Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates
ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை
ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்து மேல்முறையீடு செய்ய மூன்றுநாள் அவகாசம் வழங்கிய நிலையில் அரசும் ஊடகங்களும் சிதம்பரத்தை காணவில்லை என கதை பரப்புகிறது ஓடியொளிய இவர் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஏன் ஜெயலலிதாவை இழுக்கவேண்டுமென கேட்கலாம் இந்திய நீதியின் நிலைபாடென்பது வர்ண கலவையிலானது
சிதம்பரம் மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தவர் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர் நாடறிந்த அரசியல்வாதி திறமையான நிர்வாகி என பெயரெடுத்தவர் அதைவிட செட்டிநாட்டரசரின் பேரன் அப்படியொன்றும் ஓடியொளிய மாட்டார் பின் ஏன் இத்தனை களேபரம், திமுக நடத்தும் அரசின் கஷ்மீர் நிலைபாட்டிற்கெதிரான போராட்டம் உலகளவில் பேசபட்டுவரும் நிலையில் அதை இந்திய மக்களின் கவனத்திலிருந்து மடைமாற்ற ஒரு முயற்சி அவ்வளவுதான்
எச்.ராசா போன்றவர்கள் மீதான வழக்குகள் இப்படிதான் கையாளபட்டதா?
ஐஎஎஎக்ஸ் மீடியா வழக்கில் அவர் மீது வழக்கு பதிவு செய்யபடவில்லை முதல் தகவல் அறிக்கை இ்ல்லை ஆனாலும் கைது செய்ய பாஜக அரசு முயற்சிக்கிறது வழக்கை சந்திக்கவேண்டும விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்பதில் இரு கருத்தில்லை உயர்நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காலம் கடத்தி நீர்த்துபோக செய்தார்களே எச்.ராசா போன்றவர்கள் மீதான வழக்குகள் இப்படிதான் கையாளபட்டதா நீதி எல்லோருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும் சிதம்பரம் புனிதரென்று சொல்லவரவில்லை ஆனால் பொருளாதார மந்தநிலை இந்தியாவில் தொழில் நசிந்து வேலைவாய்ப்புகளை இழக்க தொடங்கியிருக்கிறார்கள் ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் வாங்க மக்கள் யோசிக்கிற நிலையில் இருப்பதாக பிரிட்டானியா நிறுவனர் சொல்கிறார் இதையெல்லாம் மறக்கடிக்க செய்யவேண்டும் அதற்காக துரிதகதியில் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்துவதென்பது சரியில்லை ப.சிதம்பரம் விசாரணையை எதிர்க்கொள்ளவேண்டும் பிணை மறுக்கபட்டநிலையில் பத்திரிக்கையாளர்களை அன்றே சந்தித்திருந்தால் எங்கே ப.சி என ஊடகங்கள் தன் தொழிலை செய்திருக்காது திமுகவினர் உட்பட சிலர் மகிழ்கிறார்கள் ஸ்பெக்டம் ராசாவை குறிவைத்தவர்தானே ராசா வாய்தா வாங்காமல் ஜெயலலிதா போல் இழுத்தடிக்காமல் பிணை கேட்டு கதறாமல் துணிவோடு வழக்கை வென்று வரவில்லையா என்கிறார்கள்
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முக செட்டியார்
“அறம் வெல்லும் ” என ஆசான் அப்போதே தெளிவுபடுத்தியிருந்தார் எமக்கு தீங்கிழைத்தவர் என்றாலும் மறப்போம் மன்னிப்போம் என்ற பேரருளாளின் வழி வந்தவர்கள் நாம் இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முக செட்டியார் கடுமையாக பெரியாரை விமர்சனம் செய்வார்/திட்டுவார்.. ஆனாலும் பெரியார் அவரை கடுஞ்சொல் சொன்னதில்லை மாறாக சண்முகம் அறிவாளி என்பார் அதே நிலைபாடுதான் நமக்கும் இந்த பாசிச அரசு குற்றவாளிகளை கொடுஞ்செயல் செய்வோரை நீதிபதிகளை மிரட்டுவோரை கொலைபழி சுமந்தோரை எம்எல்ஏக்களை விலைபேசி வாங்குவோரை .. வங்கியை ஏமாற்றி நாடுகடக்க காசுவாங்குவோரை கருப்புபணத்தை வெள்ளையாக்க கூட்டுறவுவங்கியை பயன்படுத்துவோரை கொண்ட /கொண்டாடுகிற அரசு .. ஆனால் அறிவாளிகள் முற்போக்காளர்கள் ஜனநாயகவாதிகள் திறமையான நிர்வாகிகள் நிபுணர்கள் இவர்களை கண்டால் ஆகாது .. .. ஆலஞ்சியார் .. ஆலஞ்சியார்
ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டி
ஒய் ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி அருண் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ” நான் பிராமண பெண் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் நிச்சயமா சாதி உள்ளது அதில் எந்த சந்தேகமும் இலலை என்கிறார் குறிப்பாக பூணூல் எல்லோரும் அணிய முடியாது அதற்கான முறையான பயிற்சி வேண்டும் வைணவப் பேராசியர் வெங்கிட கிருஷ்ணன் தவறாக ஒன்றும் பேசவில்லை நிச்சயாக நான்கு பிரிவுகள் உள்ளது இதில் உசத்தி, தாழ்வு என்ற பிரிவு கிடையாது எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய முடியாது
சத்ரியன் தான் போர் செய்ய முடியும் மதுவந்தி அருண்
சத்ரியன் தான் போர் செய்ய முடியும் பிராமணரால் தான் முறைப்படி பக்குவமாக வேதமந்திரங்களை அதற்குரிய ஒழுங்கு அடிப்படையில் கற்று அதன்படி வாழ முடியும் என்கறார் மதுவந்தி அருண்
பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில்
சனாதன தர்மப்படி பார்ப்பனர் பிச்சை எடுத்துதான் ஜீவனம் நடத்தவேண்டும் – அதைச் செயல்படுத்தத் தயாரா பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில் – என்று சொன்னவர் ஜகத்குரு காஞ்சி சங்கராச்சாரியார் (மகாபெரியவா) இவர்கள் நடத்தும் கல்விநிலையங்களில் முறைகேடுகள் கட்டண கொள்ளை இதெல்லாம் பிராமணீயம் ஏற்காதே.. வர்ணதர்மப்படி, சனாதன நெறிப்படி, வைதீக வழிப்படி, சத்திரியன், வைசியன், சூத்திரன் செய்யும் தொழில்களை இன்று பிராமணர்களும்” செய்கிறார்கள அதைக் கைவிட்டு பழைய முறைக்கே திரும்புவா ர்களா இந்து சனாதனப்படி, கடல் கடக்கக் கூடாதே; வெளிநாட்டில் கணினிப் பொறியாளர், டாக்டர், ஆடிட்டர் மற்றும் ராஜதந்திர பதவிகளில் இருக்கிறார்கள் இதெல்லாம் விதி மீறல் இ்ல்லையா.. உணவு உடைகளில் கூட பிராமணர்களுக்கென்று தனிஒழுங்கு உள்ளதே .. அதுபோல் தான் மதுவந்தி வகையறாக்கள் இருக்கிறார்களா .. வேலைக்கு செல்லும் பெண்களை சாஸ்திரம் விபாச்சாரி என்கிறதே .. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்ற பார்பனர்களின் ஜகத்குரு சங்கராச்சாரியார் சொன்னதை ஏற்கிறாரா
இவையெல்லாம் மீறப்படலாம் சாஸ்திர வேதங்கள் மீறப்படலாம் ஆனால் வர்ணகோட்பாடு சாதீயநிலையும் வேண்டும் என அதை பெருமையாக சொல்லிக்கொள்கிறார் இவரது பாட்டி ராஜலட்சுமி பார்த்தசாரதி இயக்குனர் பாலசந்தருக்கு அளித்த பதிலில் அரங்கேற்றம் பட விவகாரத்தில் கட்டுபாடுகளும் சம்பரதாயங்களும் மீறப்படுவது காலங்காலமாய் நடப்பதுதான் பணம் புகழ் பதவி நோக்கி நகரும் வாழ்வில் இழப்புகளும் விதி மீறல்களும் (சாஸ்திரம்) ஏற்படுவது தவிர்க்கமுடியாது புதியவைகள் புகதான்செய்யும் கலப்பிடமில்லாதது ஏதுமில்லை என்றார் தனித்துவம் என்பதும் மூன்று தலைமுறை ஒரே பிரிவில் என்பதெல்லாம் மிகப்பெரிய பொய் இதையெல்லாம் ஆய்ந்தால் அதிர்ச்சியே தரும் இவையெல்லாம் அறிவார் ஆனாலும் தங்களை உயர்ந்தவர்கள் என சொல்லிக்கொள்வதில் கர்வம் .. ஆலஞ்சியார்
ரஜினி கருத்து விவாதமாகியிருக்கிறது அரசியல் தெளிவற்ற அவரின் பார்வை நமக்கு புதிதல்ல அவர் நிழல் கூட பார்பன கரிசனம் கொண்டதாகதான் இருக்கும் அவரை உயர்த்தி பிடிக்கவேண்டிய கட்டாயம் பாசிசத்திற்கு தேவை அவரின் சினிமா இமேஜ் கவர்ச்சி கைக்கொடுக்கும் என இன்னமும் நம்புகிற நிலையில் ஊடகங்கள் அவரை வலுகட்டாயமாக உயர்த்திபிடிப்பதும் அவர்களுக்கு தரப்பட்ட வேலையை அவர்கள் சரியாக செய்கிறார்கள் அவ்வளவுதான் பார்பனர்களின் நவீன அரசியல் குரு துக்ளக் குருமூர்த்தி ஒரு புறம் மோடி மறுபுறம் ரஜினி படம் வைத்தால் போதும் தமிழகத்தை வென்றுவிடலாமென பேசியும் மனிதர் அசைந்து கொடுக்கவில்லை வேறுவழியின்றி கமலை களமிறக்கி மயிலாப்பூர்வாசிகள் வாக்குவங்கியை தவிர வேறெதையும் அசைக்கமுடியவில்லை என்ற அறிவுபிடிபட பிக்பாஸோடு காலம் தள்ளுகிற நிலை தமிழக அரசியல் களமென்பது விவரம்தெரிந்தவர்கள் ஏனென்று கேள்வி எழுப்பும் சுயமரியாதைகாரர்களால் பக்குவபடுத்தபட்டிருக்கிறது பெரியாரெனும் பெரும்மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை விதைத்துவிட்டு போயிருக்கிறார் கருத்துவேறுபாடு கோபம் என மாறுபட்டு நின்றாலும் பாசிச எதிர்ப்பில் பார்பன எதிர்ப்பில் தன்னை கீழ்படுத்தும் தன் உரிமையை பறிக்கும் ஆரிய போக்கில் கடும் எதிர்ப்பாளனாக எப்போதும் ஏற்காதவனாகவே இருந்துவந்திருக்கிறான் இனியும் அப்படிதான் ரஜினியை தூக்கிபிடித்து வரும் பார்பனர்கள்இதை உணர்ந்தே இருக்கிறார்கள் ரஜினியால் எதையும் பிடுங்க முடியாதென அறிவார்கள் ஆனால் திராவிட இயக்கத்திற்கு மாற்றை கொண்டுவர ஏதெல்லாம் வழிகள் உண்டு என தொடர்ந்து பயணித்து கொண்டே இருப்பார்கள்
எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே இதற்கு சாட்சி
திமுகவை உடைத்து பார்த்தார்கள் உடைந்து வந்தவன் கூட திராவிடத்தை விட்டு விலகினால் மக்கிபோவோமென என்பதை உணர்ந்து விழித்துக்கொண்டான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவுமே இதற்கு சாட்சியம் வகிக்கிறார்கள் ரஜினியின் தெளிவற்ற இந்த பார்வை/பயணம் கரைசேர்க்காது என்பதை யாவரும் அறிவர் ரஜினி பணமதிப்பிழப்பின் போது புதிய இந்தியா பிறந்ததென பிதற்றியவர்தான் இப்போது கஷ்மீர் விடயத்திலும் அமிர்ஷாவை புகழ்கிறார் அர்ஜூனன் கிருஷ்ணனென பாவம் அவருக்கும் பசிக்குமில்ல இல்லையெனில் வருமானவரி ரெய்டு வரலாம் அமிர்ஷா இப்போது யாரென்று தெரிகிறதென்கிறார் இவரின் முகம் தமிழகம் அறிந்தது தான் .அரசியல் தெளிவற்றவர் சமூகநீதிக்கெதிரானவர் .. பார்பன நலம்விரும்பி மநுநீதிக்கு ஆதரவானவர் ..உள்ளத்தில் ஆர்எஸ்எஸ் எனும் விஷமேறிய சித்தாந்தத்தை கொண்டவர் பார்பனீயத்தின் நிழல் சினிமா கவர்ச்சி என்பதெல்லாம் 90 களிலேயே கைக்கொடுக்கவில்லை சினிமாவெனும் மாயபிம்பம் உடைத்தெறியபட்டு வெகுகாலமாகிறது தெளிவற்று வந்தால் இருந்த இடம் தெரியாமல் போய்விட நேரிடும் .மதமோ ஜாதியோ உயர்த்திபிடித்தால் உள்ளதும் போகும் .. இங்கே திராவிட இயக்கங்கள் மீது பிணக்கு வந்திருக்கிறது வெறுப்பு வந்ததில்லை இதையெல்லாம் உணர்ந்தால் நல்லது இந்த அடிமைகளை வைத்து நீண்டநாள் பயணிக்க முடியாதென்பதை உணர்ந்து வேறொரு முகத்தை கொண்டுவர திட்டமிடுகிறது மக்கள் எச்சரிக்கையாகதான் இருக்கிறார்கள் என்பதை பொதுவெளியில் உணர்த்துகிறார்கள் நடிகர் விஜய்சேதுபதிக்குள்ள அரசியல் தெளிவு கூட ரஜினிக்கு இல்லை என்று நிறைய குரல்களை கேட்க முடிகிறது இது தான் தமிழகம் .. எச்சரிக்கை: பாசிச நரி எட்டிபார்க்கிறது .. ஆலஞ்சியார்
கடந்த 70 ஆண்டு காலமாக அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமையில் இருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் சிறை வைக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறது
காஷ்மீரில் புதிய மோதல்கள் பிபிசியின் கீதா
பிபிசியின் கீதா பாண்டே அந்தப் பகுதியில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார் துரோகம் செய்துவிட்டதாக தோன்றியுள்ள கசப்புணர்வால் அப்பகுதியில் புதிய மோதல்கள் உருவாகும் அச்சுறுத்தல் காணப்படுகிறது
ஸ்ரீநகரின் மையப் பகுதியில் உள்ள கான்யார் என்ற பகுதி இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற இடம் 24 மணி நேர ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் இந்த இடத்தை அடைவதற்கு நாங்கள் ஒரு டஜன் சாலைத் தடைகளை கடக்க வேண்டியிருந்தது அங்கு மீண்டும் ஒரு தடையை நாங்கள் கடந்து வந்தபோது, சில புகைப்படங்கள் எடுப்பதற்காக எனது காரில் இருந்து நான் இறங்கினேன். அருகில் உள்ள பகுதிகளில் இருந்து சிலர் வந்து, முற்றுகைக்கு ஆளான சூழ்நிலையில் தாங்கள் வாழ்ந்து வருவதாகப் புகார்கள் கூறினர். அரசின் இந்த முயற்சி, மிதமிஞ்சிய ரவுடித்தனமாக இருக்கிறது” என்று அந்தக் குழுவில் உள்ள மூத்தவர் ஒருவர் கூறினார் எங்களை விரட்டுவதற்கு துணை ராணுவத்தினர் முயற்சி செய்தனர் ஆனால் அவருடைய கருத்தை நாங்கள் கேட்க வேண்டும் என்று அந்த நபர் விரும்பினார் பகலில் எங்களை பூட்டி வைக்கிறீர்கள் இரவிலும் பூட்டி வைக்கிறீர்கள்” என்று தனது விரல்களை நீட்டி கோபத்துடன் கூறினார் அந்த நபர் ஊரடங்கு அமலில் இருப்பதால், உடனடியாக உள்ளே போக வேண்டும் என்று காவல் துறையினர் கூறினர். ஆனால் எளிமையான அந்த வயதான நபர் உறுதியாக அங்கேயே நின்று அவருடன் மீண்டும் வாக்குவாதம் செய்தார் அந்த சமயத்தில், அங்கிருந்து செல்லுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், நான் புறப்படுவதற்கு முன், தன் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அங்கு வந்த ஓர் இளைஞர், இந்தியாவுக்கு எதிராகப் போராட தாம் துப்பாக்கி ஏந்துவதற்குத் தயாராக இருப்பதாக கூறினார்.
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
“இது என்னுடைய ஒரே மகன். அவன் இப்போது மிகவும் சிறியவன். ஆனால் அவனும் கூட துப்பாக்கி ஏந்தும் வகையில் அவனை நான் தயார் செய்வேன்” என்று அவர் கூறினார். எனக்கு அருகே நிற்கும் காவல் துறை காவலர் சுடக் கூடிய தொலைவுக்குள் நின்று இதைச் சொல்வது பற்றி தமக்கு எந்தப் பயமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் கோபமாக இருந்தார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில், பாதுகாப்புப் படையினரின் பயத்துடன் இனிமேலும் வாழ விரும்பவில்லை என்று கூறிய ஒருவரை நான் சந்தித்தேன். 30 ஆண்டுகளாக இங்கே சண்டை நடந்து வரும் நிலையில், தொலைவில் உள்ள டெல்லியின் “சர்வாதிகாரமான உத்தரவு” என்று இதை அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். ஒருபோதும் பிரிவினைவாதத்தை ஆதரிக்காத மக்களை ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டார்கள் என்று குறிப்பிட்டனர். இது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர். நான் சென்ற இடங்களில் எல்லாம் இதுதான் அதிகம் காணப்பட்ட உணர்வாக இருந்தது – அச்சம் மற்றும் கவலை சேர்ந்த கோபம். அதோடு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற கடும் உறுதி. ஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீரின் கோடைக்கால தலைநகர். திங்கள்கிழமை காலையில் இருந்து முழுமையாக அந்த நகரம் மூடப்பட்டுள்ளது. கடைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் இன்னும் மூடிக் கிடக்கின்றன. சாலைகளில் பொதுப் போக்குவரத்து இல்லை. துப்பாக்கி ஏந்திய ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கம்பிச் சுருள்கள் வைத்து சாலைத் தடுப்புகள் அமைத்துள்ளனர். பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சுமார் ஒரு வார காலமாக, முன்னாள் முதல்வர்களில் இரண்டு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் தற்போது இந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பேராசியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தற்காலிக சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது காஷ்மீர் “சிறையைப் போல, பெரிய திறந்தவெளி சிறையைப் போல இருக்கிறது” என்று ரிஸ்வான் மாலிக் என்பவர் கூறினார். காஷ்மீர் குறித்த தனது திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 48 மணி நேரத்துக்குள் இவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்துள்ளார்.
இரண்டு நாட்களாக தனது பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் ரிஸ்வான் மாலிக் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்துள்ளார். இணையம் உள்பட, தகவல் தொடர்பு வசதிகள் அனைத்தையும் அரசு முடக்கியதற்கு சில மணி நேரம் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கடைசியாக தனது பெற்றோருடன் பேசியதாக அவர் தெரிவித்தார். தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் தனது நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், நேரில் செல்ல முடிவு செய்ததாக அவர் கூறினார் நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது என் வாழ்க்கையில் இதுதான் முதல்முறை. கடந்த காலத்தில் எப்போதும் இதுபோல நான் பார்த்தது இல்லை” என்று ஸ்ரீநகரில் தனது பெற்றோரின் இல்லத்தில் இருந்தபடி அவர் என்னிடம் கூறினார். காஷ்மீருக்கு ஓரளவு தன்னாட்சியை வழங்கிய, பல தசாப்தங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் நல்லுறவுக்கு அடிப்படையாக இருந்த சிறப்பு அந்தஸ்தை, அந்த மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் இந்தியா ரத்து செய்துவிட்டது என்று மாலிக் கோபமாக இருக்கிறார். அவர் பிரிவினையை ஆதரிப்பவர் அல்ல அல்லது போராட்டத்தின்போது ராணுவ வீரர்கள் மீது கல் வீசியவர் அல்ல. உயர் லட்சியங்கள் கொண்ட 25 வயது இளைஞர். டெல்லியில் அக்கவுண்ட்ண்ட் படிப்பு படிக்கிறார். இந்தியாவின் பொருளாதார வெற்றிகளால் ஈர்க்கப்பட்ட காரணத்தால், இந்தியா என்ற நாட்டின் சிந்தனை மீது நீண்டகாலமாக அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். “இந்தியா ஜனநாயக நாடு என்று நாங்கள் நம்ப வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அவர்களையே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். நீண்ட காலமாக இந்தியாவுடன் காஷ்மீர் சுமூகமற்ற உறவு கொண்டிருக்கிறது. ஆனால் எங்களுக்கான சிறப்பு அந்தஸ்துதான் இரண்டையும் இணைக்கும் பாலமாக இருந்தது. அதை ரத்து செய்ததன் மூலம் எங்கள் அடையாளத்தை அவர்கள் அகற்றிவிட்டார்கள். இது எந்தக் காஷ்மீரிக்கும் ஏற்புடையது அல்ல” என்று அவர் கூறினார்.
முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டு, போராட்டக்காரர்கள் வீதிகளுக்கு வரும்போது, ஒவ்வொரு காஷ்மீரியும் அதில் சேரக்கூடும் என்று மாலிக் கூறுகிறார். “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சகோதரர் பிரிவினைவாதிகளுடனும், இன்னொருவர் இந்தியாவுடனும் இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள் இருவரையும் இந்திய அரசு ஒன்று சேர வைத்துவிட்டது” என்றார் அவர். அவருடைய சகோதரி 20 வயதான ருக்சர் ரஷீத், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை மாணவியாக உள்ளார். தொலைக்காட்சியில் உள்துறை அமைச்சரின் உரையை கேட்டபோது, தன்னுடைய கைகள் நடுங்கியதாகவும், அருகில் அமர்ந்திருந்த தன் தாயார் அழத் தொடங்கிவிட்டார் என்றும் அவர் கூறினார். இதைவிட மரணமே மேலானது'' என்று தனது தாய் கூறியதாக கூறுகிறார் ரஷீத்.பதற்றத்துடன் திடீரென நான் எழுந்து கொள்கிறேன். நகரில் பட்மலூ பகுதியில் எனது தாத்தா பாட்டி வசிக்கின்றனர். இது ஆப்கானிஸ்தானைப்போல ஆகிவிட்டது என அவர்கள் கூறினர்” என்று ரஷீத் குறிப்பிட்டார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் குறித்து, பெரியதொரு நடவடிக்கை எடுக்க சில காலமாகவே இந்தியா பணிகளை மேற்கொண்டிருந்தது. அந்தப் பகுதிக்குக் கூடுதலாக 35 ஆயிரம் ராணுவத்தினரை அனுப்புவதாக கடந்த மாத இறுதியில் முதலில் அரசு அறிவித்தது.
கடந்த வாரத்தில், இந்துக்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் அமர்நாத் யாத்திரை, தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து திடீரென நிறுத்தப்பட்டது. பிறகு, ஹோட்டல்கள், தால் ஏரியில் உள்ள படகு இல்லங்கள் ஆகியவையும் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டனர். ஏதோ நடக்கப் போகிறது என்று காஷ்மீரில் உள்ள எல்லோருக்கும் அப்போது தெரிந்துவிட்டது. ஆனால் நான் பேசிய ஒரு டஜன் பேரும் டெல்லி இந்த அளவுக்குச் சென்று, ஒருதலைபட்சமாக அரசியல் சாசனத்தை ரத்து செய்யும் என எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர். யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. தகவல் தொடர்புகள் முடக்கம் காரணமாக, நம்பகமான தகவல்கள் எதையும் பெற முடியவில்லை. வாய் மொழியாக பரவும் தகவல்கள்தான் செய்தியாக உள்ளன. ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஸ்ரீநகரிலும், மற்ற பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் மீது கற்கள் வீசும் போராட்டங்கள் தினமும் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் விரட்டிய போது ஆற்றில் குதித்த ஓர் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். ஆனால், காஷ்மீரில் எல்லாமே நன்றாக இருப்பதைப் போன்ற எண்ணத்தை உருவாக்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “தீவிரவாதத்தின் மையம்” என்று இந்திய ஊடகங்களால் குறிப்பிடப்படும் ஷோபியான் நகரின் தெருக்களில் சில ஆண்களுடன் அவர் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் காட்சிகள் புதன்கிழமையன்று சில செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. மிகவும் மோசமான பகுதிகளிலும் கூட இந்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது, அமைதி நிலவுகிறது என்று உலகிற்குக் காட்டுவதற்கான முயற்சி அது. ஆனால், அது வெறும் நாடகம் என்று காஷ்மீரி மக்கள் கூறுகின்றனர். “மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால், ஊரடங்கு எதற்கு? எதற்காக தகவல் தொடர்பை முடக்கி வைக்க வேண்டும்?” என்று கேட்கிறார் ரிஸ்வான் மாலிக். ஸ்ரீநகரின் ஒவ்வொரு பகுதியிலும் – வீடுகளில், தெருக்களில், பதற்றம் நிறைந்த பழைய நகரப் பகுதிகளில் – இதே கேள்விகள்தான் எதிரொலிக்கின்றன. புல்வாமா மாவட்டத்திலும் இதே நிலைதான். கடந்த பிப்ரவரி மாதம் அங்கு நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்தப் பகுதி வழியாக நான் காரில் சென்றபோது, அங்கே குழுக்களாக சாலையோரம் நடந்து சென்றவர்கள் அல்லது வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள், என்னிடம் பேசுவதற்காக நிறுத்தச் சொன்னார்கள். காஷ்மீர் மக்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்றும், தங்களுடைய கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். எவ்வளவு கோபத்தில் இருக்கிறோம் என்றும், ரத்தம் சிந்தும் போராட்டத்தைத் தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.
“இந்த சமயத்தில் காஷ்மீர் முற்றுகைக்கு ஆளாகியுள்ளது. அது விலக்கப்பட்ட உடனே பிரச்சினை தொடங்கிவிடும்” என்று புல்வாமாவில் வசிக்கும் வழக்கறிஞர் ஜாஹித் உசேன் டார் கூறினார். “அரசியல் மற்றும் பிரிவினைவாதத் தலைவர்கள் தடுப்புக் காவல் அல்லது வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும், போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவிப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். காஷ்மீரில் இதுவரை அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பதால், அரசின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாக அர்த்தமாகிறது என்று இந்திய ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் நிலைமை கொதிப்பாக இருப்பதை நான் பார்க்க முடிந்தது. இந்திய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் நான் அவ்வப்போது பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது காணப்படும் கோபமும், எதிர்ப்பும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கிறது. அரசு தனது உத்தரவை வாபஸ் பெற்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் அதைத் தவிர வேறு எதையும் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் இதுவரை பிரதமர் நரேந்திர மோதியின் அரசு தான் எடுத்த முடிவுகளை திரும்பப் பெற்றதில்லை என்பது தெரிந்த விஷயம். இதனால் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
சர்ச்சைக்குரிய தனது முடிவை, வியாழக்கிழமை மோதி நியாயப்படுத்தியுள்ளார். இது “புதிய யுகத்தின் தொடக்கம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கு அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனாலும் இங்குள்ள பலர் விட்டுத் தர தயாராக இல்லை. அது காஷ்மீரிகள் அல்லது இந்தியாவுக்கு நல்லதாகத் தோன்றவில்லை. “இப்போதைய சூழ்நிலை புயலுக்கு முன்னே அமைதி என்பதைப் போல இருக்கிறது” என்று உயர்நிலைப் பள்ளி மாணவி முஸ்கான் லத்தீப் கூறினார். “சமுத்திரங்கள் அமைதியாக இருப்பதைப்போல இப்போது உள்ளது. ஆனால், கரையை சுனாமி தாக்கப் போகிறது” என்றார் அவர். இது பிபிசியின் பதிவாகும் மக்களின் பார்வைக்கு இங்கே ( Here is the BBC’s report on people’s vision)
கஷ்மீர் பள்ளதாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும் ஏரிக்கரைகளில் கார்ப்பரேட் வியாபாரிகள் ரிசார்ட்சுகளை விலைக்குவாங்கி வியாபாரமாக்குவார்கள்.. கஷ்மீர் ஆப்பிள் மரபணுமாற்றுக்கு ஆளாகும் .. பண்டிட்கள் அதிகாரமிக்கவர்களாக வலம் வருவர் மறந்தும் கஷ்மீரீகள் தங்களின் பழங்கதையை பேசக்கூடாது உண்மையில் கஷ்மீர் யாருக்கானது ..பெரியார் சொல்கிறார் கஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேற வேண்டும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் .. விடுதலையின் போது பாகிஸ்தான் சொந்த கொண்டாட எண்ணி .. ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான்ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இதனால் பயமுற்ற ஜம்மு கஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு கஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை ஒடுக்க, இந்தியா அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது. பாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு கஷ்மீரின் பகுதிகள் ஆசாத் கஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்என்று அழைக்கப்படுகிறது.. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி நிலம் இந்திய கட்டுபாட்டுக்கள் வந்த போது மன்னர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார் .. சிறப்பு பிரிவின் படி கஷ்மீரில் கஷ்மீரிகளை தவிர (பண்டிட் இஸ்லாமியர்கள்) யாரும் நிலம் வாங்க அனுமதியில்லை எந்தவொரு சட்டமும் கஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்கு பிறகே நடப்பாக்கவேண்டும் ..தனி கொடி தனி சின்னம் ..இவையெல்லாம் உள்ளடங்கிய சிறப்பு பிரிவை தான் இன்று ரத்து செய்து பிற மாநில யூனியனை போல கஷ்மீருக்கும் பொருந்தும் .. .. கஷ்மீரை போல நாகலாந்தில் 371A அஸ்ஸாமில் 371B மணிப்பூரில் 371C சிக்கிமில் 371F மிசோராம் 371 G பிரிவுகள் உண்டு நாகலாந்தில் மணிப்பூரில் அருணாச்சலத்தில் வெளி மாநிலத்தவர் நுழைய அனுமதி வேண்டும் இதிலெல்லாம் கைவைக்காத பாஜக அரசு கஷ்மீரை மட்டும் குறிவைப்பதின் பின்னணியில் மிக பெரிய வியாபார சக்தி இருக்கிறது மிக சிறந்த சுற்றுலாத்தளம் என்பதும் கவனத்தில் கொண்டால் பிடிகிட்டும் .. No debate, no discussion, no dissent, and the Constitution is changed.. விவாதமின்றி மக்களிடம் கருத்துகேட்காமல் நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூட அனுமதிக்காமல்.. கஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுகாவலில் வைத்து விட்டு அவசரகதியில் சிறப்பு பிரிவை ரத்து செய்து சர்வாதிகார சூழலை உருவாக்கியிருக்கிறது .. கஷ்மீரிகள் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக காங்கிரஸ் உட்பட மாநில கட்சிகள் என வாக்களித்து தங்களை இந்தியாவில் ஒரு அங்கமாகதான் நினைக்கிறார்கள் ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்களை உள்ளே அனுமதிக்க வேண்டி .. கஷ்மீர் நிலத்தை கூறு போடவே அன்றி இதனால் அம்மக்களுக்கு பலனில்லை .. .. இன்று திருச்சி சிவா பேசியதை போல அரசியல் அமைப்பிற்கு எதிரானது தவறான முன்னுதாரணம் சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி இந்த வழக்கு நகர்த்தபடலாம் இன்றைக்கு ஆதரிக்கிறவர்கள் உண்மையில் தங்கள் மாநில மக்களுக்கு எதிரானவர்கள் ப.சிதம்பரம் கூறியதைப்போல நாளை எல்லா மாநிலங்களுக்கு இது நடக்கும் .. அதிகபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தில் அசுர பலத்தோடு இருப்பதால் எதை வேண்டுமானும் செய்யலாம் நடத்தலாம் என்ற சர்வாதிகார போக்கு வீழ்ச்சியிலேயே முடியும் .. உலகில் பலவேறு நாடுகளின் சரித்திரங்கள் நாம் காண்கிறோம் அடக்குமுறையும் தான்தோன்றிதனமும் .. திணிப்பும் ஒற்றை கொள்கை கோட்பாடும் பிரிவினையில் தான் முடிவுற்றிருக்கிறது .. இனியும் இதுபோன்று தொடர்ந்தால் united India .. ஒருங்கிணைந்த இந்தியா சிதறுண்டு போகுமென்ற இன்றைய வைகோவின் பேச்சு மிகப்பெரிய உண்மை .. ஏரிக்கரையின் அழுகுரல்.. .. ஆலஞ்சியார்
மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைக இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன். காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைகோ
ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அதன் சட்ட சிறப்பம்சங்களை நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றி, குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது ஆளும் பாஜக நடுவண் அரசு. இதற்காக சொன்ன காரணங்கள், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத் தளமாகக் பயன்படுத்திக் கொண்டு இந்தியா மீது போர் தொடுத்துக் கொண்டே இருந்தது. அந்த பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதுதான். இது வெறுமனே மேலோட்டமாகப் பார்த்தால்…ஆமாம்ல, உண்மைதானே என்றே எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது இந்திய ஒன்றியத்தோடு இறுதியாக இணைந்த ஒரு மாநிலம். இந்தியாவோடு இணைய ஒப்புதல் அளித்து அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது, ஜம்மு காஷ்மீர் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்கள் அசையாச் சொத்துக்களை அங்கே வாங்கக் கூடாது என்பதே. இதை ஒப்புக்கொண்டே நடுவண் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு இணைத்தது. அந்த ஒப்பந்தத்தின் சான்றுகளே சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ. இன்று, நடுவண் அரசு அந்தச் சட்டப்பிரிவுகளை நீக்கியது என்பது, முதலில் தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையே நடுவண் அரசு தற்போது கிழித்தெறிந்துள்ளது என்பதே உண்மை. அதாவது நம்பிக்கையோடு இந்தியாவுடன் தங்களை ஒப்படைத்துக் கொண்ட ஒரு மாநிலத்தையும், அதன் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, தனதாக்கிக் கொண்டுள்ளது நடுவண் அரசு. இது அப்பட்டமான ஒப்பந்த மீறல். சரி…பாகிஸ்தான் பயங்கரவாதம்? ஜம்மு காஷ்மீர் என்பதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர். அடுத்தது, இந்திய எல்லையில் உள்ள தனி மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர். பாகிஸ்தான், தன் பயங்கரவாத முகாம்களை இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டை வைத்த இந்திய நடுவண் அரசுகள், அங்கே மக்களை பயங்கரவாதத்திற்கு எதிராக உருவாக்குவதற்குப் பதிலாக மக்களைத் தொடர்ந்து வாட்டி வதைத்ததுடன், இந்திய நடுவண் அரசு மீதான வெறுப்புணர்வையே தொடர்ந்து வளர்த்தெடுத்தன. சோதனைகள் என்கிற பேரிலும், பயங்கரவாத ஒழிப்பு என்கிற பேரிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் முழு வெறுப்புக்கும் ஆளானது இந்திய நடுவண் அரசு. எந்த ஒரு சாதாரண மக்களும் பயங்கரவாதத்தை விரும்பியதாக வரலாறு கிடையாது. பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களைக் காக்கும் ராணுவத்தை கடவுளர்களாக எண்ணுபவர்களே அவர்கள். ஆனால், இந்திய ராணுவத்தைக் கண்டாலே ஒவ்வொரு ஜம்மு காஷ்மீரியும் எதிரியைக் காண்பதைப்போல உணர்வுக்கு ஆளானதற்கு யார் காரணம்? தமிழ் ஈழத்தில், அமைதி காக்கப்போகிறோம் என அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை மூன்றே மூன்று ஆண்டுகளில் எப்படி தமிழ் ஈழ மக்களிடையே, உலகத்தமிழர்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தோ, அதைவிடப் பலமடங்கு சுமார் 70 ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரில் மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கிறது இந்திய ராணுவமும், நடுவண் அரசும். ஜம்மு காஷ்மீரில் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள், பயங்கரவாதிகளுக்குத் துணை போனவர்கள் என்று சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் என எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த மக்களே அங்கே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு ஆளாகியதற்கு காரணம் நமது நடுவண் அரசுகள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதேபோல, தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற சிறப்பு சட்டப்பிரிவுச் சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதும் ஜம்மு காஷ்மீர் அரசின், ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் தவறு. சரி, யூனியன் பிரதேசமாகிவிட்டதால் தற்போது இந்திய ஆளுகைக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் உருவாகாமல் தடுத்துவிடலாம், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது நடுவண் அரசு? பாகிஸ்தான் எல்லை என்பது ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, குஜராத்திலும்கூட உள்ளது. பயங்கரவாத ஊடுருவல் என்பது ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக மட்டுமல்ல இந்தியாவின் எந்த எல்லையில் இருந்தும் வர இயலாமல் நமது பாதுகாப்புப் படைகளால் தடுக்கப்படும்போது அது ஏன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இயலவில்லை? Surgical Strike, Air Strike அடித்துப் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று துவம்சம் செய்யும் நமது இந்திய அரசுக்கு…ஒரு சிறு மாநிலத்தில் மக்களிடையே ஊடுருவும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்துக் களையெடுப்பது என்ன அவ்வளவு கடினமானதா? அதுவும் 70 ஆண்டுகளாக??? இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரின் மொத்த மக்கள் தொகையே வெறும் ஒன்னேகால் கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடி. எனவே, ஜம்மு காஷ்மீரில் பாஜக நடுவண் அரசுக்குப் பிரச்சனை, பயங்கரவாதம் மட்டுமே அல்ல.
நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது சக மனிதனை மிக கீழ்த்தரமாக பேச முடிகிறது! தொட்டால் தீட்டென்று தீண்டாமையை உயர்த்தி பிடிப்பது தவறென்று அறிந்தும் சட்டரீதியாக தண்டிக்க கூடிய செயல் என்று தெரிந்தும் வெளிப்படையாக பொதுவெளியில் மேடை போட்டு பேசிவிட்டு போகமுடிகிறது உயர்ந்த ஜாதி நாங்களென மத்த மனுஷாள் எல்லாம் கீழானவர் ..மிருங்களிடம் உயர்ந்த ஜாதி இல்லையா கலப்பென்பது அசிங்கமென கதைத்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக நடமாட முடிகிறது
அவலநிலைக்கு தெரிந்தே நாமும் காரணம் ஆகிவிட்டோம்
வழக்கு பதிவு செய்ய கூட அரசு தயங்குகிற கேவலமான நிலை .. அத்திரவரதரை தரிசப்பவரை தொட்டு பிரசாதம் கொடுக்காதீரென நம்மிடம் பிச்சையெடுப்பவர் கூறுகிறார் இந்த அவலநிலைக்கு தெரிந்தே நாமும் காரணம் ஆகிவிட்டோம், இந்த ஆட்சியை விட்டுவைப்பது கூட பாவ செயல் மன்னிக்க முடியாதது தான் ஒரு கணம் நேர்மை நீதி வழியென்று பேசிக்கொண்டிராமல் அரசை வீழ்த்த வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிறது ஒவ்வொன்றாய் இழந்து வரும் சூழலில் கடைசியில் மனிதரையே தரம்தாழ்த்தி பேசும் சூழ்நிலை உருவாகி வருவது ஆபத்தானது எந்த சமூகநீதிக்காக நம் பாட்டனும் அப்பனும் போராடினானோ அந்த நிலைக்கு நம்மை தள்ளிவிட அதிமுக அரசு முயல்கிறது இனியும் பொறுப்பதென்பது அரசியல் மடமை
ஹிந்து’ என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதம்
வடநாட்டில் இதைவிட மோசமான சூழல் உருவாகி நாடு எதை நோக்கி போகிறதென்று நடுநிலையாளர்கள் கவலைக் கொள்கிறார்கள்.. ஜெமட்டோ விவகாரம் சூடுபிடித்த நிலையில் இந்நிலையில், இது தொடர்பான விவாதம் நியூஸ் 24 தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ‘ஹம் ஹிந்து’ என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதமும் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் நடுவில், ‘கலித்’ என்ற இஸ்லாமியத் தொகுப்பாளர் தோன்றி, குறிப்பிட்ட பகுதியைத் தொகுத்து வழங்கியுள்ளார் அப்போது அஜய் கௌதம், இஸ்லாமியத் தொகுப்பாளரைத் தான் பார்க்க மாட்டேன் எனக் கூறி, இரு கண்களையும் கைகளால் மூடிக்கொண்டார்
அஜய் கௌதம் செயலுக்கு பதில் அளித்துள்ள “நியூஸ் 24” தொலைக்காட்சி
இந்த செயல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இஸ்லாமியன் கையில் உணவருந்த மாட்டேன் என்ற செயலை விட கொடூரமான மனபான்மை இது அஜய் கௌதம் செயலுக்கு பதில் அளித்துள்ள “நியூஸ் 24” தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலை அனுமதித்து ஆதரவளித்து மேடை அளிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது நாம் செய்த தவறு குறிப்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மை .. பதவி ஆசை எப்படியும் ஒருநாளாவது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட முடியாதா என்ற நப்பாசை இன்று இந்த நிலைக்கு காரணம் தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேனென சர்வாதிகாரமாக செயல்படுகிற அரசு ..ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருக்கிறது காஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை படைகள் குவிக்கபட்டு அபாயகரமான சூழல் நிலவுகிறது காங்கிரஸ் எச்சரிக்கையை அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை நம் அரசியல் தலைவர்களின் பேராசைகள் ஒற்றுமையையின்மை யார் வரகூடாதென்ற தெளிவின்மை நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது சமூகநீதி பேசி வந்த தமிழகத்திலும் மெல்ல ஊடுறுவும் பாசிசம்தன் கையில் முறுக்க தொடங்கியிருக்கிறது பினாமி ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு எதை செய்தாலும்/பேசினாலும் சட்டத்தால் எதுவும் செய்திட முடியாது அதற்கான துணிவு அடிமை அரசிடமில்லை என்று எண்ணி துணிந்து செயல்படுகின்றனர் இதற்கு விரைந்து முடிவுகட்டவேண்டிய கட்டாயம் பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது .. தவறவிட்டால் காலம் மன்னிக்காது .. இந்த நேரத்தில் கலைஞர் எனும் ஒற்றை மனிதனை எண்ணி வியக்கிறேன் .. தனியொருவனாய் படை நடத்தி பாசிசத்தை நெருங்கவிடமால் செய்ய பேராளுமையை எண்ணும் போது விழிகளில் நீர் கோர்க்கிறது .. #பெருந்தலைவ.. .. #பெருங்காவலன்_கலைஞர்.. .. ஆலஞ்சியார்
-திமுக வின் NIA ஆதரவு-திமுகவே அசந்து போகுமளவு புதிய விளக்கம் கொடுத்த ஜனாப் ஜவாஹிருல்லா. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட மமக தலைவர் ஜவாஹிருல்லா திமுகவின் NIA ஆதரவு நிலைபாட்டிற்கு புதிதாக விளக்கமளித்துள்ளார்
அதில் நெரியாரளர் திமுக NIAவை ஆதரித்து UAPA விற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது திமுகவின் இரட்டை வேடமா இது? என்று கேட்டபோது, இல்லை, இல்லை, திமுக உறுப்பினர்கள் “கவனக்குறைவாக” NIAவுக்கை ஆதரவாக வாக்களித்துவிட்டார்கள் என திமுகவே கூறாத ஒரு புதிய விளக்கத்தை கூறியுள்ளார். மேலும் மான்புமிகு தளபதி மு.க ஸ்டாலினை ( ஜவாஹிருல்லா இப்படித்தான் கூறினார்) சந்தித்து NIA வின் விளைவுகளை பற்றி விரிவாக பேசியுள்ளோம்,அதை ஸ்டாலினும் எதிர்ப்பதாக கூறியுள்ளார் என்றும் கூறினார் By Media today
மோடியால் இந்தியா ஏமாந்த கதை-மக்களுக்கு பட்டை நாமம்
-மோடியால் இந்தியா ஏமாந்த கதை முன்னது போலி வாக்குறுதி, பின்னது போலி தேசிய வாதம் மொத்தத்தில் மக்களுக்கு பட்டை நாமம் கடந்த 2014ம் ஆண்டில் போலியான வாக்குறுதிகளிலும், 2019ம் ஆண்டில் போலியான பெருமையிலும் இந்தியா ஏமாந்தது என்று கூறியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிரனாப் பர்தன் 2019ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி அடைந்த வெற்றி என்பது நிச்சயம் ஒரு சாதனைதான் தனிப்பட்ட மனிதர் ஒருவரின் பிரச்சார யுக்தி மற்றும் பேச்சுத்திறன் (அவ்வப்போது விஷத்தை தோய்த்துப் பேசுவது) ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி என்றே எடுத்துக்கொண்டாலும், அவற்றில் வேறுபல துணை காரணிகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் மோடிக்கு இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவானது, மற்ற தலைவர்களின் பிரச்சாரம் பெற்ற முக்கியத்துவம் மற்றும் கவனத்தைக் காட்டிலும், அவரின் பிரச்சாரம் மிக அதிக கவனமும் விளம்பரமும் பெற உதவியது. மேலும், பல பிரபலமான பத்திரிகைகளை தமக்கு சாதகமாக மாற்றி வைத்திருந்ததால், அவர்கள் மோடியிடம் எந்தவித கடினமான கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து காப்பாற்றினர். மேலும், தொடர்ந்து ஊழலற்ற மனிதராகவே சித்தரிக்கப்பட்டார் மோடி அவரின் ஆட்சியில் இந்திய நன்மதிப்பு சர்வதேச அளவில் மிகவும் குறைந்தபோதும், வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமை ஓங்குகிறது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு மோடியால் வெற்றிபெற முடிந்தது
மோடி ஆட்சியில் மோசமான வேலைவாய்ப்பின்மை
அவரின் ஆட்சியில் மோசமான வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில்துறை முடக்கம், வேளாண்மை சீர்கேடு போன்ற ஏராளமான அவலங்கள் நிறைந்திருந்தும், மக்களை தேசியவாதத்தின்பால் திருப்பி ஏமாற்ற முடிந்தது. இந்திய அரசியல் சாசனத்தை புனித நூல் என்று கூறிய மோடி, அதை ஒருபோதும் மதித்ததில்லை. தனது முந்தைய 5 ஆண்டுகால ஆட்சியில் தொடர்ந்து அதனை பலவீனப்படுத்தவே செய்தார் கடைசியாக, பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் நடத்தியதாக சொல்லப்படும் புலவாமா தாக்குதல் மோடிக்கு பெரியளவில் கைகொடுத்தது. ஆக, கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா போலி வாக்குறுதிகளால் மோ(ச)டியால் ஏமாந்தது என்றால், 2019ம் ஆண்டில் போலி தேசியவாதத்தால் ஏமாந்தது என்றுள்ளார் கட்டுரையாளர்
இந்தியாவின் ஜனநாயகத்தை பாசிச பாம்பு, தேர்தல் என்ற போர்வையில் விழுங்கிய நாள் 2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர் லோக்சபா தேர்தல் தொடர்பாக 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் நடந்த ஆபத்தான முரண்பாடுகள் குறித்து 20 பக்க விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தேர்தலின் போது பாஜகவினரின் எந்த ஒரு தேர்தல் நடத்தை விதி மீறல்களையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்களைப் பற்றி தேர்தல் ஆணையம் கவலைப்படவே இல்லை. லோக்சபா தேர்தல் தேதியும் கூட மோடிக்காகவே தாமதமாக வெளியிடப்பட்டது மோடி நலத்திட்ட உதவிகளை அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருந்தது அபத்தமானதாகும். தேர்தல் ஆணையத்தின் உயரிய மரபுகள் சரிந்து போனது பெரும் கவலைக்குரியது. தேர்தலை 3 மாதங்களாக நடத்திய மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சி சார்புடையதாக தேர்தல் ஆணையம் தம்மை வெளிப்படுத்திக் கொண்டது. பிரதமர் மோடி மீதான எந்த ஒரு தேர்தல் புகார் குறித்தும் விசாரணையே நடத்தவில்லை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு புகார் வந்த போதும் மோடி தேர்தல் விதிகளை மீறவே இல்லை என நற்சான்று பத்திரம்தான் கொடுத்தது தேர்தல் ஆணையம். சட்டவிரோத குடியேறிகளை வங்கக் கடலில் தூக்கி எறிவோம் என பாஜக தலைவர் அமித்ஷா பேசியதை தேர்தல் நடத்தை விதி மீறலாக கருதவில்லை தேர்தல் ஆணையம் குட்டு வைத்த பின்னரே தமக்கான அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதற்காக முகமது மோசின் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது அதே நேரத்தில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது ஹெலிகாப்டர்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விஷயங்கள் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் நடுநிலையாக இல்லை என்பதும், அவற்றை எப்படி பிஜேபி கடந்த ஐந்தாண்டுகளில் சிதைத்தது என்பதும்
ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ள கவலைக்குரிய விஷயங்கள்!
EVM, EC இவ்விரண்டின் முழுமையான ஒத்துழைப்புடன் பிஜேபி தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான தில்லுமுல்லுகளை வஞ்சகமாக செய்தே தேர்தலில் வென்றது! அவற்றை ஈடு செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன் சொந்த தொகுதிகளில்கூட வெற்றிக்கு உண்மையாக, எச்சரிக்கையாக உழைக்கவே இல்லை என்ற அலட்சியந்தான் காங்கிரஸின் படுதோல்விக்கு அடித்தள காரணம்! “ஒரு கட்டத்தில் தனித்து விடப்பட்டேன்” என்றும், ஒற்றை ஆளாய் பிஜேபியின் குண்டர்களையும், அதன் பணபலத்தையும், மதவெறி அரசியலையும், நடுநிலை தவறிய தேர்தல் ஆணையம், நீதிமன்றம்,மீடியா போன்றவற்றை எதிர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்றும் சகிக்கவே இயலா வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்! அவர் கூறியுள்ள அனைத்துமே மறுக்கவே முடியாத உண்மை! காங்கிரசில் இருந்துக்கொண்டு, பதவி சுகம் அனுபவித்துக்கொண்டே காங்கிரஸ் வெற்றிக்கு சிறிதும் உழைக்காமல் இருந்த மூத்த தலைவர்களால் இன்று தேசம் மற்றுமோர் ஐந்தாண்டுகளுக்கு RSS ன் நிர்வாகத்திற்குள் சிக்கிக்கொண்டது! இன்றைய தலைமுறை, ஒரு சிறந்த இளைய தலைவரை, நேர்மையான மனிதரை தேசம் இழந்துவிட்டது!
ராகுல் காந்தி ராஜினாமா அடிப்படை காரணம்
இன்றைய இந்த அவல நிலைக்கு இதுதான் அடிப்படை காரணம் தேசம் சுதந்திரமடைந்த அந்த நொடியிலிருந்தே காங்கிரஸ் கட்சியிலும், நேருவின் ஆட்சியிலும் RSS தனது நெடுங்காலத் திட்டமிட்டே ஏராளமான இந்துத்துவாவினர்களை வஞ்சகத் தந்திரமாகத் திணித்து விட்டது! அதுவே இந்திராவின் ஆளுமையிலும் திணிப்புக்கள் தொடர்ந்தது! இன்றும் திணிப்புக்கள் தொடர்கிறது! தேசமக்களால் சட்டென அடையாளமே தெரிந்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு… காங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிலும் ஆன்மீக இயக்கங்களிலும் கோடிக்கணக்கான RSS பயங்கரவாத *கைக்கூலிகள் இன்று திணிக்கப்பட்டு விட்டனர்! ஹிட்லர் முஸோலினிகளைவிட கேவலமான கொடூரர்களான இன்றைய RSS ன் தலைமை நிர்வாகிகள் நரேந்திர மோடி, அமித் ஷா இவர்களால் தினந்தோரும், அயோக்கியத்தனங்களில் வெகுசிறப்பாக பயிற்சியளிக்கப்படுகின்றனர் இந்த கூலிப்படையினர்! அநியாய அட்டூழியக் கொலைகள் புரிவதில் இன்பம்காணும் படுபயங்கரமான இன்னொரு இஸ்ரேலியர் கூட்டம் RSS! நீதி வழுவாத வெகுசில நீதிபதிகளால் நேர்மையாக அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வாய்மையான தீர்ப்புக்களால் தேசத்தில் இன்று மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியுங்கூட வெகுவிரைவில் உருக்குலைந்துப் போய்விடும் அபாயம் இருக்கு! மாபெரும் புரட்சியை நோக்கி நம் குடியரசுத்தேசம் அதிவேகமாகச் சென்றுக்கொண்டிருக்கிறது உலகிலேயே மிகப்பெரிய நம் குடியரசுத்தேசம்! #Mohammed#Ghouse அவர்களின் பதிவு ..
ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள்
ஒற்றுமையில்லா தமிழக முஸ்லீம்கள் இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள் முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள் முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு எனக்கு தெரிந்து 20 மேற்பட்ட அமைப்புகள் செயல்படுகின்றன தமுமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஹைதர் அலி நீக்கபட்டார் இன்னுமொரு அமைப்பு உருவாகலாம் நீ சரியல்ல நானே சரி என்பதில் தொடங்கி தங்களுக்குள் தெருச்சண்டையிட்டுக் கொள்கிற சராசரியாக தான் அமைப்புகள் எல்லாம் அமைப்புகளும் அரசியல் செய்கின்றன அரசியல் அறியாமலேயே ஒரு சின்ன விடயம் கிடைத்தால் போதும் அதை நானே முன்னெடுப்பேன் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் பலன் சூழியம் இவர்களால் இஸ்லாமிய சமூகம் அடைந்த பயன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை.. மாறாக சமூகம் அடைந்த பின்னடைவே அதிகம் ஒற்றுமையில்லாமல் இருப்பதை அரசியல் கட்சிகள் திமுக உட்பட தங்கள் நலனுக்காக பயன்படுத்தும் அவலம்தான் நடக்கிறது தமிழக முஸ்லிம்கள் அரசின் சலுகைகளைப் பெற லெப்பை என அரசில் பதிவு செய்துக்கொள்வார்கள் மரைக்காயர் ராவுத்தர், போன்றவர்கள் கூட தங்களை லெப்பை என பள்ளிகளில் பதிவு செய்துக்கொள்வது வழக்கம் (லெப்பை) பிரிவினர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் வழங்கியது .. திராவிட ஆட்சி தமிழகத்தில் வந்த பிறகுதான் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பிரிவினரையும் #BC ல் அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார் ஒருவகையில் எல்லோரையும் ஒரே நிழலில் கொண்டுவந்தது கூட திராவிட ஆட்சிதான் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போதுமானதாக இல்லை இன்னும் நிறைய உரிமைகள் தரப்படாமலேயே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் இதுவரை தமிழக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் எல்லா உரிமை (சலுகை) களும் இடஒதுக்கீடு உட்பட அனைத்தும் கலைஞர் செய்து தந்தது என்பதை..மறுக்கவோ மறைக்கவோ முடியாது ன்னும் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது வழங்கப்படாமல் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை தான் முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லாமல் அது சாத்தியப்படாது.. முஸ்லிகள் ஒற்றுமை என்பது இன்றைய சூழலில் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ..??? தமிழகத்தில் மற்ற மதத்தவர்களுக்கு ஒன்றிரண்டு அமைப்புகள் தான் இருக்கிறது. ஆனால் அவையாவும் பிரச்சனைகளை உருவாக்குவதே இல்லை மாறாக மதப்பிரச்சனைகளில் தங்கள் வேற்றுமையை மறக்கிறார்கள் தாய்சபை என அழைக்கப்படும் முஸ்லிம்லீக்கில் கூட இவர்கள் இணைய மாட்டார்கள் காரணம் தலைமையை குறைச்சொல்வார்கள் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை முன்னெடுக்கிறதென்பார்கள் தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை கலையாதவரை இங்கே யார் பெரியவன் என்கிற. யார் தலைவர் என்கிற நிலை மாறாத வரை.. எதுவும் #சாத்தியமில்லைஆலஞ்சியார்
அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர் அப்பலோவில் ஆதித்தனாரை பார்க்க சென்ற ஜெயலலிதா வை மேடம் இது ஐசியு இங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்ன டாக்டர் பெயர் Dr. கருணாநிதி என்ற பெயர் காரணத்தினால் அவர் மறுநாள் புழல் சிறைவாசியானார் எவ்வளவு அகம்பாவம், காழ்ப்புணர்ச்சியின் மொத்த வியாபாரி அகம்பாவ ஜெயலலிதா எங்கே? நடுஇரவில் வயதான ஒரு முன்னாள் முதல்வரை அவரது மூப்பை பாராமல் அவரை இழுத்துச் சென்ற முகமத் அலி, ஜார்ஜ், முத்துக்கருப்பன் போன்ற உயர் மட்ட காவலர்களை 5 ஆண்டு கழித்து 2006ல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் பழிக்கு பழி என எதுவுமே செய்யாத கலைஞர் எங்கே?
இதுப்பற்றி அவரிடம் கேட்ட போது அவர்கள் என்ன செய்வாங்க? அவங்க செய்யச் சொன்னதை இவர்கள் செய்தார்கள்’ என்று பெருந்தன்மையோடு நடந்து கொண்டதை வரலாறு போற்றும் திருவாரூர் சிறிய பள்ளியில் படித்தாலும், சென்னையின் ஆகச் சிறந்த சர்ச் பார்க்கில் படித்தாலும், ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில்(சில நாட்கள்) படித்திருந்தாலும், எதை மனதில் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் மெய்யான, தரமான கல்வி. சங்கு சுட்டாலும் நிறம் மாறாது. மேன்மக்கள் மேன்மக்களே!
ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் எழுத்தாளர் டான் அசோக்
ப ஜ க நாம் தமிழர் கட்சி இரண்டுமே ஒன்றுதான் ஒற்றுமையை விளக்குகிறார் எழுத்தாளர் டான் அசோக் சிறுவயதில் அண்ணன் எம்.ஜி.ஆரையும் தம்பி எம்.ஜி.ஆரையும் நம்பியார் பிரித்துவிடுவார். அண்ணன் எம்.ஜி.ஆர்தான் தனது எதிரி என தம்பி எம்.ஜி.ஆர் நினைத்துக் கொண்டிருப்பார் சண்டை எல்லாம் கூட போடுவார்கள். ரெண்டு பேரும் வேறு வேறு மேனரிசங்கள் செய்வார்கள். ஒருவருக்கு கன்னத்தில் ‘மரு’ இருக்கும், இன்னொருவருக்கு இருக்காது ஒருவர் கதாநாயகியின் பைஷப்ஸை மசாஜ் செய்தபடியே ‘க்யூட்டாக’ லவ் பண்ணுவார். இன்னொருவருக்கோ காதல் என்றாலே பிடிக்காது. இப்படி ஏதேதோ வித்தியாசம் காட்ட ரொம்ப கடுமையாக முயற்சிப்பார்கள் ஆனால் நமக்கோ ரெண்டுமே எம்.ஜி.ஆர்தான் என்றும், கடைசியில் எப்படியும் சேரத்தான் போகிறார்கள் என்பதும் அவர்களின் முகரைகளைப் பார்த்த அடுத்த கணமே தெரிந்துவிடும். இருந்தாலும், “என்னதான் செய்றாய்ங்கனு பார்ப்போமே,” என பொறுமையாக காத்திருப்போம் திரையில் உள்ள எம்.ஜி.ஆர்களுக்கு கடைசியில்தான் தாங்கள் வேறுவேறல்ல, ஒரே வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் என்று தெரியும். உடனே, “அண்ணே தம்பி அண்ணே ” என கண்ணீருடன் கட்டித்தழுவிக் கொள்வார்கள் பாஜக சங்கிகளும், நாம் தமிழர் தம்பிகளும் அப்படித்தான். தாங்கள் வேறுவேறு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றுதான் என நமக்கு முதலில் இருந்தே தெரிந்தாலும், அவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளான பெரியார் எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, மும்மொழி ஆதரவு, நுழைவுத்தேர்வு ஆதரவு என எவ்வளவுதான் பல சான்றுகளுடன் விளக்கிச் சொன்னாலும் அவர்களில் சிலர் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் சிலருக்கு பொசுக்கென்று கோபம் கூட வருகிறது. ஆனால் இன்றுகூட பாருங்கள், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, “திராவிடம்” எனப் பேசியவுடன் இரண்டே இரண்டே தரப்புக்குதான் அடிவயிற்றில் அல்சர் ஏற்படுகிறது ஒன்று பாஜக. இன்னொன்று நாம் தமிழர். இப்படி நாம் பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆனால் என்ன, நாங்கள் ரெண்டு பேரும் ஒன்று இல்லை என எம்.ஜி.ஆர்களைப் போலவே சாதிப்பார்கள். சரி விடுங்கள் எப்படியும் திரைக்கதை முடியும்போது, “அண்ணே… தம்பி… அண்ணே…” என கட்டிக்கொண்டுதானே ஆக வேண்டும் அப்போது இருக்கிறது கச்சேரி! –டான் அசோக் ஜூன் 30, 2019
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு | ஏன் அதை எதிர்க்கிறார்கள்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது ஏன் அதை எதிர்க்கிறார்கள்? மத்திய அரசு கொண்டுவரும் எல்லா நல்ல திட்டங்களையும் எதிர்ப்பது ஏற்புடையதல்ல! இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருந்தால் நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்று கேள்வி எழுப்புகிறது சென்னை உயர்நீதிமன்றம்! இப்படித்தான் ஆட்சியாளர்களும் கூறுகிறார்கள்! எல்லா திட்டங்களையும் மக்கள் கண்மூடித்தனமாக எதிர்ப்பதில்லை உதாரணமாக சேது சமுத்திர திட்டத்தை மக்கள் எதிர்த்தார்களா? மதவாதிகள்தான் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதை எதிர்த்தார்கள்! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை எதிர்த்தார்களா? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்தார்களா இல்லையே? எல்லோருக்கும் வீடு கழிவறை என்றார்கள் அதை யாருமே எதிர்க்கவில்லையே? மாவட்டத்திற்கு 10 தொழிற்சாலைகளை தொடங்கச் சொல்லுங்கள் யாரும் எதிர்க்கப்போவதில்லை! இன்னும் பத்து மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவ மனைகளை தொடங்குங்கள் யாருமே எதிர்க்க மாட்டார்கள்! எது நல்லது எது தங்களுக்கு தீங்கானது என்பதை மக்கள் பகுத்தாய்ந்துதான் முடிவெடுக்கிறார்கள்! நீதிமன்றங்கள் அரசின் தவறான மக்கள்விரோத கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் மன்றங்களாக மாறிவிடக்கூடாது என்பதே நமது கவலையாகும்!
பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை
கடந்தமேமாதம் 11ஆம் தேதி அன்று பெங்களூரில் உள்ள ஆர்டி நகரில் உள்ள பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்கின்ற 38 வயது நபரை கைது செய்தது காவல்துறை பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் சாஜித் கான் என்பவரால் நடத்தப்படும் என்கின்ற கோணத்தில் விசாரணை செய்தது இது ஒருபுறமிருக்க பெங்களூருவில் உள்ள செய்தி மற்றும் காணொளி ஊடகங்கள் மேமாதம் 6 ஆம் தேதி மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து ஒரு செய்தியை வெளியிட்டது தீவிரவாதி ஒருவர் பெங்களூருவில் ஊடுருவி உள்ளார் என்றும் ஒரு கன்னட தொலைக்காட்சி செய்தி வெளியிட மற்றொரு கன்னட தொலைக்காட்சியோ பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு முஸ்லின் வரும்பொழுது மெட்டல் டிடெக்டர் பீப் சவுண்ட் ஒளியில் வெளியிட்டது என்றும் அவருக்குப் பின்னால் வரும் நபர் அவருடைய உதவியாளர் என்றும் இந்த காணொளி நிகழ்வுகள் காட்டி பெங்களூருவிற்கு மிகப் பெரிய ஆபத்து வந்து விட்டதாகவும் செய்திகளை வெளியிட்டது இவர்கள் இருவரும் முஸ்லீம் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றும் அடைமொழியிட்டு செய்திகளை வெளியிட்டது அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர் இடம் தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும் தன்னை வெடிகுண்டோடு உள்ளே விடுமாறும் அந்த முஸ்லிம் பேரம் பேசியதாகவும் இந்த தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன இந்த தகவல்களை கேட்டு யார் அந்த தீவிரவாதி என்று தேடி அலைந்த காவல்துறையினர் ஒரு மசூதியின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்பவரை கைது செய்து இரண்டு நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தியது அதில் தெரிந்த உண்மை இதுதான் சாஜித் கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன் ஜூன் மாவட்டத்தை சேர்ந்தவர் அவர் ஒரு விவசாயக் கூலி மூன்று ஆண்டுகளாக ரமலான் மாதம் வந்து விட்டால் பெங்களூருவிற்கு வந்து அங்கு உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதைக் கொண்டு தன்னுடைய குடும்பத்தின் உடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மிகக் கொடிய வறுமையில் இருக்கக் கூடியவர்கள் என்றும் தான் பிச்சை எடுத்து சேர்த்த 5 ரூபாய் நாணயங்கள் 150 ரூபாய் வரை இருக்கும் அதை ஒரு துணியில் போட்டு கட்டி ஹன் இடுப்பில் முடிந்திருந்ததாகவும் அதனால் தான் பீப் சந்தம் கேட்டது என்பதை அவரின் விளக்கிச் சொல்ல உண்மையை அறிந்து அவரை விடுவித்தது காவல்துறை இதை விட பெரிய கொடுமை அவரின் உதவியாளர் என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டவர் ரியாஸ் அகமது என்பவர் அவர் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் நகரில் ரோட்டோர வியாபாரியாக தன்னை தீவிரவாதி என்று வரும் செய்திகளைப் பார்த்து காவல்துறையினரிடம் சென்று தன்னுடைய நிலையை அவர் விளக்கியுள்ளார் இதையும் விசாரித்து உண்மை என்று அறிந்த காவல்துறையினர் இவரையும் அனுப்பிவிட்டார்கள் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சாஜித் கான் என்பவரை சில நடுநிலை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டபோது அவர் கண்ணீர் மல்க சொன்னது நாங்கள் ஏழைகள் எங்களால் என்ன செய்ய முடியும் எங்களால் அழ மட்டும் முடியும் எங்களுடைய இரு கைகளில் ஏந்தி இறைவனிடம் முறையிட மட்டுமே முடியும் என்று சொல்லியுள்ளார் மற்றொருவரான ரியாஸ் அகமது என்பவர் சொல்கிறார் என்னை தீவிரவாதி என்று செய்தி ஊடகங்கள் சொல்லியதால் இங்கே சாமானிய மக்கள் அதை உண்மை என்று நம்பி என்னை அடித்துக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் இவர்கள் இருவரையும் எந்தவித கூச்சமும் இன்றி எந்தவித ஆதாரமும் இன்றி தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று அலறிய ஊடகங்கள் காவல்துறையினர் இவர்கள் அப்பாவிகள் என்று சொன்ன பின்னும் அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மௌனமாக வேறு ஒரு செய்திக்கு போய்விட்டன இதுதான் விபச்சார வேசி ஊடகங்கள் ஊடக பயங்கரவாதம் என்று நடுநிலைவாதிகள் சொல்லப்படுகிறது இந்திய தேசத்தில் பிச்சை எடுப்பதற்கு கூட இஸ்லாமிய சமூகம் அஞ்ச வேண்டும் போல கமல்ஹாசன் கோட்சே பற்றி சொன்னதற்காக, அவரது நாக்கை வெட்ட வேண்டும் என்றெல்லாம் பரிவாரங்கள் கூச்சல் போடுகின்றன. ஹிந்து தீவிரவாதம் என ஒன்று இருக்க முடியாது” என ஆவேசப் படுகிறார், பிரதமர் மோடி. மாலேகான் குண்டுவெடிப்பு வழக் கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரக்யா சிங், போபால் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார். இதை என்ன வெற்று சொல்வது இஸ்லாமிய சமூகம் ? என்று ஒரு போதும் சொல்லாதே ஜெய்ஹிந்த்
இவரை தெரியுமா? பாராளு மன்றத்தில் கர்ஜித்த வங்கப்புலி மகுமா மெய்த்ரா திருணாமுல் காங்கிரஸ் எம்பியான மகுமா மெய்த்ரா பாராளுமன்றத்தில் மோடி அரசை பாசிச அரசு என வர்ணித்து அதற்கான 8 காரணங்களையும் பட்டியலிட்டு பாராளுமன்றத்தையே கலங்கடித்துவிட்டார்
ஜெய்ஸ்ரீராம் கூற வற்புறுத்தி கொலை செய்யப்பட்ட அன்சாரிக்காக பாராளுமன்றத்தில் முதன் முதலில் குரல் கொடுத்ததும் இவர்தான் இந்தியா வரலாற்றில் மதவாத அரசியல் செய்யும் ஒரே ஆட்சி இதுதான் என்று சாடினார் உங்களின் தேசியவாதமும், நாட்டுப்பற்றும் முஸ்லிம்களை கொலைசெய்வதில்தான் உள்ளதா என்று வினா எழுப்பினார். வாழ்த்துக்கள் சகோதரியே Written By Media toady
கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சு
பாராளுமன்ற புது உறுப்பினர்களின் கன்னிப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரர் மேற்கு வங்காள மாநிலத்தின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற மஹூவா மொய்த்ரா இவரது பேச்சில் பேரினவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ற தலைப்பில் தற்போதைய பாஜக அரசின் பேரினவாதப் போக்கை கண்டித்தது ஆளும் கட்சியினரை அரளச் செய்தது என்பதை அவர்களின் கோஷங்கள் காட்டிக் கொடுத்தன.
அவரின் பேச்சின் சில பகுதிகள் மட்டும் இங்கே. 1. இந்தியாவில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் மத்திய அமைச்சர்களாலேயே தாங்கள் படித்த பட்டங்களுக்கான சான்றிதழ்களை காட்ட முடியாத போது, சாதாரண குடிமக்கள் இந்த நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தும் அதற்கான சான்றுகள் இல்லையென்று நாடிழந்தவர்களாக மாற்றுவது சரியா..? அதிலும் முஸ்லிம்களை மட்டும் குறி வைப்பது முறையா..? 2. நாட்டில் மதத்தின் பெயரால் கூட்டம் கூட்டமாக வந்து சிறுபான்மை மக்களை அடித்துக் கொல்வது பாஜக ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 3. ராமர் கோவிலுக்கான 2.77 ஏக்கர் நினைப்பில் ஒட்டு மொத்த 80 கோடி ஏக்கர் நிலப்பரப்பு மக்களை மறந்து விட்டீர்கள். 4. நாட்டின் ஊடகங்கள் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 5. ராணுவ சாகசங்களை அரசியலாக்குவது. 6. அரசும் மதமும் பின்னிப் பிணைந்துள்ளது. 7. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பூச்சாண்டி காட்டுவது. 8. தேர்தல் கமிஷனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது. அமெரிக்கா வெளியிட்டுள்ள பேரினவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ற பட்டியலில் இடம் பெற்ற அனைத்தும் தற்போதைய அரசுடன் ஒத்துப் போகிறது என்று முத்தாய்ப்பாக தனது பேச்சை முடித்தார். Ahmed meeran முகநூல் பக்கத்திலிருந்து….
சம்பளத்தை அதிகரிக்கா விட்டால் வரிச்சலுகை நிறுத்தப் படும் என பிரதமர் அறிவித்துள்ளார்
நெதர்லாந்தில் கடந்த ஒரு வருடத்திற்குள் மட்டும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன சம்பளத்தை அதிகரிக்கா விட்டால் வரிச்சலுகை நிறுத்தப் படும் என பிரதமர் அறிவித்துள்ளார் அதே நேரம் கடந்த பத்து வருடங்களாக சம்பளம் அதே நிலைமையில் தான் இருக்கிறது. தொழிற்சங்கங்களின் பல வருட கால போராட்டம் காரணமாக, அரசு இப்போது தான் சம்பளத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது தனியார் நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தை அதிகரிக்கா விட்டால் வரிச்சலுகை நிறுத்தப் படும் என பிரதமர் அறிவித்துள்ளார் தொழிலதிபர்களின் சங்கம் இது குறித்து “அதிர்ச்சி” தெரிவித்துள்ளது. வேலையாட்களின் சம்பளத்தை கூட்டினால் பெரிய நிறுவனங்கள் நெதர்லாந்தை விட்டு வெளியேறி, குறைவான சம்பளம் கொடுக்கும் வெளிநாட்டில் முதலிடப் பார்க்கும் என்று முதலாளிகள் அரசை மிரட்டி வருகின்றனர் Kalai Marx
Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates