மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 250 பணியிடங்கள் உள்ளன.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எம். டி.சி.. சுரங்கம் மற்றும் தாதுவளங்களை விரிவுபடுத்துதல் போன்றவை சார்ந்த பணிகளை இந்த நிறுவனம் கவனிக்கிறது. மத்திய உருக்குத் துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் 'நவரத்தினா' அந்தஸ்து பெற்றது.
தற்போது என்.எம்.டி.சி. நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (டெக்னிக்கல்) பணிக்கு 201 இடங்களும், எக்சிகியூட்டிவ் டிரெயினி (அட்மினிஸ்ட்ரேசன்) பணிக்கு 49 இடங்களும் நிரப்பப்படுகிறது. மொத்தம் 250 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 126 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 68 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 38 இடங்களும் உள்ளன. இனி தகுதி விவரங்களை பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 24-3-15 தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 24-3-1988-ந் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
கல்வித் தகுதி:
சிவில், செராமிக்ஸ், கம்ப்யூட்டர் அன்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, மினரல் பிராசசிங், மைனிங் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், பெர்சனல், பைனான்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன், முதுகலை டிப்ளமோ படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ஓராண்டு கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.
கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் வழியே கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். முன்னதாக அனைத்து விவரங்களையும் படித்து அறிந்து கொள்வதுடன், புகைப்படம் மற்றும் கையப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க ஆரம்பிக்கவும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி குறிப்பிட வேண்டும். இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும், பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். நகல் எதையும் அனுப்பத் தேவையில்லை. எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள், புகைப்படம் ஒட்டிய அனுமதி அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
முக்கிய தேதிகள்:
இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 24-3-15
தேர்வுக்கான அனுமதி அட்டை பதிவிறக்கம் : 27-4-15 முதல்
எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாள் : 17-5-15
மேலும் விரிவான விவரங்களை www.nmdc.co.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலா