- கடந்த காலங்களில் எப்போதும் இப்படி ஓர் போராட்டத்தை இந்த இந்தியா அரசாங்கம் பார்த்து இருக்காது ஏன் இப்போது உள்ள தமிழக இளைஞர்கள் கேள்வி பட்டே இருக்க முடியாது.
- ஆனால் அந்த மாணவர்கள் தான் இன்று ஒரு புதிய அத்தியாத்தை எழுதி’கொண்டும் நாளைய வரலாற்றுக்கு தங்கள் பங்களிப்பை செய்து கொண்டு இருக்கின்றார்கள் ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் - அவர்கள் கூடியது நிச்சயமாக ஜல்லிக்கட்டு காகத்தான் ஆனால் இந்த கோவம் இந்த எழுச்சி ஜல்லி கட்டில் மட்டுமா என்றால் இல்லை இது நெடுங்காலமாக அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்டத்திற்கு இழுத்து வரப்பட்டு
- இப்பொழுது கிளர்ச்சியாக வெடித்து இருக்கிறது ,கூடி இருக்கும் ஒவொருவரின் கோவமெல்லாம் , கடந்த 4 வருடமாக ஜல்லிக்கட்டு தடை என்று ஆரம்பித்து எப்பொழுது தடை நீங்கும் என்று பொறுத்து இருந்து அந்த தடையே கிடைக்காமல் 4 வருடமாக எல்லா அரசியல் கட்சியும் சேர்ந்து ஜல்லி கட்டை வைத்து அரசியல் தான் செய்தனர் யாரும் எந்த அரசியல் வாதியும் உணர்வு பூர்வமாக இந்த ஜல்லிக்கட்டு பிரச்னையை முன்னெடுக்க வில்லை
- அந்த கோவம் தான் இன்று இந்த கிளர்ச்சியை முன்னெடுக்க வைத்தது கூடி இருக்கும் இந்த மாணவர்கள் மக்கள் கூட்டத்துக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை ஆனால் அவர்களின் நோக்கம் அனைத்தும் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க வேண்டும் என்ற நோக்கம்தான்,
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் - இப்போது நடந்துகொண்டு இருக்கும் மாணவர்கள் போராட்டம் தன்னிச்சையாக எழுந்த கிளர்ச்சி அடக்கி வைக்க பட்ட உணர்வு அதாவது மக்கள் எந்த ஒரு போராட்டத்தை முன் எடுத்து சென்றாலும் , நீ அந்த ஜாதி தானே அல்லது நீ இந்த மதம் தானே என்று அவர்கள் உணர்வுகளை ஒரு எல்லைக்குள் அடக்கியது
- ஆக இப்போது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஜல்லிக்கட்டுக்கு மாண்வர்கள் போராட்டம் என்பது ஒரு மைய புள்ளியாக இருக்கிறது
- ஜல்லிக்கட்டு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் கூறும் ஒரே ஒரு கரணம் தான் அது காளைகளை காட்சி விளங்கு பட்டியலில் சேர்த்தது தான் அப்படி காட்சி விளங்கு பட்டியலில் சேர்த்தது
- இன்று மத்தியில் ஆளும் வர்க்கம் தான் அப்படி ஒரே நாளில் நீங்கள் சட்டம் இயற்றி மற்ற முடியும் போது அதே சட்டத்தை வைத்து காட்சி விலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்க முடியாதா ?நீக்கறது தான் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது சட்டசிக்கல் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்,
- நீங்கள் காளைகளைக் கட்சி விளங்கு பட்டியலில் சேர்த்தீர்களே அதுல எதாவது லாஜிக் இருக்காயா, அதாவது எப்படி என்றால் சிங்கம் புலி கரடி போன்ற காட்டில் வாழும் விளங்குகளுடன் காளைகளையும் சேர்த்துட்டாங்களாம் என்ன ஒரு முட்டாள் தனமான ஒரு சட்டத்தை நம் அரசியல் வாதிகள் இயற்றி இருக்கின்றார்கள் !
- அதவாது எப்படி என்றால் மாடு வீட்டில் இருக்கலாமாம் ஆனால் களைகள் காட்சி விலங்காம் இது என்ன ப உங்கள் சட்டம் தாயும் கன்னுக்குட்டியும் வீட்டில் இருக்கலாமாம் காளை களை வீட்டில் வைத்து வளர்க்க கூடாதாம் அவர்கள் போட்டு வைத்து உள்ள சட்டப்படி நாம் களைகளை வீட்டில் வைத்து இருப்பதே தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்கின்றார்கள்
- இப்போது புரிந்து இருக்குமே இதில் உள்ள அரசியலும் வியாபாரமும்,இந்தக் கோபம் தான் இன்று ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் போராட தூண்டி உள்ளது
இந்த வலைப்பதிவில் தேடு
ஜல்லிக்கட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜல்லிக்கட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி
ஜல்லிக்கட்டுக்கு பின்னால் உள்ள ஆதிக்க சாதியினர்
- ஜல்லிக்கட்டுக்கு பின்னால் உள்ள என்.ஜி.ஓ. க்கள், நிலவுடமையாளர்கள், மற்றும் ஆதிக்க சாதியினர் பற்றிய விபரம்இதுவும் ஒருவகையில் சிந்திக்க வேண்டிய கருத்து
- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர் என்பதற்கு தொலைக்காட்சி நேர்காணல்களும், அவர்களது ட்விட்டர் பக்கங்களும் ஆதாரமாக உள்ளன.
- பீட்டா என்ற பன்னாட்டு என்.ஜி.ஓ வுக்கு இணையாகப் பல நாடுகளிலும் கிளை பரப்பிச் செயல்படும், பிக்கி BICCI என்.ஜி.ஓ வும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறது.
- அந்த அமைப்பின் தலைவர் சீனிவாசன் ஒரு பார்ப்பனர். பொறுப்பாளர்களாகக் காங்கேயம் காளை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் கார்த்திகேய சிவசேனாதிபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வி.சாமி நாதன் அவர்களின் பேரன் எனப் பல பெரும் பணக்காரர்கள், நிலவுடைமையாளர்கள், இடைநிலைச்சாதி ஆதிக்கவாதிகள் உள்ளனர்.
- BICCI மட்டுமல்லாமல், Care and Welfare, JustVolunteerIndia, Arappor, thozhan, LitTheLight, thuvakkam, Dhagam ஆகிய என்.ஜி.ஓக்களும், இன்னும் வெளியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத சில என்.ஜி.ஓக்களும் கடந்த நான்கு? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஆதரவைத் திரட்டியுள்ளனர். Bicci அமைப்பும், காங்கேயம் காளை ஆராய்ச்சி நிலையமும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.டி. நிறுவனங்களில் பரப்புரை நடத்தியுள்ளன. பல்வேறு நாடுகளிலும் லாபி செய்துள்ளன
- நாம் தமிழர், நாங்கள் தமிழர்கள் என்பவை போன்ற தமிழ்த்தேசிய அமைப்புகளும் பணியாற்றியுள்ளன. உலகத் தமிழ் அமைப்புக்கும் இதில் பங்குண்டு.
- கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாக்களில் காமெடியன்களாக நடித்துக் கொண்டிருந்த துக்ளக் சோ, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் காரியக் கிறுக்கர்களாக இருந்தனர் என்பதை நாம் பார்த்திருப்போம்.
- இது டிஜிட்டல் காலம். காமெடியன்கள் டிஜிட்டல் அவதாரம் எடுத்துள்ளனர்.
- Chennai Memes, Smile Settai, Put Chutney என்று பல முகங்கள் எடுத்து, இவைகளை வைத்து இக்கால ஆப்ஸ் தலைமுறையைச் சிரிக்க வைக்கின்றனர்.
- சோ, சேகர் வகையறாக்களைப் போலவே, இந்து மதத்தைக் காப்பாற்றுவதில் முன்னணியில் நிற்கின்றனர்.
- ஜல்லிக்கட்டு என்ற இந்து ஆணாதிக்க, ஜாதி ஆதிக்கப் பண்பாட்டு விழாவைச் சமூக வலைத்தளங்கள் வழியாக மிகத்தீவிரமாகப் பரப்பினர்.
ஜல்லிக்கட்டை எதிர்ப்பது, ஆதரிப்பது என இரண்டு நிலைகளிலும் ஜல்லிக்கட்டுக்கு பின்னால் பார்ப்பனத் தலைமையிலான தொண்டு நிறுவனங்களும், பார்ப்பனக் கார்ப்பரேட் சாமியார்களும், அவர்களின் மறைமுகத் தொண்டர்களும், இடைநிலைச்சாதி வெறியர்களும் சம அளவில் இருக்கின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு பின்னால் - பணமதிப்பு நீக்கம், பணமதிப்பு நீக்கத்தால் அழிவைச்சந்திக்கும் நாட்டின் பொருளாதார நிலை,
- மிரட்டும் தண்ணீர்ப்பஞ்சம், பருவமழை பொய்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை, நீர்நிலை ஆதாரங்கள் அழிப்பு போன்றவற்றால் அழிந்து வரும் விவசாயம், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயக்குடும்பங்கள்,
- மண், மரம், நீர் வள அழிப்புகள் போன்றவற்றிற்கு எதிராக நாம் அணிதிரளாமல், நமது கவனம் அங்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள, பார்ப்பன – பன்னாட்டு நிறுவனங்கள் – பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் – இந்திய தரகு முதலாளிகள் – பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள், ஆர்.எஸ்.எஸ் – தேசிய இன உணர்வுக் குழுக்கள் – ஜாதிவெறிக் குழுக்களின் கூட்டுத்திட்டங்கள் தான் ஜல்லிக் கட்டுக்குத் தடையும், தடையை நீக்க நடக்கும் போராட்டங்களும்.//
(Whats app ல் பகிர்ந்து கொள்ளப் பட்ட தகவல்.) ஜல்லிக்கட்டுக்கு பின்னால் - பீட்டா இந்திய மண்ணை விட்டு விரைவில் காலியாகும்