Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

​குடியரசு தலைவராகிறாரா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

​குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?

இந்த செயல் ஆர் எஸ் எஸ் பிஜேபி பார்ப்பன பாசிசத்தின் உச்சம்
நாட்டின் மிக முக்கியமான குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.ஸ்.ஸ். தலைவர் மோகன் பகவத் பெயரை பரிந்துரை செய்துள்ளாராம் சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்.
வருகின்ற ஜூலை மாதத்துடன் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் ஆட்சிக்காலம் நிறைவடைகின்றது. பிரனாப் முகர்ஜி காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்து பின்னர் குடியரசு தலைவர் ஆனார்.
இதனால் பிரனாப் முகர்ஜியின் ஆட்சியின் காலம் முடிந்தவுடன் பாஜக அரசுக்கு சாதகமான ஒருவரையே குடியரசு தலைவராக நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இதில் எல்.கே. அத்வானி முதல் மோகன் பகத் பெயர் வரை பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குடியரசு தலைவர் பதவிக்கு தகுதியானவர் என சிவசேனா சஞ்சய் ரவுத் என செய்தியாளர் மத்தியில் பேசியுள்ளாராம்.

குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?
குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?

மோகன் பகத் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் தான் இந்தியாவைப்
இந்து நாடாக மாற்ற முடியும் என சஞ்சய்
ரவுத் பேசியுள்ளார் ஏற்கனவே இந்திய
என்ன ஜனநாயக நாடாகவா செயல் பட்டுவருகிறது ?
ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகத்தை ஜனாதிபதியாக நியமிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவு இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் இந்த மாதிரி முடிவுகளால் நாட்டின் வளர்ச்சியைவிட வீழ்ச்சியே இந்தியா கான வேண்டி வரும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மத்திய அரசை எச்சரிக்கிறோம் …
Written on குடியரசு தலைவராகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ?
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்…

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

Shalin Maria Lawrence :

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

சசிகலா நாற்காலி உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும்

ஜெயலலிதா பதவிக்கு வந்தவுடன் ஒரு விஷயம் மட்டும் கண்டிப்பாக செய்திருப்பார் . அது தன் அரசியல் எதிரிகளை பழிவாங்குவது . அதில் மட்டும் தான் அவர் தீவிரமாக இருந்திருப்பார் .
சொத்துக்குவிப்பும் , ஜோசிய பைத்தியக்காரத்தனங்களும் , மக்கள் நலன் புறக்கணிப்பும் 1989 ஆம் ஆண்டு சசிகலாவுடன் போயஸ் தோட்டத்தில் வந்து குடியேறிவைகள் .

தற்கொலை முயற்சிகளுக்கும் மனப்பிறவிழற்கும் பரிச்சயமான நடிகை ஜெயலலிதாவை அரசியல்வாதி ஜெயலலிதா ஆக்குகிறார் சசிகலா .
தன் alter – ego வாக சசியை பார்க்கிறார் ஜெயலலிதா .
கிடைக்காத அன்பு கிடைத்த பூரிப்பில் ஆளகிடைத்த மாநிலத்தை தோழியின் காலடியில் சமர்பிக்கிறார் ‘Iron lady ‘
1991 ஆண்டு முதல் 2016 வரை அதிமுக ஆட்சி என்ற பெயரில் நம்மை ஆண்டது இன்று ‘வேலைக்காரி’ என்று பலரால் விமர்சிக்கப்படும் சசிகலா மற்றும் அவரது குடும்பம் .
கூட்டணியாய் செய்த அனைத்து அநீதிகளுக்கு ஜெயலலிதாவின் sticker மட்டுமே ஒட்டப்படுகிறது .
புதியதாய் கிடைத்த குடும்பத்தின் அரவணைப்பில் நாடு நாசமாய்ப்போய்
கொண்டிருப்பதை மறந்து ஆழ்ந்த நித்திரையில் தள்ளப்படுகிறார் முதல்வர் .
நித்திரை தெளிந்த நேரம் எல்லாமே
முடிந்திருந்தது . திருத்தி கொள்ள நேரம் கிடைக்கவில்லை , சுதந்திரமும் கிடைக்கவில்லை .
33 வருடங்களாக நடத்தப்படும் சதுரங்க நாடகம் முடிவு பெறுகிறது .
ராணி சாய்கிறது .
Modi Magic in TN ADMK…

இந்த 33 வருடங்களாக மக்களை எலி கறி சாப்பிடவைத்ததும் , கஞ்சி தொட்டி திறப்புகளும் , சாதி கலவரங்களும் , சசி பெருமாளை பலிவாங்கியதும் , கோவனை ஜெயிலில் தள்ளியதும் , மாற்று திறனாளிகளை கொன்றதும் , நீரில் என் நகரத்தை அழித்ததற்கும் ,உயிர் காக்கும் மருத்துவமனையை சதிகூடாரமாக மாற்றியதும் இன்னும் லட்சம் ஆராஜகங்களை செய்ததும் இந்த ஒற்றை நாற்காலிக்காக என்றால் … அது உங்களுக்கு வாய்க்காமல் போகட்டும் .
Shalin
ஜெயலலிதா

'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்!' கங்கை அமரன் அனுபவக் கதை

‘முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்” என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

சசிகலா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்?
என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது.
உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்?
பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளனர். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்து விட்டார். ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், அப்படியா… நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை.
சசிகலாவை நீங்கள் எதிர்ப்பதற்கு இதுமட்டும்தான் காரணமா?
சசிகலா குடும்பத்தினர் பலரிடமிருந்து சொத்துக்களை வாங்கி குவித்து விட்டனர். இதன்பிறகும் அவர்கள் தங்களது செயல்பாட்டிலிருந்து மாறவில்லை. மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பதவி ஆசையில் சசிகலா செயல்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் பதவியில் அமர ஆசைப்படலாமா. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, கட்சியினரிடையும், மக்களிடையையும் ஆதரவை பெறாமல் முதல்வராக சசிகலா ஆசைப்படுகிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் சசிகலா பதவியேற்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். இதுபோல சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நான் மட்டுமல்ல… மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீங்கள் பா.ஜ.க.வில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா?
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் அதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஒரு அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், தேச மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமை கொண்டு இருக்கிறேன். பா.ஜ.க.வில் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.
Thanks   By Anandhavikatan

அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

 

அஞ்சு வருஷத்துல மூணு பேரு, இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள்

எங்க ஸ்டேட் கர்நாடகாவுல சிலபல வருஷம் முந்தி பீஜேப்பீ பவர்ல இருந்தாங்க. அந்த டைம்ல, எடியூரப்பா, சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டர்னு மூணு சீஎம்கள் இருந்தாங்க. அஞ்சு வருஷத்துல மூணு பேரு. இந்த மூணு பேரும் பண்ணிய கூத்துகள் பிடிக்காம, அடுத்த எலக்‌ஷனில் காங்கிரஸ் ஜெயிச்சி, சித்தராமய்யா முதல்வர் ஆனார். கடந்த மூணரை வருஷமா அவர்தான் சீ.எம். பீஜேப்பீ ரூலில் சிலபல ஆட்கள் பண்ணிய டுபாக்கூர்களும் காரணம். ஜனார்த்தன் ரெட்டி ஒரு உதாரணம்.
என்ன திருகுதாளம் போட்டாலும் டமில்நாட் போல வராது. பீஜேப்பீல வந்த மூணு பேருமேகூடப் பழுத்த அரசியல் அனுபவம் உள்ளவங்க. ஆனால் டமில்நாட்ல அதெல்லாம் தேவையில்ல போலன்னு இப்போ தெரிஞ்சிட்டதால, இவங்கல்லாம் செம்ம காண்டுல இருக்காங்க. டமில்நாட்ல சி.எம் ஆக என்னன்ன தகுதிகள் வேணும்னு யோசிச்சா, கட்டாயம் பீஹார்தான் நினைவு வரும். பீஹார் பத்தி, ட்ரெய்ன்ல ஆடு கோழியெல்லாம் ஏத்துவாங்க, மொக்க ஊர்ன்னு இப்போகூட பலரும் பேசுவாங்க. அரசியலிலும் அதேதான்.
இருந்தாலும், என்னதான் தலைகீழா தண்ணி குடிச்சாலும், அரசியலில் டமில்நாட் போல வராது. சினிமா, இலக்கியம் இந்த ரெண்டுலயும் நம்மூரு எந்த நிலைல இருக்குன்னு ஒலகத்துக்கே தெரியும். அரசியலிலும் அப்படித்தான் இருந்திச்சு. ஆனால் இலைமறை காய்மறையா. இப்போதான் வெளிப்படையா வெடிச்சி சிதறிருக்கு.
மொத்தமா எல்லாத்துலயும் ஊத்தி மூடியிருக்கும் டமில்நாட்டைப் பார்த்து, இதெல்லாம் போனமாசமே நடக்கும்னு எதிர்பார்த்தேன். அதுல ஒரு குட்டியூண்டு ஏமாற்றம்.
களப்பிரர் காலம் பத்திப் படிச்சிருப்பீங்க. இதோ அதையெல்லாம் பார்த்து அனுபவிக்கும் காலம். சுக்ஹானுபவம்.
இவண்ணம், கன்னடிக டமிலன் சென்தேள் சென்காயிரம்

சங்பரிவார கைக்கூலி தடா ரஹீம் கழன்றது காவி முகமூடி

தடா ரஹீம் சங்பரிவார கைக்கூலி  கழன்றது காவி முகமூடி
கோடாரிக்காம்பு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி வெட்டினால்தான் அந்த மரம் சாயும்.
அதுபோலத்தான் இஸ்லாமிய சமுதாயம் என்னும் மரத்தைச் சாய்க்க வெறுமனே காவிச்சூழ்ச்சிகளும் தூண்டுதல்களும் மட்டும் போதாது. அந்தச் சமூகத்தில் இருப்பவர்களையே அதற்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் என்னதான் தொண்டை கிழிய சிலை வணக்கம் இணைவைப்பு என்று போராடினாலும் விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு முஸ்லிம் பெண்கள் பூசை செய்வது போலக் காட்டி வெற்றி அடைந்து விடுவதே காவிச்சூழ்ச்சி!
பழனிபாபாவின் பெயரைப் பயன்படுத்தி இந்திய தேசிய லீக் கட்சியின் பேனரை வைத்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டு சிறைவாசிகளின் பெயரைச் சொல்லி தன்னை வளப்படுத்தி வந்து தன்னை இஸ்லாமிய போராளியைப் போல காட்டிக்கொள்ளும் தடா.ரஹீம்., உளவுத்துறை மற்றும் சங் பரிவாரத்தின் கைக்கூலியாக செயல்படுகின்றார் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? அங்குதான் சங்பரிவாரத்தின் சூழ்ச்சி வெற்றிபெற்றிருக்கின்றது. தடா ரஹீம் சங் பரிவாரம் மற்றும் இந்திய உளவுத்துறையின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்பதற்கு சில ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
#முதல்_ஆதாரம்:
இஸ்லாத்தினையும் இறைத்தூதரையும் தொடர்ந்து இன்றுவரை கொச்சைப்படுத்தி விசத்தை தூவிவரும் காவிபயங்கரவாதி கல்யாணராமனை ஒவ்வொரு சகோதரர்களும் எதிர்த்து வருகின்றார்கள். அவனுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு முஸ்லிமும் லைக் போட்டது கிடையாது. ஆனால் தன்னை ஒரு தேசியக்கட்சியின் தலைவராகக் காட்டிக் கொள்ளும் கோடாரிக்காம்பு சமுதாய துரோகி தடா ரஹீம் கல்யாணராமனின் பதிவுக்கு லைக் போடுகின்றார்.
இதைப்பார்த்து அனைவருக்குமே ஆச்சரியம். ஒருவேளை கை தவறி லைக் பட்டன் விழுந்திருக்கும் என்று அனைவருமே நினைத்தார்கள். ஏன் கல்யாணராமனுக்கு லைக் போட்டார்? என்று விவாதம் பரபரப்பாகிப் போக தேசியலீக்கில் இருக்கும் சில தொண்டர்கள் இதை அவரது பார்வைக்கு அனுப்பினார்கள். அதற்கு பதில் போட்டான் பாருங்கள், என் வீட்டு சிறுகுழந்தைகள் விளையாடும் போது கை தவறி லைக் பட்டன் விழுந்தது என்று சொல்லி மழுப்ப எனக்கென்ன பயமா? நான்தான் லைக் போட்டேன். பல நேரங்களில் கல்யாணராமனுக்கு இன்பாக்ஸில் இஸ்லாம் குறித்து(?) தகவல் கொடுப்பேன், பல கருத்துக்களை விவாதிப்பேன் என்று சொல்லி சிம்பிளாக முடித்தான் தடா ரஹீம்.
#இரண்டாவது_ஆதாரம்:
கல்யாணராமனுக்கு லைக் போட்டதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஹெச்.ராசாவின் பதிவிற்கு லைக் போட்டார் தடா ரஹீம். ஹெச்.ராசாவிற்கு ஏன் லைக் போட்டான் என்று இன்றுவரை விளக்கவில்லை. அதன் பிறகுதான் தம்பி தடா ரஹீமை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துக் கண்கானிக்க ஆரம்பித்தோம்.
#மூன்றாவது_ஆதாரம்:
சென்ற ஹஜ் பெருநாளைக்கு ஒட்டகம் அறுக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வித சிக்கலும் இல்லாமல் மிகச்சாதாரணமாக தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்ததால் அதைப் பயன்படுத்தி ஒட்டகத்தை அறுத்து விடலாம், அதன்பிறகு வழக்கு போடுவார்கள் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்களின் வழக்கறிஞர்களின் ஆலோசனைப் படி அமைதியாக இருந்தது.
தடையை மீறி ஒட்டகத்தை அறுப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல இடங்களில் பேசி வந்தது. இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் இருந்ததால் அதை மேலும் உறுதிப்படுத்த சங் பரிவார கும்பலுக்கு ஒரு இஸ்லாமிய அமைப்பின் மேல் முறையீடு தேவைப்பட்டது. அதற்கு களமிறக்கப்பட்டார் தடா ரஹீம். ஒட்டகத் தடையை நீக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்வதைப் போல செய்து தீர்ப்பை மேலும் இறுக்கமாக்கினார். ஒட்டகத்தை அறுப்பதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், கண்கானிக்க வேண்டும் எனவும், காவல்துறையினர் ஒட்டகம் அறுக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது தடா ரஹீமால் சாத்தியமானது. பிடி மேலும் இறுகியது.
#நான்காவது_ஆதாரம்:
முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் மரணத்தில் ஒரு அதீத குழப்பம் நிலவியது. பன்னீர் ஒருபுறமும், சசிகலா ஒருபுறமும் பிரிந்து நின்றார்கள். இதில் யார் காவி பயங்கரவாதிகளுக்குத் துணை போகின்றார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நம்முடைய தளத்தில் சில நிகழ்வுகளை வைத்து பன்னீர்தான் பாஜகவுடன் கைகோர்கிறார் அதற்காக சசிகலாவை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள் என்று எழுதினோம். சசிகலாவை குற்றவாளியாக்கி அதிமுகவில் இருந்து வெளியேற்றி விட்டு அதிமுகவைக் கைப்பற்ற விதவிதமான கதைகளை காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டார்கள்.
ஜெயாவை மாடியில் இருந்து தள்ளி விட்டார் சசிகலா என்றெல்லாம காவி கம்ப்யூட்டர் படைகள் கதையெழுதின. இந்த நிலையில் இதை பூதகரமாக்க ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதற்கும் தடா ரஹீம் களமிறக்கப்பட்டார். ஜெயா மரண சந்தேகத்தைத் தீர்க்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு அப்பல்லோவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி சசிகலாவை குற்றவாளி என உறுதி செய்ய தடா ரஹீமை களமிறக்கியது சங் பரிவார கும்பல்.
ஜெயா குறித்து எவ்வித சம்பந்தமும் இல்லாத தடா ரஹீமுக்கு ஏன் இந்த அக்கறை என பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஜெயாவின் அனைத்து விவகாரங்களும் நன்கு தெரிந்த திருநாவுக்கரசர் கூட ஜெயாவின் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என சொல்லியபோதும் கெடா ரஹீமை அப்பல்லோ நோக்கி திருப்பி விட்டு சசிகலாவை சாய்க்கப்பார்த்தது காவி கும்பல்.
#ஐந்தாவது_ஆதாரம்:
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை முழுக்க முழுக்க பாஜகதான் இயக்குகின்றது என அனைவரும் அறிந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தீபாதான் வர வேண்டும் என்று அண்ணன் தடா ரஹீம் அவர்கள் ஊளையிட்ட போது இன்னும் கொஞ்சம் கிழிந்தது தடா.ரஹீமின் முகமூடி. இப்போது தீபா யாரால் இயக்கப்படுகின்றார் என்பது வெளிச்சமாகி விட்ட நிலையில் இப்போதும் தீபாவை தடா ரஹீம் ஆதரிப்பது ஏனோ? சொல்லமுடியுமா?
தடா ரஹீமின் ரசிகரும் உறுப்பினருமான கப்பலாண்டி கஞ்சா அபூபக்கர் GPM இன்று வரை தீபாவை உயர்த்திப் பிடித்து அந்தப் பதிவுகளை தடா ரஹீமிற்கு டேக் செய்து விடுவதோ ஏனோ? சொல்ல முடியுமா?
#ஆறாவது_ஆதாரம்:
இதுதான் முக்கியமான ஆதாரம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையினரால் அடக்குமுறை செய்யப்பட்ட கலைக்கப்பட்டது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உண்டாக்கியது. குடியரசு தின விழாவிற்கு மெரினாவை பாதுகாக்க வேண்டியது பொதுப்பணித்துறையின் வேலை. அதனால்தான் மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த அதை திசை திருப்புவதற்காக தடியடி நடந்த பிறகு முதல்வர் பன்னீர் செல்வம், கூட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து விட்டதாக அறிக்கை வெளியிட, சொல்லி வைத்தார் போல ஹெச்.ராசா தன்னுடைய டிவிட்டில் தேசியலீக் தொண்டர் ஒசாமா பின்லேடன் படத்துடன் பைக்கில் செல்லும் காட்சியை வெளியிட்டார்.
TN05BC 3957 எண் கொண்ட வாகனத்தின் எண்ணை பரிசோதித்துப் பார்த்த போது அது ராஜி என்பவருக்கு சொந்தமனாது என சோதனையில் தெரியவந்தது. ஆனால் அதற்கு முன்னதாக அந்த வாகனத்தில் வந்தவர் தேசியலீக் தொண்டர் என்றும், அது ஜாஹீர் நாயக் தடை விவகாரத்தில் நிகழ்ந்தது என்றும் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பினார் தடா ரஹீம். ஆனால் இதில் ஏகப்பட்ட கசமுசாக்கள் நடந்து வருவதை சம்பவங்களின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.
நேற்று இரவு(28/01/2017) தந்தி தொலைக்காட்சியில் மயிலை துணை கண்கானிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் கலந்து கொண்ட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஒசாமா படம் ஒட்டிய வாகனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அது போலியான வாகனப்பதிவு என்றும், அந்த வாகனத்தில் வந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்றும் சொன்னார்.
மயிலை துணைக் கமிஷனர் அந்த வாகனப்பதிவு எண் போலி என்று சொல்கின்றார். ஆனால் அந்த வாகனத்தில் வந்தவர் என் கட்சியின் தொண்டர் என்று சொல்கிறார் தடா ரஹீம். ஒருவேளை அந்தப் படம் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இதுநாள் வரை யாருமே அந்தப் படத்தை வெளியிடாத போது எச்.ராசா எப்படி அந்தப் படத்தை வெளியிட்டார்? அவரது கைக்கு எப்படி வந்தது?
அதுவும் ஜல்லிக்கட்டில் நிகழ்ந்த தடியடியை நியாயப்படுத்தும் வகையில் இத்துனைநாள் பாதுகாக்கப்பட்ட படம் எப்படி வெளிவந்தது? இதை விசாரித்தால் திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது.
எச்.ராசாவிற்கு அந்தப் படம் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிடைத்திருந்தால் அதை அவர் அப்போதே வெளியிட்டிருப்பார். ஜாஹீர் நாயக்கை தடை செய்ய இன்னும் அது பலமாக இருந்திருக்கும்.
ஆனால் அதுபோல எதுவும் முன்னர் வெளியாகாத போது மோடிஜீயின் அரசின் தடியடியை விவகாரத்தைக் காப்பாற்ற இந்தப் படத்தை தடா ரஹீமைத் தவிர எச்.ராசாவிற்கு வேறு யாருமே அனுப்பி வைத்திருக்க வாய்ப்பேயில்லை. எச்.ராசாவுடன் தடா ரஹீம் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறார் என்பதற்கு இந்த பைக் விவகாரம் ஒரு ஆதாரம்.

தடா ரஹீம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ISIS டீ.சர்ட்டை மாட்டியிருந்த இளைஞர்களைத் தேடித்தேடி கைது செய்த காவல்துறை, ஒசாமா படம் ஒட்டிய  தடா ரஹீம்  மின் தொண்டரை கண்டு கொள்ளாமல் இருப்பதும், வண்டி ஓட்டியவர் என் தொண்டர் என்று தடா ரஹீம் சொல்வதும், யாரென்றே தெரியாது என்று காவல்துறை சொல்வதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. அதுமட்டுமின்றி தடா ரஹீம் வாக்குமூலம் கொடுத்தும் அதை காவல்துறை சட்டை செய்யாமல் இருப்பதும் காவிகளுக்கும் தடா ரஹீமிற்கும் உள்ள உறவை பலப்படுத்துகின்றது. தடா ரஹீமை இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சதக்கத்துல்லாதான் இணைத்து வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.
பணத்துக்காக எதையும் செய்யும் கொள்கையை உடைய தடா ரஹீம், இன்றைக்கு சமுதாய துரோகியாய், சமுதாயத்தை வீழ்த்தும் கோடாரிக்காம்பாய் மாறி நிற்பதை இந்தச் சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்

அஹ்மத் கபீர்.

மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

 

மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும் மெரினாவின் கடைசி நிமிடங்களைக் கடந்துவர இன்னும் இயலவில்லை. இன்னும் அந்தக் கிழிந்த கால்சட்டையைக் கழற்றாமல் அமர்ந்திருக்கிறேன். அதிகாரிகள் நடத்திய நாடகங்கள், கண்முன் வெளிப்படையாகச் செய்த சூழ்ச்சிகள், சினிமாவைவிட அதிபயங்கரமாக இருந்தன. ஓர் அதிகாரக்குரலின் கூச்சலில் விடிந்த அந்தப் பொழுதில் கண் விழிப்பதற்குள் விழுந்தது அடி. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மீண்டும் இரு அடிகள். அனைத்து இளைஞர்களும் பொதுமக்களும் கடலை நோக்கி ஓடத் தொடங்கினோம். லத்தியுடன் துரத்திக்கொண்டே வந்தனர் போலீஸ்காரர்கள். சேலைக்கட்டி ஓட முடியாமல் சில பெண்கள் தடுமாற, அவர்களை ஒரு பொம்மைப்போல் தூக்கி வீசினர் காவல் துறையினர். நான்கு திசைகளிலும் சிதறி ஓடினோம்; கடலுக்குள் இறங்கினோம்; காலில் விழுந்து மன்றாடினோம். சில மாணவர்கள் அப்படியே கடல் அலைகளுக்குள் மூழ்கினார்கள். இறந்துவிடுவார்களோ என்று பயந்து பின்வாங்கியது காக்கிச் சட்டை. அவர்களை மீட்டுவந்து மனிதச் சங்கிலி அமைத்தோம்; ‘போலீஸ் வெளியேற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தோம்; பெண்களையும் குழந்தைகளையும் எங்கள் மையத்தில் வைத்தோம்.

நிலைமை சற்றுச் சீரான பிறகு சுற்றிலும் அழுகுரல்கள், தேடல்கள். ‘தனது நண்பரின் கை முறிக்கப்பட்டு அவர் துடித்தபோதிலும்… தொடர்ந்து அடித்தனர் போலீஸார் என்றும், சில மாணவர்கள்… அவரை, தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் என்றும், அடிபட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கரு கலைந்துவிட்டது’ எனவும் அழுதுகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் இருந்தோம். கூட வந்த உறவுகள் எங்கே எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருக்க, இங்கிருந்து கலைந்துசென்ற மாணவர்களில் சிலர் பட்டினம்பாக்கம் வழியாக மெரினாவை நோக்கி ஓடிவந்தனர். அவர்களைத் தடுக்க போலீஸார் லத்திகளுடன் ஓடினர். மாணவர்களுள் சிலர், கடலில் குதித்து நீச்சல் அடித்து எங்களுடன் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள்ம் அப்படியே நின்றனர். மேலும், சிலர் விவேகானந்தர் இல்லத்தின் வலப்புறம் இருந்து ஓடிவந்தனர். இந்தத் தடியடி சம்பவத்தை அறிந்த குப்பத்து மக்களும் மீனவர்களும் துறைமுகச் சாலையின் வழியே வந்து போராட்டக் குழுவோடு இணைந்தனர். 9 மணியளவில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடிவிட்டோம். நேரம் ஆக ஆக… பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை தேடி அலைமோதினர்.
சில பெண்கள், காவல் துறையினர்களிடம் சென்று பையோ டாய்லெட்டை உபயோகிக்க அனுமதி கேட்டனர்; மறுத்துவிட்டனர். ‘அதை எடுத்துவந்து இங்கே வைத்துக்கொள்ளலாம்’ என்று எங்களுள் சிலர் முன்னேற… லத்திகளுடன் ஓடி வந்தனர் போலீஸார். வேறு வழியின்றிச் சில பெண்கள்  வயிற்றைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துகொண்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் உடனே, கடற்கரை மணலில் பெரிய குழிதோண்டி… தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்களையும் துணிப் பைகளையும் கிழித்து, கட்டைகள் வைத்து கழிப்பறை கட்டத் தொடங்கினர். இதைக் கண்ட மீனவ மக்கள், ‘நாங்க தங்குற குடிசை இருக்கு; பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துட்டோம்; இதைச் சுத்தி துணியைக் கட்டி கழிவறையா பயன்படுத்திக்கோங்க’ என்றனர். நெகிழ்ந்துவிட்டோம். தங்கள் இருப்பிடத்தைக்கூட மாணவர்களுக்காக கழிப்பறையாக மாற்றித் தந்தனர் மீனவர்கள். கழிப்பறை காட்டியதை காணொலியாகப் பதிவுசெய்தோம்.
 
 

 
 
 
அந்தக் குடிசையைச் சுற்றி நம் மாணவர்கள் நின்றுகொண்டு, எந்த போலீஸாரும் வராமல் பார்த்துக்கொண்டனர். மாணவர்களுக்காகக் கொண்டுவந்த உணவையும், நீரையும் தடுத்துநிறுத்தி போலீஸார் பிடுங்கி உண்டனர். மிச்சம் இருந்த உணவுகளைக் கழிவறையில் கொட்டினர். இந்தத் தகவல் அறிந்த மீனவர்கள், சிறிது நேரத்தில் உணவு மற்றும் நீருடன் ஒரு பெரிய லாஞ்சு போட்டுடன் அங்கு வந்தனர். கரையில் இருந்த மீனவர்கள் தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு சென்று உணவுகளை நிரப்பிவந்தனர். மேலும், இரண்டு படகுகளில் இருந்து உணவும் நீரும் வந்தது. ‘தம்பி கோட்ரஸ்ல சொல்லிட்டோம். கடனுக்கு டீசல் வாங்கிக்கொண்டு வர்றாங்க. இன்னும் எத்தனை பேருக்கு சாப்பாடு தேவைன்னு சொல்லுங்க தம்பி, எங்க புள்ளைகளுக்கு நாங்க கொண்டு வர்றோம்’ என்று குதூகலித்தனர் மீனவத் தோழர்கள். அவர்களுக்கு பதில் கூறும்முன் போலீஸார் லத்திகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர்.
மிரண்ட எங்கள் கூட்டத்தினர் அனைவரும் ஒரு வட்டமாகச் சேர்ந்தோம். குப்பத்து பாட்டி ஒருவர், ‘இங்கிட்டு வாங்க புள்ளைகளா, எங்களைத் தாண்டி உங்களை அடிக்கமாட்டாங்க’ என்று சிவப்புச் சீலையை கொடிபோல ஆட்டி பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முன்சென்று நின்றார். ஒன்றுகூடி கோஷமிட்டதனால் ஓடி வந்த காவல் துறையினர் ஒடுங்கி நின்றனர். கலைந்து செல்லச் சொல்லி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடற்கரைச் சாலையின் பின் இருந்து, கறும்புகை கிளம்பிக் கொண்டிருந்தது. பெரிய தீ விபத்து நடந்ததுபோல இருந்தது. ‘உங்கள் மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இப்போது நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்துவோம்’ என்றார் போலீஸ் உயர் அதிகாரி.
கலைந்து சென்ற நம் மாணவர்களுள் சிலர், விவேகானந்தர் இல்லத்தின் வலது புறம் இருந்த கோட்ரஸின் மாடியில் நின்றிருந்தனர். அவர்களுக்கு போன் செய்து விசாரித்ததில், காவல் துறையினர்தான் வண்டிகளுக்குத் தீ வைத்துக்கொண்டு இருக்கின்றனர். ‘நம் மாணவர்கள் யாரும் அங்கு இல்லை’ என்று கூறினர். அப்போது, திடீரென காவல் துறையினர் மீது எங்கள் கூட்டத்தில் இருந்த சிலர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இதனால், ஆவேசமான காவல் துறையினரை நாங்கள் தடுத்து நிறுத்தி, செருப்புகளையும் கற்களையும் எறிந்தவர்களைப் பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தோம். போலீஸாரும், அவர்களைச் சிரித்துக்கொண்டே அரவணைத்துக்கொண்டனர். காரணம், எங்கள் கூட்டத்துக்குள் மஃப்டியில் இருந்த போலீஸார்தான் இந்த அநாகரிகச் செயலை செய்தது. ‘எங்கள்மீது இன்னொரு முறை செருப்புகளோ பாட்டில்களோ விழுந்தால் கண்டிப்பாக தடியடி நடத்துவோம்’ என்றார் உயர் அதிகாரி. எங்கள் மீது தடியடி நடத்தியே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் இருந்து கலவரத்தைத் தூண்ட சில போலீஸார் அங்கு நின்றிருந்தனர். காவல் துறையின் இந்தச் சதியை அறிந்து அனைவரும் அப்படியே தரையில் அமர்ந்தோம். அமர்ந்தவர்களைச் சுற்றி மனிதச் சங்கிலி போட்டு அரணாக நின்றனர் சில மாணவர்கள்.

மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

மேலும், எவரும் காவல் துறையினரை நோக்காமல் கடலை நோக்கியே திரும்பி உட்கார்ந்தோம். எங்கள் கூட்டத்துக்குள் கற்களை போலீஸார் மீது வீசக் காத்திருந்த சில விஷமிகளை மாணவர்களுள் சிலர் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்களுள் சிலர், போலீஸாருடன் கைகோத்தனர். ‘வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்’ என குரல் வற்ற கத்திய போராட்டக் குழு, அவ்வளவு அழகாகவும் வழிநடத்திக் கொண்டிருந்தது. அதையும் மீறி போலீஸார் மீது எறியப்பட்ட செருப்புகளையும்… பாட்டில்களையும் நாங்கள் தடுத்தபோதிலும் போலீஸார் எங்கள் மீது தடியடி நடத்தினர். சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் தடியடி நடத்தக் கூடாது என்று தடை வாங்கி வந்தனர். எந்த ஒரு வன்முறையும் நடக்கக் கூடாது என்று அவ்வளவு உறுதியாகத் திட்டம் வகுத்தனர் மாணவர்கள். உச்சிவெயில், தண்ணீர் இல்லாததால் சில மாணவர்கள் மயங்கிவிழுந்தனர். அவர்களை தூக்கிக் கொண்டு ஓடினர், கூட்டத்தினர். தகவல் அறிந்து தண்ணீருடன் ஓடிவந்த சில மாணவர்களைத் தடுத்து, அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினர் காவல் துறையினர். எங்கள் கண்முன்னே அந்தத் தண்ணீரை… அவர்கள் பகிர்ந்து அருந்தினர். இவ்வளவு வெறியாட்டம் இங்கே நடந்துகொண்டிருக்க, சில நியூஸ் சேனல்களில் – ‘மெரினாவில் மாணவர்கள் கலைந்துசென்றனர். தற்போது தேசியக்கொடியை எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று செய்திகள் வெளியாகின. அவ்வளவு நாள் எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் அனைவரும், ‘வெளியேறுங்கள்’ என்று கூறி கைவிட்டார்கள். பிறகு லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வந்ததும்… தோழர் தியாகு மற்றும் நீதிபதிகள் வந்ததும் நடந்ததும் நாடறிந்ததே…
‘சட்டம் இயற்றப்பட்ட பிறகும்… ஏன் அங்கு அமர்ந்திருந்தீர்கள்’ என்று கேட்கும் அன்பர்களே…
நாங்கள் அவ்வளவு உறுதியாக அங்கே அமர்ந்திருந்ததற்கான காரணமும்… எங்கள் கேள்விகளும் இதுதான்…
மெரினா
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’

 
அன்று மாலை எங்களிடம் பேச வந்த நீதிபதி ஹரி பரந்தாமன், ‘சற்றுநேரத்துக்கு முன்தான் எங்களுக்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கானஅதிகாரபூர்வமான அறிக்கை வந்தது’ என்றார். ‘சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் நாங்கள் எப்படிக் கலைந்துசெல்ல முடியும்’ என்று காவல் துறையினரிடம் கேட்டதற்கு, ‘நீங்கள் செல்லவில்லை என்றால்… தடியடி நடத்துவோம்’ என்றனர். ‘சரி, மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அவகாசம் கொடுங்கள்’ என்று மன்றாடினோம். இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்திருந்தால், மக்களுக்கு அதைப் புரியவைத்து கலைந்து சென்றிருப்போம். பத்து நிமிடம்கூட அவகாசம் கொடுக்காமல் வேண்டுமென்றே அடித்துவிரட்டினார்கள், போலீஸார்.
அத்தனை மக்களும் அங்கு அமர்ந்திருக்க… கலவரம் செய்தது யார் என்று உங்களுக்குத் தெரியாதா? எந்த ஒரு வெற்றியும் இன்றி, 6 நாட்கள் வெந்துகிடந்த இந்த மாணவர்கள் எப்படி கலைந்துசெல்வர்? எங்களுக்குள் இருந்த விஷமிகளை நாங்கள் தடுத்துவிட்டோம். கலவரத்தை உண்டு பண்ணியது காவல் துறைதான் என்பதும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இன்று அந்தக் குப்பத்து மக்கள் மீதும்… மீனவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது காவல் துறை. இப்படியொரு வெறியாட்டத்தை காவல் துறையினரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
அந்த மக்களுக்கோ, கைது செய்யப்பட்ட எங்கள் மாணவர்களுக்கோ அநீதி இழைக்கப்படுமெனின்.
மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும்.
நாளை காவல் துறையினருக்கு ஓர் அநீதியெனில்கூட,
மீண்டு வர போராட்டம் நடக்கும்!’
 
Thanks Vikatan

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left