இந்த வலைப்பதிவில் தேடு
பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து காதலியை தாக்கி விட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை குடிபண்டே அருகே பரபரப்பு
நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது
கோழிகோடு, கேரளாவில் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்ட வாலிபர் மீது, முன்னாள் காதலி பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து உள்ளார். கோழிகோடு மாவட்டம் கோராஷந்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஷமீர்(வயது 29) தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோது எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இதனை பேஸ்புக்கில் பார்த்த அவருடைய முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார். என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, என்னுடன் சுற்றிவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவுசெய்து வாலிபரை கைது செய்தனர்
கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு
நாள்:ஞாயிறு, மார்ச் 08,2015, 4:00 AM ISTபதிவு செய்த நாள்:சனி, மார்ச் 07,2015, 8:32 PM IST ஈரோடு, பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மாணவி பலாத்காரம் ஈரோடு ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 29). சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. இவர் கடந்த 11–8–2013 அன்று அந்த பகுதியில் 9–ம் வகுப்பு படித்துவந்த பள்ளிக்கூட மாணவி ஒருவரை ஏமாற்றி ரெயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 21 ஆண்டு ஜெயில் வழக்கை நீதிபதி திருநாவுக்கரசு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பள்ளிக்கூட மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்ற குற்றத்துக்கு ஒரு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இதுபோல் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஒரு ஆயுள்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். இந்த 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் இந்த தீர்ப்பில் கூறி இருந்தார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தார். அதன்படி குற்றவாளியான கோபால கிருஷ்ணன் 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றார். இதில் 2 ஆயுள் தண்டனைகளையும் ஏக காலத்திலும் 7 ஆண்டு ஜெயில் தண்டனையை ஆயுள்தண்டனை காலத்துக்கு பிறகும் அனுபவிக்க வேண்டும் என்று மொத்தம் 21 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி திருநாவுக்கரசு அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்
நாகாலாந்தில் ஜெயில் கைதி அடித்துக்கொலை: நடந்தது கற்பழிப்பு அல்ல; சம்மதத்துடன் கூடிய உடலுறவு மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை
புதுடெல்லி நாகாலாந்து மாநிலத்தில் கற்பழிப்பு புகாரின் பேரில், சையது சரிப் கான் என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி கைது செய்யப்பட்டார். திமாபூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த 5–ந் தேதி ஒரு கும்பல், ஜெயிலுக்குள் புகுந்து வெளியே இழுத்து சென்று அடித்துக்கொன்றது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், ‘சையது சரிப் கான் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது விருப்பத்துடன் இரண்டு தடவை அழைத்துச் சென்று ‘செக்ஸ்’ உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அப்பெண் கூடுதலாக பணம் கேட்டதற்கு, தான் மறுத்ததால், கற்பழிப்பு புகார் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இது கற்பழிப்பு அல்ல, இருவரின் விருப்பத்துடன் நடந்த ‘செக்ஸ்’ உறவு என்று தோன்றுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது
காரில் சென்ற இளம் பெண் கடத்தி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்
சண்டிகார், அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் ஹார்சோலா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் கர்ஜிந்த் மாவட்டம் ரோப்கர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். கார் கண்ணாடி உடைக்கப் பட்டது. கார் நின்றதும், அந்த பெண்ணின் உறவினர்களை யும் அடித்து உதைத்தனர். அப்போது, திடீர் என்று காரில் இருந்த பெண்ணை 6 பேர் கொண்டகும்பல் இழுத்தச் சென்றது. பின்னர் அருகில் உள்ள வயல் பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்தனர். அந்த பெண் கதறி கூச்சலிட் டார். உடனே அந்த கும்பல், ’இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அந்த தலித் பெண்ணை எச்சரித்து விட்டு ஓடி விட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தாழ்த்தப் பட்டோர் வன்கொடுமை சட் டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலித் பெண்ணை கற் பழித்தவர்களில் கண்டீலா கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகர், மனோஜ், ஜிதிந்ரா, காலா, சந்தீலா ஆகிய 5 பேர் அடையாளம் தெரிந் தது. மேலும் ஒருவரை யும் போலீசார் தேடி வரு கிறார்கள். மருத்துவ பரிசோதனை யில் அந்த பெண் கற்பழிக் கப்பட்டிருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. குற்றவா ளிகள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஜிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் ஜார்வால் தெரிவித்தார்