குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஒற்றை வாய் பேசாது
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையே வெள்ளத்தில் மூழ்கினாலும் குண்டிகழுவ தண்ணீரின்றி நாறினாலும் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக ஊடகங்களின்/ஊடகர்களின் ஒற்றைவிரல் நீளாது; ஒற்றை வாய் பேசாது; ஒற்றைக்குரல் கூட ஒலிக்காது. இதுதான் இதுகளின் இன்றைய லட்சணம்
ஆனால் கடந்த 25 ஆண்டு அனுபவத்தில் ஒன்றை மட்டும் சொல்லமுடியும். இதே காலகட்டங்களில் திமுக மட்டும் தமிழ்நாட்டு ஆளும்கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா ஊடகங்களும் ஊடகர்களும் சதங்கை கட்டி சதிராட்டம் ஆடி முடித்திருப்பார்கள். அதுமட்டும் உறுதியாய் சொல்லமுடியும்
தண்ணீரின்றி தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை
ஏனென்றால் ஈழத்து இழவையே தமிழ்நாட்டு திமுக கணக்கில் எழுதிய ஊடகங்களுக்கு தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை அது ஆளும்கட்சியாக இருந்திருந்தால் அதன் தலையில் சுமத்த சொல்லியா தரவேண்டும்?
எல்லோரும் அதிமுகவினரைப்பார்த்து தான் டயரை கும்பிடும் அடிமைகள் என்கிறார்கள். உண்மையில் அவர்களைவிட பெரிய அடிமைத்தனம் இருப்பது தமிழ்நாட்டு ஊடகங்களிடமும் ஊடகர்களிடமும் தான்.
இல்லாவிட்டால் ஊடகங்களை மிரட்டி எடப்பாடி பகிரங்க எச்சரிக்கைவிடுத்து இரண்டு நாட்களான பின்னும் ஒரே ஒரு ஊடகமோ, ஊடகரோ அல்லது அவர்களுக்கான அமைப்புகளோ அதை எதிர்த்து ஒற்றை போராட்டக்குரலைக்கூட எழுப்பாமல் இருப்பார்களா?
குனியச்சொன்னால் விழுந்து கும்பிடும் ஆட்கள் எங்கள் துறை ஆட்கள்.
- LR JAGADHEESAN