிமைக்காகப் போராடும் அழகை பாருங்கள், மெரீனாவிற்கு வாருங்கள்.
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  2. யாரும் யாருக்கும் தலைவன் கிடையாது ஆனாலும் அங்கே அடிமைகள் யாரும் இல்லை அல்லது வெற்று கோசம் இல்லை மேலும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை
  3. நீங்கள் வீட்டில் வசதியாக உக்கார்ந்தது கொண்டு டி வி பார்த்துக்கொண்டோ அல்லது இதைப்படித்து கொண்டோ இருக்கும் இந்தக் குளிர் இரவில் அங்கே கூடிய அணைத்து மக்களின் தேவை ஒன்றே ஒன்று தான் கோவமும் ஒன்றே ஒன்றுதான்,
  4. எங்களின் உரிமையை யாரும் பறிக்க முடியாது. எங்கள் அடையாளத்தை யாரும் அழிக்க முடியாது எங்களுக்கு வேண்டியது எல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த யாரும் தடை விதிக்க முடியாது நிரந்தரமாகத் தடையை நீக்க வேண்டும்.
  5. அதற்க்கு எந்த அரசியவாதியின் துணையும் அல்லது சினிமா நடிகரின் ஆதரவும் வேண்டாம் எங்கள் உரிமையை நாங்கள் மீட்டு எடுப்போம்
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  6. அதில் சில சந்தோசமான நிகழ்வு என்னவென்றால் மக்களின் உறுதியான நோக்கத்தைப் புரிந்து கொண்ட காவல் துறை நண்பர்கள் சிலர் அங்கே கூடிய மக்களில் தாங்களும் ஒருவராய் நின்று போராட்டத்துக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படையாகவே காட்டியதுதான்
  7. ஆகவே மக்களே போராட்டம் மிகப்பெரிய வலுவடைந்து மிகமுக்கியமான கட்டத்திற்கு சென்று உள்ளது இப்போது தான் உங்களின் ஆதரவு அல்லது உங்களின் பங்களிப்பு ஏதாவது ஒரு ரூபத்தில் தேவை படுகிறது
  8. உங்களால் முடிந்தால் ஒருநாள் வந்து இருங்கள் அல்லது ஒருமணி நேரமாவது வந்து இருங்கள் அப்படி முடியாவிட்டால் உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் ஆன் பிள்ளை யோ அல்லது பெண் பிள்ளையோ தயங்கமால் அவர்கள் அங்கே செல்வதற்க்கு ஊக்கம் அளியுங்கள் தடை போடாதீர்கள் மெரினாவில் அவர்களுக்குரிய பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும்
    வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  9. தயங்காமல் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள்.அல்லது உங்களால்  முடிந்த உதவி எதுவாக இருந்தாலும் அங்கே போராடக்கூடியமக்களுக்கு உணவோ அல்லது ஒரு படுக்கை விரிப்பூ அல்லது ஒரு போர்வை அல்லது எதாவது அவர்களுக்கு தேவையான பொருள் அல்லது ஒரு பாட்டில் தண்ணீரோ கொண்டு போய்க் கொடுங்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு அங்கே போய் இருக்க ஊக்கம் அளியுங்கள்
  10. ஒன்று மட்டும் நிச்சயம் அங்கே கூடிய யாரும் ஒரு மதமாகவோ அல்லது ஜாதியாகக் கூடவில்லை அங்கே இருப்பவர்கள் எல்லாம் ஒரு தமிழின உணர்வாளர்களாகக் கூடி இருக்கின்றார்கள், ஏன் என்றால் முதலில் தங்கள் மொழியை திணிக்கத் தமிழை அழிக்க நினைத்தார்கள் அடுத்து தங்கள் கலாச்சாரத்தை மாற்ற நினைத்தார்கள் அதற்கும் தமிழன் பொறுத்து கொண்டான் மேலும் பல்வேறு விதமாகத் தமிழ் கலாச்சாரத்தை மறைத்து வடக்கத்திய கலாச்சாரத்தை உள்ளே நுழைக்க நினைத்தார்கள் அதற்கும் தமிழன் ஓர் அளவு போராடி விட்டுச் செய்வதறியாது பொறுத்து இருந்தான் ஆனாலும் அந்த வடக்கத்திய ஆவோஜிகல் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கதையாக நிஜமாலுமே நமது நாட்டு மாடுகளை அளிக்க ஜல்லி கட்டு தடையைக் கொண்டு வந்ததன்நாள் இனியும் பொறுத்தால் நம்மளையே அளித்து விடுவார்கள் என்று தான் இன்று தமிழன் பொங்கி ஏழுந்து இருக்கிறான்
  11. ஆகவே வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
  12. ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி

டெல்லியின் கொம்பைப் பிடி” தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு

  1. டெல்லியின் கொம்பைப் பிடி”
    தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு!
  2. அன்பார்ந்த தமிழ் மக்களே,
    தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?.
    ஜல்லிக்கட்டு
  3. அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை.
  4. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி வந்திருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள்.
    அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலெல்லாம் போலீசு குவிக்கப்பட்டுள்ளது.
  5. “ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்” என்று காளை வளர்ப்பவர்களிடம் எழுதிக் கையெழுத்து வாங்குகிறது தமிழ்நாட்டு போலீசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்! நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் இவர்கள் நிலைநாட்டுகிறார்களாம்!
  6. நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?
    நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?
  7. காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர் அழிவதற்கும், விவசாயிகள் நெஞ்சடைத்து சாவதற்கும், உழவு மாடுகளும் பால்மாடுகளும் தண்ணீருக்குத் தவிப்பதற்கும் யார் காரணம்?
  8. காவிரி நீர் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளத்தனமாகக் கர்நாடக அரசுக்குத் துணை நின்றதுதான் இந்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீருக்காகக் கதறிய போதும், “தீர்ப்பை அமல்படுத்த முடியாது” என்று கர்நாடக அரசு திமிர்த்தனம் செய்தபோது, வாயை மூடிக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழகத்தின் மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது?
  9. தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதில் கர்நாடக அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சிய கிரிமினல்தான் மோடி அரசு. காவிரி ஆணையம் அமைப்பதைத் தடுத்து, தமிழகத்துக்கு நிரந்தரமாகக் காவிரி நீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி.
  10. தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்த மோடியிடம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தருமாறு கெஞ்சுவதும் மனுக் கொடுப்பதும் கேவலமில்லையா?
  11. “ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது
  12. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலை, அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி, அங்கே மணியாட்டும் பார்ப்பன தீட்சிதர்களுக்குச் சொந்தமாக்கி தீரப்பளித்தது உச்ச நீதிமன்றம்தான்.
    சாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக நியமிக்க முயன்றது தமிழக அரசு
  13. . “பார்ப்பன அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் சாமி சிலையைத் தீண்டக் கூடாது”என்று தீர்ப்பளித்து, சாதியையும் தீண்டாமையையும் நிலை நாட்டியது உச்ச நீதிமன்றம்தான்.
    “தமிழ்நாட்டு கோயில் தமிழ் மக்களுக்குச் சொந்தம். தமிழில் வழிபடுவதும் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கோ மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை” என்று நாம் குரல் எழுப்பவேண்டிய நேரம் இது.
  14. தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு என்ன பாடத்திட்டம் என்பதை சொல்வதற்கு மத்திய அரசு யார்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திட்டத்தையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் இந்தி திணிப்பையும் தூக்கி வெளியே வீச வேண்டிய நேரம் இது
  15. தமிழக மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி கட்டினால், அதில் யாருக்கு சீட் கொடுப்பது என்று நீட் தேர்வு வைத்து டில்லி முடிவு செய்யும் என்கிறது உச்ச நீதிமன்றம்
  16. . அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அதே முறையைக் கொண்டுவரப் போவதாகச் சொல்கிறது மோடி அரசு.
    கேடி கிரிமினல்களும் ஹவாலா பேர்வழிகளும் வக்கீலாகத் தொழில் நடத்திக் கொண்டிருக்கையில், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்த தமிழ்நாட்டு வக்கீல்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில். பாரதிய ஜனதாக் கட்சிக்காரன்தான் இதற்கும் தலைவர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  17. அணு உலை வேண்டாமென்று கேரள மாநிலம் விரட்டியடித்தால் அது கூடங்குளத்தில் திணிக்கப்படுகிறது. “கெயில் எரிவாயுக் குழாய் எங்கள் விவசாயத்தை அழிக்கும்” என்று தமிழக விவசாயிகள் முறையிட்டாலோ, அதனை நிராகரித்து விளைநிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம்.
  18. “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயரில் திணிக்கப்படும் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு எதற்காக நாம் கட்டுப்பட வேண்டும்?
  19. “கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.
  20. டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
  21. மகாராட்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் “உறியடித் திருவிழா”வில் மனிதக் கோபுரம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தபோது, “உச்ச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட முடியாது” என்று வெளிப்படையாகவே அறிவித்து விழாவை வழக்கம்போல நடத்தியது பாஜக சிவசேனா அரசு. உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை
  22. ஆனால் சேதுக்கால்வாய் திட்டத்துக்காகத் தமிழகத்தில் கடையடைப்பு நடந்தபோது மட்டும் “ஆட்சியைக் கலைப்போம்” என்று திமுக அரசை மிரட்டியது. இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடுநிலை. சட்டத்தை மதிக்குமாறு தமிழகத்துக்கு உபதேசம் செய்யும் அருகதை பாஜக-வுக்கோ, இந்த நீதிமன்றத்துக்கோ கிடையாது.
  23. எல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம்போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது
  24. . “விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்குக் குரல் கொடுப்பவர். மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரைக் கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.
  25. மதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர்
  26. . “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை
  27. . “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.
  28. மாட்டை அடக்குவதுதான் வீரம், அதுதான் உயர்ந்த பண்பாடு” என்பதல்ல நம் கருத்து. ஜல்லிக்கட்டு முதல் கோயில் திருவிழாக்கள்வரை தமிழகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் ஊடுருவியிருக்கும் சாதிப்பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் நாம் ஒருபோதும் “தமிழ் வீரம்” என்று கொண்டாட முடியாது.
  29. மாட்டுக்கொம்பால் குத்துப்பட்டு சாவதற்கும் தயாராக இருக்கும் வீரர்கள், உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடனே மொட்டைப் போட்டு ஒப்பாரி வைப்பதேன்?
  30. காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளைக் கடனுக்கும் சாவுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன்? விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது? மஞ்சு விரட்டு ஏது? சிந்திக்க வேண்டாமா?
  31. பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராகக் கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி.
  32. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
  33. உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு.
  34. இதன் பெயர்ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
    இவண்.
    ராஜு,
    மாநில ஒருங்கிணைப்பாளர்,
    மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

பீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா! கொள்வதா ?

பீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா! கொள்வதா ?

பீட்டா வின் செயல்பாடுகள் காளைகளை காப்பதா! கொள்வதா ? யார் இந்த peta பீட்டா , அல்லது பீட்டா என்றால் என்ன , இன்றைய தினத்தில் மிகவும் குழப்பமான  அல்லது எல்லோராலும் எதிர் கொள்ள கூடிய பெயர் பீட்டா Peta.
கொஞ்சம் பின் நோக்கி யார் இவர்கள் இவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்று பார்ப்போமா ?
Peat Kills Animals Proof Graph, Peta news in Tamil

பீட்டா Peta. என்ற தன் ஆர்வ தொண்டு நிறுவனத்தை
(Ingrid Newkirk) இந்டக்ரிட் நெவ்கிர்க் மற்றொருவர் Alex Pacheco என்ற’ இரண்டு பெண்மணிகள் 1980 நிறுவுகின்றனர்,உருவாக்கும்போது அதனுடைய நோக்கம் என்ன, மிருக வதையை தடுக்கவும் மற்றும் மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்வதை தடுக்க உருவாக்கப் பட்டது.
This is Evidence on Peta Kills animals

ஜல்லி கட்டு

இதன் தலைமையகம் அமெரிக்காவில் நியூ யார்க்கில் உள்ளது. இந்தத் தன் ஆர்வ அமைப்புதான் இன்று இந்தியா வில் உள்ள தமிழகத்தில் நடக்கும் சல்லி கட்டுக்கு (ஜல்லி கட்டு) உயர் நீதி மன்றத்தில் தடை வாங்கியது.
நமது கேள்வி என்னெவென்றால் peta இதையெல்லம் செய்வதற்கு தகுதியானதா என்பது தான் நமது கேள்வி,பீட்டா என்கின்ற அமைப்பு உருவானதற்கு கரணம் வேண்டுமானால் மிருகங்களைப் பாதுகாக்க இருக்கலாம்,ஆனால் பீட்டா வளர்ந்ததற்க்கு அல்லது மேலும் வளர்வதற்கு அதுவல்ல கரணம்,ஏன் என்றால் இன்று பீட்டாவை எதிர்க்கும் பல சமூக ஆர்வலர்கள் சொல்லும் கரணம் என்னவென்றால்? பீட்டா ஒரு பன் நோக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் கூட்டாளி, அதாவது மிகப்பெரிய நிறுவனங்கள் பணத்தை தண்ணியாகச் சிலவு செய்து, தொண்டு நிறுவனம் என்ற பெயரில் தனக்காக உருவாக்கி வைத்து இருக்கும் ஒரு ஆயுதம்.
Who Is This Peta
அதற்க்கு உதவி செய்வது ஏதோ ஒரு சின்ன சின்ன நிறுவனங்களோ அல்லது தனி பட்ட நபர்களோ அல்ல, பீட்டா வுக்கு பின்பு மிகப்பெரிய வியாபாரம் அரசியல் இருக்கிறது.
எமது கேள்வியெல்லாம் ஜல்லி கட்டை தடை செய்யச் சொல்லி முன் நிற்கும் நீ யார் மற்றும் உனது நண்பர்கள் யார்,
PETA Kills Animals The Evidence

வெறும் இந்த இரண்டு கேள்வியை வைத்துக் கொண்டு நாம் சிந்தித்து பார்த்தாள் இதற்குப் பின்பு இருக்கும் வியாபாரம் புரிந்து விடும்,
பீட்டா ஜல்லிக்கட்டை தடை செய்தால் அதற்கு லாபம் என்ன? சிறுசா ஓன்றும் கிடையாது யாருக்கும் தெரியாத ஒரு விஷயமும் இல்லை
ஏன் பீட்டா நல்லது தானே செய்கிறது மிருக வதையை தடுப்பது நல்லது தானே என்று நீங்கள் யேசிப்பது நியாம் தான்
பீட்டாவினுடைய செயல்பாடு நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் அப்படி தான் தோணும்
ஆனால் அதன் செயல் பாடுகளை உற்று நோக்கினால் அதில் இருக்கும் வியாபார தந்திரம் உங்களுக்குப் புரிய வரும்
அதாவது தனி ஒருவன் கணக்கு பீட்டா எந்த நாட்டில் உருவாக்கப் பட்டது அமெரிக்கா அமெரிக்காவின் முக்கிய அரசியல் என்ன உலகத்துக்கே பெரிய அண்ணன் போல்செயல்பட்டு எல்லா நாட்டிலும் சமாதானம் உலக அமைதி என்று பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் உலக ஆயுத உற்பத்தியில் முதலிடம் வகிப்பது
நமக்கு அமெரிக்காவை பார்த்து கேட்கத் தோன்றும் ஒரு கேள்வி என்னெவென்றால் நீ உலக அமைதியை விரும்பினால் முதலில் ஆயுதம் உற்பத்தி செய்வதை அல்ல வா முதலில் நிறுத்த வேண்டும்
அமெரிக்கா அப்படி செய்வதில்லையே உலகத்துக்கே ஒரு தாதா அல்லது ரௌடி போலச் செயல் பட்டு என்னவோ உலக அமைதிக்கான தூதுவர்போல் செயல் பட்டு எங்கே தனுக்கு சாதகம் இல்லையோ அந்த நாட்டில் அமைதியை நிலை நட்டு கின்றேன் என்ற போரவையில் இரு நட்டு க்கும் சண்டையைத் தூண்டி விட்டு அந்த இருநாட்டுக்கும் ஆயுதம் விற்கும் பெரிய பேட்டை ரௌடிதான் அமெரிக்கா
, அதனுடைய செல்ல வளர்ப்பு பிராணிதான் பீட்டா ஆகவே அமெரிக்காவின் நோக்கம் எல்லாம் பீட்டாவை வைத்துத் தனது நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு என்ன தடையாக இருக்குதோ அதைச் சட்ட பூர்வமான முறையில் சாதித்து கொள்ள தான் பீட்டா வை வளர்த்து வருகிறது அல்லது பீட்டாவை உருவாக்கியது அமெரிக்கா
, இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்குமே இன்னும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் இன்று பீட்டாவின் அதிகார பூர்வா செயல்கல் எல்லமே தனது அமெரிக்க நிருவனத்திற்கு சாதகமாக அமையும்படிதான் இருக்கும், எப்படி என்று இன்னும் தெளிவாகப் பார்க்கலாம் வாங்க
, அதாவது பீட்டாவின் நோக்கம் மிருக வதையை தடுப்பது தான் என்று வைத்துக் கொள்வோம் , நியாய படி மிருக வதை இல்லாமல் ஒரு பசு எப்படியொரு நாட்டின் மனிதர்களில் வாழ்விலும் உணர்விலும் இரண்டற கழுந்து ஒரு குடும்ப உறுப்பினராக அல்லது ஒருகுழந்தையை போல் அதற்கும் மேல் ஒரு தெய்வமாக எப்படி தமிழர்களால் கொண்டாட படுகிறது என்று தானே இந்தத் தமிழர்களை அடையாளம் காட்டி இருக்கணும் இந்த பீட்டா Peta
குடும்ப உறுப்பினராக  ஒருகுழந்தையை போல்

ஆனால் அப்படி செய்யாமல் பீட்டா பசு வதை மிருகவதை என்று பிதற்று வதேன்,
இங்கே தான் பீட்டா வின் உண்மையான வேலை ஆரம்பம் ஆகிறது புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் மருந்து என்ற பெயரில் ரசாயனம் எனும் பெயரில் கிடத்தட்ட விஷத்தைச் சாப்பிடும் நிலையில் தான் நாம் இருக்கிறோம் இயற்கை விவசாயம் தானே நல்லது ஏன் நாம் மருந்தைப் பயன் படுத்த வேண்டும்?
. அதாவது அதிக மகசூல் சாம்பல் சத்து சுண்ணம்பு சத்து என்று வெளிநாட்டு ரசாயன உரத்திற்கும் நிறுவனம்களிற்கும் பசுமை புரட்சி எனும் பெயரில் நமது விவசாயத்தையும் விசாயிகளையும் அடிமை ஆக்கி விட்டது போல் அதன் அடுத்த கட்டமாக நமது நாட்டு மாடுகளின் இன அழிப்பிற்கு வித்திடும் வேலையை இந்த அமெரிக்கா பீட்டா சரியாகச் செய்கிறது
, நாட்டு மாடு இல்லாமல் போனால் ,அடுத்ததாகத் தனது கலப்பின மாட்டை இந்திய சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக விற்கலாம்
அதற்க்கு ஜல்லிக்கட்டு தடை என்பது ஒரு ஆரம்பம் தான் அதன் பின்பு படி படியாகத் தனது எல்லையை விரிவு படுத்தி கொண்டே போகும் இந்த அமெரிக்க கார்ப்பரேட் கைக்கூலி
அதற்க்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களும்  பீட்டா போடும் எலும்பைப் பொரிக்கி கொண்டு செயல் படுகின்றனர்
பீட்டா வின் செயல்பாடுகள் பொய் என்றும் அது கார்ப்பரேட்டுகளின் கை கூலி என்றும் எப்படி சொல்ல முடிகிறது என்று கேட்டால் இன்று பீட்டா வின் ஒரு பக்கம் தான் நம்மக்கு தெரிகிறது  அதாவது மிருக வதையை தடுப்பது எனும் பெயரில் அது கொன்று குவித்த அப்பாவி பிராணிகள் ஜீவன்கள் ஆயிர கணக்கில் இல்லை லட்ச கணக்கில் இருக்கும் அதற்க்கு ஆதாரம் இதோ  அதன் இன்னொரு முகம்.
பல்வேறு காரணத்திற்காவும் பல்வேறு தேவைகளுக்கவும் peta எனும் பேட்டை ரௌடி கொன்று குவித்த உயிர்கள் ஏராளம்
ஜல்லி கட்டு நடக்கும் போது எந்த காளையாவது ரத்தம் சிந்தி யாராவது பார்த்த ஆதாரம் இருக்கிறதா அல்லது ஜல்லிக்கட்டில் காளையுடன் மோதும் ஆன் கையில் ஆயுதம் ஏந்தி சென்று இருக்கிறானா காளையிடம் தான் ஆயிதம் இருக்கும் அதாவது கொம்பு எனும் எங்கள் காளையர் வெறும் கையுடன் தான் மோதுவர் அது எழுத படாத விதி காளையுடன் மோதுவோர்தான் ரத்தம் சிந்துவர்

இப்போது சொல்லுங்கள் இந்த ஆபத்து நிறைந்த இந்த மிருகத்தை நமது தமிழகத்தை விட்டு விரட்டுவது நியாயம் தானே?
 


உலகமெங்கும் நடக்கும் பீட்டாவின் மிருகவதை மற்றும் பீட்டா நடத்தும் மிருக கொலைகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ள உங்களுக்கு இங்கே ஒரு இணையத்தை அறிமுக படுத்து கிறேன் இங்கே உங்களது இ மெயில் முகவரியை கொடுத்து உங்களை இணைத்து கொள்ளவும் நன்றி
Syed Abutahir Chennai, 

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left